இதயத்தசையழல் - Myocarditis in Tamil

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

April 26, 2019

March 06, 2020

இதயத்தசையழல்
இதயத்தசையழல்

இதயத்தசையழல் என்றால் என்ன?

மயோகார்டியம் எனப்படும் இதயத்தசையில் ஏற்படும் அழற்சியே இதயத்தசையழல் ஆகும்.பிற இதய நோய்களைப் போல் அல்லாமல் வாழ்க்கை முறை இந்த நிலை ஏற்படுவதற்கு எந்த பங்கும் வகிப்பதில்லை. இதைத் தடுக்கும் முறையும் இதுவரை எதுவும் இல்லை.பல தருணங்களில், இந்நோய் உள்ளவர்கள் மேலும் பிரச்சினைகள் ஏற்படாமல் குணமடைகின்றனர்.அரிதாக, இதயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும். ஆனால், இது தீவிர வீக்கம் உடையவர்களுக்கு தான் ஏற்படும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

நோய்த்தொற்று ஏற்பட்டு ஓரிரு வாரங்களில் பின்வரும் அறிகுறிகள் தோன்றலாம்:

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பெரும்பாலான சமயங்களில் இதற்கான காரணங்கள் தெரியாவிட்டாலும், இந்நோய் ஏற்படுத்தும் சில தெரிந்த காரணிகள் பின்வருமாறு:

  • பொதுவான காரணங்கள்: வைரஸ்கள். எ.கா: மூச்சுமேற்சுவடு நோய்த்தொற்றுக்கு காரணமான வைரஸ்.
  • பொதுவாக சற்று குறைவாக காணப்படும் காரணங்கள்: லைம் நோய் போன்ற தொற்று நோய்கள்.
  • அரிய காரணங்கள் : கோக்கைன் பயன்படுத்துதல், பாம்புக் கடி, சிலந்திக் கடி, உலோக விஷம் போன்ற நச்சுப் பொருள்களுக்கு வெளிப்படுதல்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அறிகுறிகள் தென்படாததால், இது கண்டறியப்படுவதில்லை.அறிகுறிகள் தென்பட்டால் பின்வரும் பரிசோதனைகளை செய்து பார்க்கலாம்:

  • எலக்ட்ரோகார்டியோகிராம் (இதய மின்துடிப்புப் பதிவு) : இதயத்தின் மின்னோட்டத்தை ஆய்வு செய்ய மேற்கொள்ளப்படுகிறது.
  • எக்கோகார்டியோகிராம்: இதய வரைபடம் எடுத்து இரத்த ஓட்டத்தை கண்காணிக்க மேற்கொள்ளப்படுகிறது.
  • மார்பு எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ் - ரே) சோதனை: அமைப்பு ரீதியான மாற்றங்களைக் கண்டறிய இதயம் மற்றும் நுரையீரலின் அமைப்பு ஆய்வு செய்யப்படுகிறது.
  • இதய காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ): இதய வரைபடத்தை ஆராய்தல்.
  • இதயத் திசுப்பரிசோதனை - எப்போதாவது கண்டறிதலை உறுதிசெய்யும் பொருட்டு செய்யப்படுகிறது.

பின்வரும் சிகிச்சைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன:

  • இதய செயலிழப்பிற்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகள்.
  • குறைந்த உப்புள்ள உணவுகள்.
  • ஓய்வு.
  • வீக்கத்தைக் குறைக்கும் ஸ்டீராய்டுகள்.
  • இதயத்தசையழல் உள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்குவது உளவியல் ரீதியான ஆதரவை அளிக்க உதவுறது.



மேற்கோள்கள்

  1. Myocarditis Foundation [Internet]: Kingwood, Texas; Discover Myocarditis Causes, Symptoms, Diagnosis and Treatment.
  2. National Organization for Rare Disorders [Internet]; Myocarditis.
  3. British Heart Foundation [Internet]: London, United Kingdom; Myocarditis.
  4. Schultz JC, Hilliard AA, Cooper LT Jr, Rihal CS. Diagnosis and Treatment of Viral Myocarditis. Mayo Clin Proc. 2009 Nov;84(11):1001-9. PMID: 19880690
  5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Myocarditis.