மலேரியாவின் அறிகுறிகள் இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன - சிக்கலற்ற மற்றும் கடுமையானவை ஆகும்.
சிக்கலற்ற மலேரியாவின் அறிகுறிகள்
சிக்கலற்ற மலேரியாவானது அனைத்து பொதுவான அறிகுறிகளையும் கொண்டிருக்கும், ஆனால் இந்த அறிகுறிகளானது கடுமையான தொற்றுநோய்களின் அறிகுறிகள் கிடையாது மற்றும் உடலின் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்தாது.
சிக்கலற்ற மலேரியாவானது, சிகிச்சையளிக்கப்படாமல் இருந்தால் பின்பு அது கடுமையான மலேரியாவாக முன்னேற்றமடையும். மிகக் குறைவான நோய் எதிர்ப்பு சக்தி உடையவராக இருந்தால், அவர்களுக்கு கடுமையான மலேரியா நோய் ஏற்படலாம். மலேரியாவின் அறிகுறிகள் 6 முதல் 10 மணி நேர இடைவெளியில் நீடித்து, மீண்டும் இரண்டாவது நாளும் தொடரும். இதன் அறிகுறிகள் ஒட்டுண்ணியின் வகையைப் பொறுத்து மாறுபடும், இதனால் சில நேரங்களில் கலப்பு அறிகுறிகளையும் ஏற்படுத்தும்.
சிக்கலற்ற மலேரியா நோய்க்கான அறிகுறிகளின் முன்னேற்றம், பின்வருமாறு:
- நடுக்கத்துடன் கூடிய குளிரை உணரலாம்.
- அதிகப்படியான காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி.
- இளம் வயது நோயாளிகளுக்கு சில நேரங்களில் வலிப்புத்தாக்கங்களும் ஏற்படலாம்.
- வியர்வையுடன் சேர்ந்த காய்ச்சல்,சோர்வு மற்றும் அயற்சி போன்றவை இருக்கலாம். (மேலும் வாசிக்க – களைப்பு)
கடுமையான மலேரியாவின் அறிகுறிகள்
கடுமையான மலேரியா அறிகுறிகள், உடலின் முக்கிய உறுப்புகளில் சேதத்தை ஏற்படுத்த கூடிய அறிகுறிகளாகும்.
கடுமையான மலேரியாவின் சில அறிகுறிகள்:
- காய்ச்சல் மற்றும் குளிர்.
- குறைவான விழிப்புணர்வு மற்றும் உணர்வு நிலை போன்ற சிக்கல்கள்.
- சாய்ந்து கீழே படுப்பது பாதிப்புக்குள்ளாகும் நிலையாகும் (மார்பு கீழே மற்றும் பின்புறம் மேலே போன்று உறங்கும் நிலை).
- ஆழ்ந்த சுவாசம் மற்றும் சுவாசத்தில் சிரமம்.
- இரத்த சோகையின் அறிகுறிகளினால் சோர்வு மற்றும் பலவீனம் போன்று உணரலாம்.
- மஞ்சள் காமாலைகளின் அறிகுறிகள், உதாரணமாக, கண்கள் மற்றும் நகங்கங்கள் மஞ்சள் நிற மாற்றங்களுடன் சேர்ந்த அதிகப்படியான மஞ்சள் நிற சிறுநீர் வெளியெற்றம்.
கடுமையான மலேரியாவுக்கு, சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிர் இழப்பு கூட ஏற்படலாம்.
மலேரியாவின் அறிகுறிகளும், சதாராண காய்ச்சலின் flu அறிகுறிகளும் ஒரேமானவையாகும் அல்லது வைரஸ் சார்ந்ததாகவும் இருக்கலாம் ஆதலால் மலேரியா நோய்க்கு ஆட்படாதவர்களை கண்டறிவதில் கடினம் ஏற்படலாம்.