சுருக்கம்
விந்தணு பரிசோதனை ஆய்வில் விந்தணுக்களின் தரத்தை மதிப்பிடுவதற்கு விந்தணுக்களின் எண்ணிக்கை முக்கியமானது. விந்தணு பரிசோதனை ஆய்வு என்பது முக்கியமான பரிசோதனை ஆகும். அதன் மூலம் ஒரு மனிதனின் கருத்தரிக்கும் திறனை கண்டறிய இயலும். இந்த சோதனை (ஸெமென்)மூலம் விந்தணுக்களின் சராசரி அளவுகளை தெரிந்துகொள்ளாம். விந்தணு பரிசோதனையில் குறைந்த(நெகடிவ்) விந்தணு எண்ணிக்கை என்று குறிப்பிட்டுருந்தால், நாம் எதிர்ப்பார்த்த விந்தணுவின் அளவுயை விட குறைவானது என்று அர்த்தம். ஒரு நபரின் குறைந்த விந்தணு எண்ணிக்கையானது, எந்த அறிகுறிகளும் இல்லாமலும் அல்லது விதைப்பைகளுள் வீக்கம் எனவும் இருக்க கூடும்.விந்தணு குறைபாடு என்பது இனப்பெறுக்க உறுப்பு அல்லது உயர் வெப்பநிலை வெளிப்பாடு தொடர்புடைய காரணி ஆகும். மேலும் சிலருக்கு உடலில் போதிய சத்துக்கள் இல்லையென்றால் கூட இனப்பெருக்க மண்டலம் சரியாக இயங்காமல் இருக்கும். விந்தணு குறைபாடுகளை மேம்படுத்த முறையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மாற்றங்கள், விந்தணு வெளிப்பாடுகான காரணங்களை தவிர்த்தல் (ஏதேனும்) மற்றும் மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மூலம் இதை சரி செய்யலாம்.