தசை திரிபு என்றால் என்ன?
தசை திரிபு என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தசைகளில் ஏற்படும் ஒரு வகை காயம் ஆகும்.தசை நரம்புகள் நீட்சி அடையும் போது அல்லது கிழியும் போது ஒரு நபருக்கு தசை திரிபு ஏற்படுவதாக கூறப்படுகிறது.பெரும்பாலான தசை திரிபுகள் மிதமாக இருக்கும், மற்றும் இதனால் தசை நரம்புகள் வலுவாகவும் சேதமடையாமலும் இருக்கும்.சில சந்தர்ப்பங்களில் மட்டுமே, தசை நார்கள் அதன் எல்லைகளுக்கு அப்பால் நீண்டு, தசை நார்களை கிழித்து விடுகின்றன.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
தசை திரிபுகளின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- காயம் ஏற்படும் நேரத்தில் தசையில் ஒரு அறுக்கும் உணர்வு.
- தசை பிடிப்பு அல்லது சுளுக்கு.
- தசை மென்மை மற்றும் வலி.
- தசையில் வீக்கம்.
- காயம் ஏற்பட்ட இடத்தில் நிறமாற்றம்.
- அழற்சி.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
தசை திரிபுகளின் முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
- நடனம் அல்லது குறுவிரையோட்டம் போன்ற நடவடிக்கைகளின் போது பின்தொடை தசைநார்கள் அதிக நீட்சி அடைதல்.
- அதிகப்படியான திருகல் அல்லது குதிப்பதால் முதுகு தசைகளில் திரிபு ஏற்படுகிறது.
- விளையாட்டு காயங்கள்.
- கனமான எடை தூக்குதல்.
- மோசமான தோற்றப்பாங்கு.
- வார்ம் அப் நடவடிக்கைகள் செய்யாமல் உடற்பயிற்சி செய்தல்.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
தசை திரிபு பின்வரும் முறைகளால் கண்டறியப்படுகிறது:
- நீங்கள் அனுபவித்த தசை இயக்கம் மற்றும் வலிமை தொடர்பான அறிகுறிகளை மருத்துவர் கேட்டறிவார்.
- பிடிப்புகள், பலவீனம் மற்றும் தசை மென்மை ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டு உங்கள் மருத்துவ வரலாற்றுடன் ஒப்பிடப்படும்.
- தேவைப்பட்டால் எக்ஸ்ரே அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உத்தரவிடப்படலாம்.
- முதுகு தண்டு மற்றும் முதுகெலும்பு தட்டுகளில் உள்ள சிக்கல்களைக் கண்டுபிடிக்க கூடுதல் சோதனைகள் பரிந்துரைக்கப்படலாம்.
தசை திரிபுகள் பின்வரும் முறைகள் மூலம் சிகிச்சையளிக்கப்படுகின்றன:
- ஓய்வு, பனிக்கட்டி ஒத்தடம், க்ரீப் அல்லது சாதாரண துணியை பயன்படுத்தி அழுத்தக்கட்டு மற்றும் இதய நிலைக்கு மேலே உயர்த்தி வைத்தல் (ரைஸ்) ஆகியவை தசை திரிபுக்கு சிகிச்சையளிக்க உபயோகிக்கப்படும் மிகவும் பொதுவான முறைகளாகும்.இவை வீக்கம் மற்றும் வலியை குறைக்க உதவும்.
- லேசான தசை திரிபுகள் உடல் பயிற்சி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகின்றது.இந்த முறையில் சிறப்பு குணமடைய அடைய தசை வலிமை அடையும்.
- கடுமையான தசை திரிபுகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்,அதைத் தொடர்ந்து உடல் பயிற்சி அளிக்கப்படும்.
- வீக்கம் மற்றும் வலியிருந்து நிவாரணம் பெற ஸ்டீராய்டு இல்லாத அழற்சி மருந்துகள், வலி நிவாரணி மருந்துகள், அல்லது தசை தளர்த்தி மருந்துகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
- செயல்பாட்டு கட்டுப்பாடுகள், அச்சில் வார்த்தெடுத்தல், மட்டை, சக்கர நாற்காலி அல்லது ஊன்றுகோல் ஆகியவற்றை பயன்படுத்துதல் ஆகியவை மற்ற சிகிச்சை வாய்ப்புகள் ஆகும்.