இடுப்பு அழற்சி நோய் என்றால் என்ன?
இடுப்பு அழற்சி நோய் (பிஐடி) என்பது நாள்பட்ட தொற்றின் காரணமாக பெண் இனப்பெருக்க உறுப்புகளிள் ஏற்படும் அழற்சி ஆகும். இந்த தொற்று பாலியல் உறுப்புகளான குழாய்கள், ஓவரிகள் மற்றும் கருப்பை ஆகியவற்றில் சேதம் ஏற்படுத்தக்கூடியது. இந்நிலைக்கு ஆரம்பக்கட்டத்திலேயே சிகிச்சையளிக்க தவறிவிட்டால், கருத்தறிப்பதில் சிரமம் கொள்தல் அல்லது சிக்கலான கர்ப்பத்தை கொண்டிருத்தல் போன்ற தீவிரமான பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கக்கூடியது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
வயிற்றின் கீழ் பகுதியில் உள்ள நாட்பட்ட மந்தமான வலி பிஐடி இருப்பதற்கான மிகுவும் பொதுவான அறிகுறிகளின் மத்தியில் ஒன்றாக இருக்கக்கூடியது. அசாதாரணமான வெஜினல் வெளியேற்றம் வலிமிகுந்ததாகவும் அல்லது பச்சை நிறத்தில் இருப்பதும் கூட, அடிக்கடி காணப்படும் அறிகுறியாகும். மாதவிடாய் ஒழுங்கின்மை, மாதவிடாய் சுழற்சிகளுக்கு இடையில் காணப்படும் லேசான இரத்தப்போக்கு மற்றும் வலிமிகுந்த மாதவிடாய் போன்ற அறிகுறிகளும் பெண்களிடத்தில் தோன்றலாம். வழக்கத்திற்கு மாறான அறிகுறிகளான குமட்டல் அல்லது வாந்தி மற்றும் பாலியல் உறவுக்கொள்ளும் போது ஏற்படும் வலி போன்றவையும் அடங்குகின்றன. பிஐடி என்பது இந்தியாவின் பெரும்பான்மையான பெண்களின் குழந்தையின்மைக்கான காரணங்களுள் ஒன்றாக இருக்கின்றது.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
கருப்பை வாய், என்பது கருப்பையின் வெளிப்புறமாக இருக்கும் வாயில், இது கருப்பை மற்றும் ஓவரிகளில் எந்த பாக்டீரியா படையெடுப்பும் ஏற்படாமல் பாதுகாக்கின்றது; இருப்பினும், பாதுகாப்பற்ற பாலியல் உறவு கொள்ளும் வழக்குகளில், கருப்பை வாயில் தொற்றுநோய் வெளிப்பாட்டிற்கான அபாயம் இருக்கின்றது, அதாவது இந்நிலை கிளமிடியா மற்றும் கோனாரீயா என அழைக்கப்படுகின்றது. இது உள் உறுப்புகளில் பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு வழிவகுப்பதோடு, இவ்வாறே அழற்சியினை உருவாக்குகிறது. மற்ற மிக பொதுவாக ஏற்படாத காரணங்களுள் அடங்குபவை சில மருத்துவ செயல்முறைக்கு உட்படுதலின் போது அதாவது எண்டோமெட்ரியல் பயாப்ஸி, கருத்தடை சாதனம் பொருத்துதல் அல்லது கருக்கலைப்பு போன்றவைகளுக்கு உட்படுவதாலும் இவ்வாறு நேரலாம்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
- உங்கள் மாதவிடாய், பாலியல் செயல்பாடுகள், நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள், இதுவரை உங்களுக்கு செய்யப்பட்ட மருத்துவ செயல்முறைகள் ஆகியவகைகளின் விரிவான வரலாற்றை வெளிக்கொணருதலே பிஐடி யை கண்டறியவதற்கான முக்கியமான அம்சங்களாக மருத்துவரால் கருதப்படுகிறது. இதன் பிறகு, இடுப்பினுள் ஏதேனும் இரத்தக்கசிவோ அல்லது வெளியேற்றம் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க இடுப்பிற்கான முழு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவைகளை தவிர, உறுப்புகளின் பொதுப்படையான நிலைகளை சோதிக்க குறிப்பிட்ட பகுதியில் ஸ்கேன் எடுக்கவும் மருத்துவர் உத்தரவிடலாம். இந்த சோதனைகளின் முடிவுக்காக காத்திருக்கும் நாட்களில், பாலியல் உறவு கொள்தலை முற்றிலும் தவிர்த்தல் அவசியம்.
- லேசான தொற்றுநோய்களுக்கு, உங்கள் மருத்துவர் ஆண்டிபயாடிக் கோர்ஸை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தலாம், இது பொதுவாக 14 நாட்களுக்கான கோர்ஸ் ஆகும். இந்த ஆண்டிபயாடிக் கோர்ஸை முழுவதுமாக உட்கொள்வதோடு சிகிச்சை முடிவடையும் வரை பாலியல் உறவிலிருந்து விலகியிருப்பது அவசியம். வலி நிவாரணிகளை பயன்படுத்துவதன் மூலம் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். இந்த செயல்முறைகளுக்கு பின்னர், மருத்துவர் அறிவுறுத்தலை நெருக்கமாக பின்தொடர்தல் அவசியம். கடுமையான தொற்றுநோய்களுக்கு, மேலும் சோதனைகள் மேற்கொள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுதல் வேண்டும்.
- இந்நிலை உட்செலுத்தக்கூடிய ஆண்டிபயாடிக்களை வழங்குவதன் மூலம் சிகிச்சை செய்யப்படுகிறது. பலருடன் பாலியல் உறவுகொள்வது அறிவுறுத்தக்கூடியது இல்லை மேலும் பாலியல் உறவு கொள்ளும் போது காண்டம்களை பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறது.