கண்மணிவிரிப்பி என்றால் என்ன?
கண்களில் படும் ஒளிக்கு ஏற்ப, ஒளிக்கான மறிவினாயக, நமது கண்மணிகள் இருட்டில் அதிக ஒளியை அனுமதிப்பதற்கு ஏற்றவாறு விரிந்து அல்லது அகன்றும், வெளிச்சத்தில் சுருங்கவும் செய்கின்றன. கண்மணிகள் 6 மில்லி மீட்டரை விட அதிகமாக, அசாதாரணமாக விரிந்து காணப்படும் நிலையே கண்மணிவிரிப்பி எனப்படுகிறது. இதனால் ஒளியால் தூண்டப்படும் போதும், கண்மனிகள் சுருங்குவதில்லை.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- கண்மணிகளின் அளவு வெளிச்திற்கு ஏற்ப மாறாமல் விரிந்த நிலையில் வழக்கத்தை விட பெரிதாகவே இருப்பது இதன் முக்கிய அறிகுறி.
- மங்கலான பார்வை.
- கண்களைச் சுற்றியுள்ள பகுதியும், நெற்றியும் சுருங்கியது போல உணர்தல்.
- தலைவலி.
- தலைச்சுற்றல்.
- கண்களில் எரிச்சல்.
- கண்களை அசைப்பதில் சிரமம்.
- கண் இமைகள் தொய்வடைதல்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
கண்மணிவிரிப்பி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
- பெரும் அதிர்ச்சி.
- ஹிசுட்டமின் எதிர்ப்பிகள், தசை தளர்த்திகள் போன்ற மருந்துகள்.
- மருந்துகளை தவறாக பயன்படுத்துதல் மற்றும் அடிமையாகைவிடுதல்.
- கண்மணி நரம்பிழைகளில் ஏற்படும் காயம்.
- மூடிய கோண கண் அழுத்த நோய்.
- ஊமத்தை, தேவதை எக்காளம், பெல்லடோன்னா தாவர வகையைச் சேர்ந்தவைகள் போன்ற செடிகள்.
- அடிக்கடி தலைவலி/ஒற்றைத் தலைவலி ஏற்படுதல்.
- மனஅழுத்தம்.
- ஆக்சிட்டாசின் அளவு அதிகரித்தல்.
- மண்டையோடு நரம்புகள் பழுதடைதல், மூளை காயங்கள் மற்றும் மூளைக்கு அதிகபடியான அழுத்தம் ஏற்படுதல்
- தொற்று நோய் அல்லது கண்களில் ஏற்படும் காயம்.
- நீரிழிவு நோய்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
நோய் கண்டறிதல்:
- நோயாளியின் உடல் நல போக்கையும், உட்கொண்ட மருந்துகளையும் வைத்து காரணங்களைக் கண்டு கொள்ளுதல்.
- அடிக்கடி வெளிச்சத்தில் கண்மணிகள் விரிவடைதல் போன்ற அறுகுறிகளை கண்டறிதல்.
- பார்வைத் திறன் மற்றும் கண் அசைவுகளைப் பரிசோதிப்பதன் மூலம் கண் தசைகளின் செயல்பாடுகளைக் கண்டறிதல்.
- 1% பிலோகார்பைன் சொட்டு மருந்து வழங்கப்படுகின்றது. இதனை வழங்கிய 45 நிமிடங்களுக்கு பின்னர் கண்மணிகள் விரிவடைகின்றன.
தடுக்கும் முறைகள்:
- நேரடியாக சூரிய ஒளிக்கு வெளிப்படுதலைத் தவிர்த்தல்.
- பிரகாசமான சூழல்களில் கருப்புக்கண்ணாடி (சன்கிளாஸ்) அணிதல்.
- கண்களுக்கு மிக அருகில் வைத்துப் படிப்பதைத் தடுத்தல்.
சிகிச்சைகள்:
- கண்களின் செயற்பாடுகளை பாதுகாக்கவே சிகிச்சை அளிக்கப்படும். அடிப்படை காரணத்தை கருத்தில் கொண்டு சிகிச்சை தீர்மானிக்கப்படுகிறது.
- கண் நரம்புகள் மற்றும் அமைப்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்.