எலும்புப்புரை - Osteoporosis in Tamil

Dr. Nadheer K M (AIIMS)MBBS

February 08, 2019

September 10, 2020

எலும்புப்புரை
எலும்புப்புரை

சுருக்கம்

எலும்புப்புரை என்பது எலும்புகள் அவற்றின் அடர்த்திகளை இழப்பது மற்றும் உடையத் தொடங்கும் நிலையாகும்.எலும்பில் சிக்கல் மற்றும் பலவீணமானது ஆண்களை விட பெண்களுக்கு இது மிகவும் ஏற்படுகிறது. எலும்புப்புரைக்கான மிகவும் பொதுவான காரணங்கள் ஹார்மோன் மாற்றங்களினால் மெனோபாஸ் ஏற்படல், கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைபாடு மற்றும் பிற நோய்களின் தாக்கத்தால் எலும்புகளில் பலவீனம் ஆகியவையாகும்.  எலும்புப்புரை நோயாளிகளுக்கு ஏற்படும் மிகப்பெரிய உடல் ரீதியிலான ஆபத்துகள், காயங்கள் மற்றும் கீழே விழுவதினால் ஏற்படும் எலும்பு முறிவு போன்றவை ஆகும். எலும்புரையானது பொதுவாக நோயாளிகளின் எலும்புகள் பலவீனமடைந்தும் மற்றும் வளைந்த எலும்புகளினால் மோசமான தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது.ஹார்மோன் சிகிச்சை, உணவு ஊட்டச்சத்துகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை சிகிச்சையின் முக்கிய அம்சமாகும். இந்த நோயை முன்கூட்டியே கண்டறியப்பட்டால், எலும்புகள் மேலும் சேதமடைவததையும் மற்றும் முறிவுகளுக்கான ஆபத்துகளையும் குறைக்கப்படலாம்.

எலும்புப்புரை அறிகுறிகள் என்ன - Symptoms of Osteoporosis in Tamil

ஆரம்ப கட்டங்களில் எலும்புரையை அடையாளம் காண்பது கடினம், ஏனென்றால் அதற்கென்று எச்சரிக்கையை ஏற்படுத்தும் பொதுவான அறிகுறிகள் கிடையாது. மிகவும் பொதுவான அறிகுறிகளயே அனுபவிக்கலாம் மற்றும் தனிதன்மை வாய்ந்த வலி அல்லது மன அழுத்தம் ஆகியவற்றினால் குழப்பமடையலாம். நோய் கணிசமாக முன்னேறிய பிறகு தான் நோயாளிகள்  அதை உன்னிப்பாக கவனிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.எலும்புரையின் முக்கியமான அறிகுறிகள் பின்வருமாறு:

  • நீண்ட கால முதுகெலும்பு வலியானது, படுக்கையிலிருந்து எழுந்திருக்கும்போதே அறியப்படும். வலியானது பொதுவாக நடக்கும்போது மற்றும் நிற்கும்போது மோசமடையலாம். திடீரென, கடுமையான முதுகுவலி ஏற்படுவதை அனுபவித்திருக்கலாம், இது மற்றொரு பொதுவான அறிகுறியாகும்.சில நேரங்களில் முதுகெலும்பின் முறிவு காரணமாக கூட முதுகுவலி ஏற்படலாம், அது மிகவும் கடுமையானதாக இருக்கலாம். எனினும் இவைகள் சில நேரங்களில் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாமல் இருக்கலாம்.
  • எலும்புரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போது உடல் வளைந்து கொடுக்கும் தன்மையை இழக்கிறது. உடலை வளைத்தல், முறுக்குதல் மற்றும் நீட்டுதல் உட்பட எளிய நடவடிக்கைகளை செய்வதில் கஷ்டம் அல்லது கடுமையான வலியை ஏற்படுத்தலாம்.
  • எலும்புரையின் பொதுவான அறிகுறியாக எலும்பு முறிவுகள் உள்ளன. எலும்பு முறிவுகள், குறிப்பாக லேசாக விழுந்ததனால் மற்றும் சிறிய காயங்களினாலும் ஏற்படலாம். எலும்பு முறிவுகள் ஏற்படும் மிக பொதுவான இடங்களில் முதுகெலும்பு, இடுப்பு மற்றும் மணிக்கட்டு ஆகியவை அடங்கும். பைகளை தூக்குதல், காரில் ஏறுதல் மற்றும் இறங்குதல், குட்டையான நாற்காலியில் உட்காருவது போன்ற சாதாரண தினசரி நடவடிக்கைகள் கூட ஆபத்தாக முடியலாம். எலும்புரை காரணமாக உடல் தோற்றம் பாதிக்கப்படலாம். இந்த நோய்த்தொற்றின் விளைவாக சிலர் குனிந்து மற்றும் உயரத்தையும் இழக்க நேரிடலாம்.
  • ஒரு நபரின் எடை குறைந்து, மேல் உள்ள உடல் கீழ்நோக்கி வளைய தொடங்குவதை கவனிக்கலாம். முதுகெலும்பு வளைவின் காரணமாக உடலின் தோற்றம்  கூன் விழுந்து மற்றும் பலவீனமாக காணப்படும், அதையே டோவ்ஜெர்'ஸ் ஹம்ப் என அழைக்கப்படுகிறது.இந்த நிலையை கஃபோசஸ் என்று அழைக்கப்படுகிறது. (மேலும் படிக்க - எடை குறைப்புக்கான  உணவு திட்டம்)
  • தாடையில் உள்ள எலும்புகளின் இழப்பை எஃஸ்ரே- கதிர்கள் மூலம் காண முடியும் இது மற்றொரு பொதுவான அறிகுறியாகும்.

எலும்புப்புரை சிகிச்சை - Treatment of Osteoporosis in Tamil

எலும்புப்புரை நோய்க்கான சிகிச்சையின் பல்வேறு வகைகள் உள்ளன. எனினும், இதற்கு உகந்த சிகிச்சையில் மருத்துவ தலையீடு மற்றும் வாழ்க்கை முறையிலான மாற்றங்கள் ஆகியவை அடங்கும். மேலும் இது, பரவலாக நாற்பது வயதிற்கு மேல் முதுகு வலி, கழுத்து வலி ஏற்படுதல் சாதாரணம். இதற்கு காரணம் எலும்பு தேய்மானம் ஆகும். நோயாளியின் முழுமையான மருத்துவ வரலாற்றின் ஆய்வு மற்றும் நோயை ஏற்படுத்தும் அனைத்து காரணிகளின் பகுப்பாய்வை பொறுத்து சிகிச்சை தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, மிகவும் பொருத்தமான சிகிச்சை முறை தேர்வு செய்யப்படுகிறது.

  • ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஹார்மோன் மாற்று சிகிச்சை

ஈஸ்ட்ரோஜென் மற்றும் ஆண்ட்ரோஜென் குறைந்த அளவு கொண்டிருக்கும் மக்களுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. பாலியல் ஹார்மோன்களின் அளவை மாற்றுவதன் மூலம் மற்றும் வழக்கமான அளவுகளுக்கு மீண்டும் கொண்டுவருவதன் மூலம், எலும்பு முறிவு ஏற்படக்கூடிய ஆபத்து குறைக்கப்படலாம். மெனோபாஸ்-சின் ஆரம்ப நிலையிலுள்ள பெண்களுக்கு ஹார்மோன் மாற்று சிகிச்சையை பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எலும்புப்புரை சிகிச்சையுடன் இணைந்து, இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், ஹாட் ஃப்ளஷஸை குறைக்கவும், பாலியல் பண்புகளை பராமரிக்கவும் இது உதவுகிறது. எனினும், ஈஸ்ட்ரோஜன் சிகிச்சையானது மார்பகங்களை மென்மையாக்குவதோடு யோனி இரத்தப்போக்கயும் ஏற்படுத்தலாம். புரோஜெஸ்ட்டிரோன் இல்லாமல் ஈஸ்ட்ரோஜனை நிர்வகிப்பதற்கான இதுவரை தெரிவிக்கப்பட்ட சிக்கல்களால், ஒரு பெண்கள் நல நிபுணர் அல்லது உட்சுரப்பியல் வல்லுநரால் பரிசோதித்தப்பட்ட பின் மட்டுமே இவ்வகை சிகிச்சையானது ஆரம்பிக்கப்படுவது முக்கியம். (மேலும் படிக்க - மார்பக வலி சிகிச்சை)

  • பிஸ்ஃபோஸ்ஃபோனேட்ஸ்

இது எலும்பு முறிவுகளைத் தடுப்பதுடன், மெனோபாஸ்-சின் பிந்தைய நிலையிலுள்ள பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவை மாத்திரையாக வாய்வழி அல்லது இரத்த ஓட்டத்தில் ஊசி மூலமும் செலுத்தப்படலாம். எனினும், தொண்டை எரிச்சல், குமட்டல், விழுங்குவதில் பிரச்சனை மற்றும் அடிவயிற்றில் வலி உட்பட பல பக்க விளைவுகள் உள்ளன.

  • கால்சிட்டோனின்

மாதவிடாய் நின்ற நிலைக்கு பிறகு எலும்பு இழப்பை குறைப்பதற்காக கால்சிட்டோனின் பயன்பாடு முதன்மையாக உள்ளது. இது பொதுவாக நாசில் ட்ராப்ஸ் வடிவில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் ஈஸ்ட்ரோஜன் மாற்று சிகிச்சை போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாக பரிந்துரைக்கப்பட்ட மருந்தானது மாற்று நாசிகளில் ஸ்பிரே செய்வது மூலம் பயன்படுத்தப்படுகிறது. இது கடுமையான முதுகெலும்பு முறிவுகளின் அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கு சிறந்த சிகிச்சையாகக் காணப்படுகிறது. இந்த முறை மூலம்,சிலருக்கு, எலும்பு தாது அடர்த்தியில் குறிப்பிட்ட அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்படுகிறது. இதனால், முகத் தழும்புகள், சொறி மற்றும் இரைப்பை குடல் பிரச்சினைகள் ஆகிய பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

  • சோடியம் ஃப்ளோரைடு

இதுவே நன்கு அறியப்பட்ட எலும்புகளை வளரச் செய்யும் எலும்பு செல்களை தூண்டுகிற மற்றும் எலும்புகளை உருவாக்கும் ஒரு மருந்து வகை. சோடியம் ஃவுளூரைட்டின் சோதனை நோயாளிகளுக்கு அதிக அளவு கொடுக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோது, முதுகெலும்புகளில் உள்ள கனிம அடர்த்தி கணிசமாக அதிகரித்தது. ஆயினும் முதுக்குத் தண்டு முறிவு விகிதம் மாறாமல் இருந்தது. இது லேசான அல்லது மிதமான ஆஸ்டியோபோரோசிஸ் உடையவர்களுக்கு சிகிச்சையளிக்க சிறந்த முறை. இந்த சிகிச்சையைப் பற்றி இன்னொரு ஊக்கமளிக்கும் உண்மை என்னவென்றால், இந்த முறையில் எந்தவொரு பக்க விளைவுகளும் இல்லை. அதற்கு எதிராக என்ன நடக்கிறது என்றால் சோடியம் ஃவுளூரைடு சிகிச்சையானது இன்னும் FDA ஒப்புதலை பெறவில்லை.

  • கால்சியம்

எலும்பு வலிமைக்கு மிகவும் பிரபலமாக அறியப்பட்ட கனிமங்களில் கால்சியம் ஒன்று. உடல் அதற்கு தேவையான கால்சியத்தை தயாரிக்கத் தகுதியற்றது, ஆனால் சிறிது சிறிதாக அதை இழக்கிறது. மிகவும் தவறாமல் கால்சியம் உள்ள உணவுகளை உட்கொள்வது மிகவும் முக்கியமானது. கால்சியம் குறைபாடு ஏற்படுவது மக்கள் மத்தியில் வளர்ந்து வருகிறது. முதியோர்களிடையே அதிகரித்து வரும் கால்சியம் குறைபாட்டுக்கு பொதுவான காரணம் லாக்டோஸ் சகிப்புத்தன்மையை இல்லாமல் இருப்பதே. கால்சியம் எடுத்துக்கொள்வதால் முழு உடல் எலும்புகளின் எடையை நிலைப்படுகிறது, ஒவ்வொரு நாளும் பரிந்துரைக்கப்பட்ட அளவு கால்சியம் உட்கொள்வது எலும்பு இழப்பு விகிதத்தை குறைக்கலாம்.

  • வைட்டமின் டி

உடல் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரிக்க வைட்டமின் டி தேவைப்படுகிறது. மாதவிடாய் நின்ற பிந்தைய நிலையின் போது எலும்பு இழப்பு ஏற்படுவதால் வைட்டமின் டி பற்றாக்குறை கொண்டிருப்பவர்களுக்கு வைட்டமின் டி மருந்துகள் தேவையான அளவு பரிந்துரைக்கப்படுகிறது. அதிகப்படியான வைட்டமின் டி நுகர்வு குமட்டல், ஹைபர்கால்செமியா மற்றும் சிறுநீரக கற்கள் உள்ளிட்ட சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால் பரிந்துரைக்கப்படும் மருந்தின் அளவு கவனமாக கண்காணிக்கப்படுகிறது.

  • உடற்பயிற்சி

மருத்துவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, மேற்பார்வையின் கீழ் செய்யப்படும் உடற்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் நோயாளிகளுக்கு வலிமை பயிற்சி குறித்த உடற்பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இவற்றில் ஸஃவட்ஸ், புஷ் அப்ஸ், டம்பெல்ஸ் பயன்படுத்துதல்  மற்றும் ரெசிஸ்டெண்ட் பாண்ட்ஸ் ஆகியவை அடங்கும். உடற்பயிற்சிகள் உடலை வலுப்படுத்த உதவுவதோடு உடலை மேலும் வளைந்து கொடுக்கவும், உடல் ஒருங்கிணைப்புகளை மேம்படுத்துவதோடு எலும்பு அடர்த்தியை அதிகரிக்கவும் உதவுகிறது



மேற்கோள்கள்

  1. Khadilkar AV, Mandlik RM. Epidemiology and treatment of osteoporosis in women: an Indian perspective. Int J Womens Health. 2015; 7: 841–850. Published online 2015 Oct 19. PMID: 26527900.
  2. Stanford Health Care [Internet]. Stanford Medicine, Stanford University; Osteoporosis
  3. Lucile Packard Foundation [Internet]. Stanford Health Care, Stanford Medicine, Stanford University. Pediatric Osteoporosis.
  4. National Osteoporosis Foundation I 251 18th St. S, Suite #630 I Arlington, VA 22202 I (800) 231-4222. Osteoporosis Fast Facts.
  5. Stanford Health Care [Internet]. Stanford Medicine, Stanford University; Osteoporosis Symptoms
  6. National Institute of Arthritis and Musculoskeletal and Skin Diseases [Internet]. NIH Osteoporosis and related Bone diseases; National research center: National Institute of Health; Osteoporosis.
  7. Dobbs MB, Buckwalter J, Saltzman C. Osteoporosis: the increasing role of the orthopaedist. Iowa Orthop J. 1999;19:43-52. PMID: 10847516.
  8. Cummings SR, Rubin SM, Black D. The future of hip fractures in the United States. Numbers, costs, and potential effects of postmenopausal estrogen. Clin Orthop Relat Res. 1990 Mar;(252):163-6. PMID: 2302881.
  9. Prince RL, Smith M, Dick IM, Price RI, Webb PG, Henderson NK, Harris MM. Prevention of postmenopausal osteoporosis. A comparative study of exercise, calcium supplementation, and hormone-replacement therapy. N Engl J Med. 1991 Oct 24;325(17):1189-95. PMID: 1922205.
  10. Riggs BL, Hodgson SF, O'Fallon WM, Chao EY, Wahner HW, Muhs JM, Cedel SL, Melton LJ 3rd. Effect of fluoride treatment on the fracture rate in postmenopausal women with osteoporosis. N Engl J Med. 1990 Mar 22;322(12):802-9. PMID: 2407957.
  11. Tilyard MW, Spears GF, Thomson J, Dovey S. Treatment of postmenopausal osteoporosis with calcitriol or calcium. N Engl J Med. 1992 Feb 6;326(6):357-62. PMID: 1729617 .
  12. Health Harvard Publishing. Harvard Medical School [Internet]. Osteoporosis. Harvard University, Cambridge, Massachusetts.

எலும்புப்புரை க்கான மருந்துகள்

Medicines listed below are available for எலும்புப்புரை. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.