சுருக்கம்
பரவலாக வீரியம் மிக்க புற்று நோய்யாக அனைத்து பாலினம் மற்றும் வயது உடையவர்களுக்கு அறியப்படும் நோயாக தொண்டை புற்று நோய் அல்லது வாய்வழி புற்று நோய் உள்ளது. இதன் விளைவாக ஏற்படும் உயிரிழப்பு நடுத்தர வயதினரிடையே (29-50 வயது) மிக அதிகமாக இந்த நோயின் தாக்கங்களால் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சி கூறுகிறது. உலகளாவிய வாய்வழி புற்றுநோயியல் புள்ளிவிவரங்கள் படி, இந்தியாவில் அதிகமான புகையிலை பயன்படுத்துதல் காரணமாக முக்கிய மூன்று புற்றுநோய்களில் ஒன்றாக வாய்வழி புற்றுநோய் அறியப்படுகிறது. இருப்பினும், ஆரம்ப கால நோய் அறிகுறிகளுக்கு தகுந்த மேம்படுத்தப்பட்ட மருத்துவ அறிவியல் வழிமுறைகள் மூலம் முழுவதுமாக நோயை குணமடைய செய்ய இயலும். இந்த வாய்வழி புற்று நோய்க்கான சிகிச்சையானது, போதை பழக்கம் மாற்று சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி எனப்படும் மருந்துகள் கொண்டு செய்யும் சிகிச்சை மற்றும் வாய் புற்று நோய் அறுவை சிகிச்சைகளாகும். வாய் புற்று நோய் பற்றி மேலும் அறிய மேலும் கீழ் படிக்கவும்.