பித்து - Mania in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

April 26, 2019

March 06, 2020

பித்து
பித்து

பித்து என்றால் என்ன?

பித்து என்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஒருவரை அதீத ஆற்றலுள்ளவராக உணரவைக்கும் ஒரு மனநிலையாகும். இது அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பித்து அல்லது பித்து அத்தியாயங்கள் பொதுவாக ஒரு வாரம் அல்லது அதற்கு மேலும் நீடிக்கிறது. இது தாழ்வெறியின் கடுமையான வடிவம். இது இருமுனையப் பிறழ்வு, பின் மகப்பேற்று இறுக்கம் மற்றும் மனநிலையின் உச்சங்கள் (மிக அதிகமான உணர்ச்சி அல்லது மிகவும் குறைவான உணர்ச்சி) போன்றவை காணப்படும் பிற சீர்குலைவுகளுக்கு ஆளானவர்களிடம் பொதுவாக காணப்படும் அறிகுறிகளில் ஒன்று. இத்தகையவர்களிடத்தில் மனச்சோர்வு மற்றும் பித்து மாறி மாறி ஏற்படுகின்றன.

இந்தியாவில் இருமுனையப் பிறழ்வு பாதிப்புப் பரிமாண விகிதம் 0.1% ஆக உள்ளது. இதன் நிகழ்வு விகிதம் ஆண்களிடத்தில் அதிகம் உள்ளது. இந்தியாவின் தேசிய மனநல சுகாதார ஆய்வு 2015-16 இன் படி, 40-49 வயதுள்ளவர்களிடம் இருமுனையப் பிறழ்வின் தாக்கம் அதிகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

பித்து நிகழ்வின் போது நீங்கள் பின்வருமாறு செயல்படுவீர்கள் அல்லது உணர்வீர்கள்:

  • மிதமிஞ்சிய மகிழ்ச்சி, கட்டுப்படுத்த முடியாத உற்சாகம்.
  • மிகுந்த சுறுசுறுப்புத் தன்மை.
  • மிக வேகமாக பேசுவது மற்றும் சிந்திப்பது.
  • தூக்கமின்மை அல்லது பசியின்மை.
  • எளிதில் கவனம் சிதறுவது.
  • எளிதில் எரிச்சலடைவது மற்றும் கோபப்படுவது.
  • நீங்கள் சிறப்பு ஆற்றல் கொண்டிருப்பதைப் போல உணருதல்.
  • நுண்ணறிவு இல்லாமை.
  • பலனற்ற எண்ணங்கள் மற்றும் யோசனைகள் ஏற்படுவது.

ஒரு நிகழ்விற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை நினைவில் வைக்க முடியாமலும் மற்றும் உங்கள் செயல்களையோ அல்லது வார்த்தைகளையோ பற்றி சங்கடமாகவும் உணருவீர்கள். நீங்கள் சோர்வையும் தூக்கத்தையும் உணருவீர்கள்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பித்து ஏற்படுவதற்கான சாத்தியமான காரணங்கள்:

  • இருமுனையப் பிறழ்வு.
  • மன இறுக்கம்.
  • மரபியல் காரணங்கள்.
  • பருவகால மாற்றங்கள்.
  • சில மருந்துகள் அல்லது மதுவின் பயன்பாடு.
  • நரம்பு செயல்பாட்டு இயல்பு பிறழ்மை.
  • சில நோய்களின் இறுதி நிலை வெளிப்பாடு.
  • குழந்தை பிறப்பு.
  • அன்புக்குரியவரின் இழப்பு, விவாகரத்து, வன்முறை, பலாத்காரம், வேலையின்மை, நிதி நெருக்கடி போன்ற நிகழ்வுகள்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

உங்கள் மருத்துவர் (மனநல மருத்துவர்) பித்துக்கான சிகிச்சையில் ஒரு பெரிய உதவியாக இருக்க முடியும். அவர் உங்களுடைய தனிப்பட்ட மருத்துவ பின்புலத்தை அறிந்து வேறு பித்து உண்டாக்கும் சீர்கேடுகள் உள்ளனவா என்று கண்டறிவார். அண்மைக்கால சோக நிகழ்வுகளை கண்டறிந்து உங்கள் மனநலத்தை மதிப்பீடு செய்ய உங்களுடைய தனிப்பட்ட மருத்துவ பின்புலம் உதவும்.

பித்திற்கான முதல் மருத்துவத் தெரிவு ஆன்டிசைகோடிக் எனப்படும் உளப்பிணி எதிர் மருத்துவமாகும். இருமுனையப் பிறழ்வு தொடர்புடைய பித்திற்கு மனநிலை நிலைப்படுத்தி மருந்துகள் வழங்கப்படுகின்றன. தீய பக்க விளைவுகளைத் தடுக்க தொடர்ச்சியான இரத்த பரிசோதனைகள் (அல்லது சில மனநிலை நிலைப்படுத்தி மருந்துகள்) தேவைப்படுகிறது. மருந்துகளோடு உளவியல் சிகிச்சை (மாதிரி வகைகளை அடையாளம் காண உதவுகிறது, நிகழ்காலத்தில் வாழ்வதை ஊக்குவிக்கும் அல்லது சிக்கல்களை சரி செய்கிறது) மற்றும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து ஆதரவு ஆகியவை பெரும் உதவியாக இருக்கும்.



மேற்கோள்கள்

  1. Prasad G. Rao. An overview of Indian research in bipolar mood disorder. Indian J Psychiatry. 2010 Jan; 52(Suppl1): S173–S177. PMID: 21836675.
  2. Suresh Bada Math and Ravindra Srinivasaraju. Indian Psychiatric epidemiological studies: Learning from the past. Indian J Psychiatry. 2010 Jan; 52(Suppl1): S95–S103. PMID: 21836725.
  3. Queensland Health. [Internet]. The State of Queensland. Caring for a person experiencing Mania.
  4. Mind. [Internet]. National Association for Mental Health. Hypomania and mania.
  5. Dailey MW, Saadabadi A. Mania. [Updated 2019 May 13]. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2019 Jan-.

பித்து க்கான மருந்துகள்

Medicines listed below are available for பித்து. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.