பயணப்பிணி (மோஷன் சிக்னெஸ்) என்றால் என்ன?
பயணப்பிணி என்பது பயணத்தின் போது திடீரென ஏற்படக்கூடும் குமட்டல் மற்றும் வாந்தி உணர்வு. குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சில மருந்துகளை உட்கொள்பவர்கள் இந்நிலையினால் பாதிக்கப்படுகின்றனர். காதுகள், கண்கள், தசைகள் மற்றும் மூட்டுகள் அனுப்பும் மூளையுடன் பொருந்தாத குறியீடுகளை வைத்து நரம்புகள் இத்தகைய இயக்கங்களை உணரும் போது அனுபவிக்கும் உணர்ச்சியே இந்நிலையாகும்.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
பொதுவாக ஏற்படும் அறிகுறிகள் பின்வருமாறு:
- குமட்டல் மற்றும் வாந்தி.
- வயிற்றுக்கோளாறு.
- தலை சுற்றி மயங்குதல்.
- பயத்திலோ பதட்டத்திலோ வியர்க்கும் போது குளிர்ந்த தன்மையை உணர்தல்.
- வெளிறிய நிற சருமம்.
- தலைவலி.
கடுமையான அறிகுறிகள் பின்வருமாறு:
- உடல் சமநிலை இழப்பு.
- தலைச்சுற்றுதல்.
- உமிழ்நீர் சுரத்தல்.
- மூச்சு திணறல்.
- உடல்நிலை சரியில்லாதது போல் உணர்தல்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
காது, கண்கள், தசை மற்றும் மூட்டுகள் போன்ற உணர்ச்சி உறுப்புகளிலிருந்து பொருத்தமில்லாத செய்திகளை மூளை பெறும்போது பயணப்பிணிக்கான அறிகுறிகள் தோன்றுகிறது. உதாரணத்திற்கு, ஒருவர் விமானத்தில் பயணம் செய்யும் போது ஏற்படும் இடையூறை பார்க்கமுடியாது ஆனால் அது உடலால் உணரக்கூடியது. இந்த பொருத்தமில்லாத குறியீடு அசௌகரியம் மற்றும் பயணப்பிணிக்கு வழிவகுக்கக்கூடியது.
காரணங்கள் பின்வருமாறு:
- உடல்சார்ந்த, காட்சி சார்ந்த அல்லது கற்பனை சார்ந்த பயணத்தின் போது அதாவது எ.கா படகு, கார், விமானம் அல்லது ரயிலில் பயணிக்கும்போது ஏற்படும் நிலை.
- தூக்கமின்மை இந்நிலையை மேலும் அதிகமாக்கும்.
- அம்யூஸ்மென்ட் ரைட்ஸ் மற்றும் விளையாட்டு மைதானத்தில் இருக்கும் உபகரணங்கள் ஆகியவையும் பயணப்பிணியை தூண்டலாம்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
இந்நிலைக்கான நோயறிதல் பின்வரும் படிகளை உட்கொண்டது:
- பயணப்பிணி என்பது பெரும்பாலான வழக்குகளில் இயல்பாக குணமடையக்கூடியது.
- இந்நோய் ஏற்படும் காரணத்தை கண்டறிய இதன் அறிகுறிகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
- இந்நிலைக்கு ஆய்வக சோதனைகள் அவசியம் இல்லை.
- ஹால்பைக் உத்தி போன்ற உடலியல் பரிசோதனை பயணப்பிணியை உறுதிசெய்வதற்கு மேற்கொள்ளப்படுகின்றன.
சிகிச்சை முறைகளுள் அடங்கியவை பின்வருமாறு:
- இஞ்சி சேர்த்த சப்ளிமென்ட்கள் இந்த குமட்டல் உணர்வை கட்டுப்படுத்த உதவக்கூடியது.
- ஸ்கோபொலமைன், டிமென்ஹைட்ரினேட் மற்றும் மெக்லிஸைன் போன்ற மருந்துகள் பயணபிணியிலிருந்து நிவாரணம் பெற பரிந்துரைக்கப்படலாம்.
தற்காப்பு நடவடிக்கைகளுள் அடங்குபவை பின்வருமாறு:
- தொலை தூரத்திலோ அல்லது அடிவானத்திலோ நிலையாக இருக்கும் பொருளை நோக்கி பார்வையை செலுத்துதல். இம்முறையை பின்பற்றி சமநிலையை ஊர்ஜிதம் செய்வதால், இது உட்புற உறுப்பமைவுக்கு மீண்டும் பயிற்சி அளித்து சமநிலையை கையாள உதவி செய்வதோடு பயணப்பிணியையும் குறைகின்றது.
- புத்தகம் படித்தல் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துதலை பயணிக்கும் போது தவிர்த்தல்.
- புகைப்பிடித்தல், ஆல்கஹால், காஃபின், வலுவான நறுமணங்கள், காரமான மற்றும் க்ரீஸ்சி உணவுகளை உட்கொள்தல் போன்றவைகளை தவிர்த்தல்.
- பயணம் செய்வதற்கு முன் லேசான உணவு வகைகளை உட்கொள்தல்.
- சௌகரியமான நிலையில், கண்கள் மூடி மற்றும் கழுத்தின் நிலையை உயர்த்திய படி பின்புறம் சாய்ந்தவாறு உட்காருதல்.
- காரில் பயணிக்கும் போது ஏற்படும் பிணியை குறைக்க எந்த தெளிந்த காரணமுமின்றி சூயிங் கம் கூட உதவுகின்றது.