கர்ப்ப காலத்தில் ஏற்படும் பசியின்மை என்றால் என்ன?
கர்ப்ப காலத்தின் போது காணப்படும் பொதுவான அறிகுறிகள் மற்றும் தாக்கங்களில் ஒன்று பசியின்மை ஆகும். இது பல காரணங்களினால் ஏற்படக்கூடும். முக்கியமாக கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவே பசியின்மை ஏற்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஒவ்வொரு பெண்ணிற்கும் கர்ப்ப காலத்தின் போது வெவ்வேறு அறிகுறிகள் மற்றும் தாக்கங்கள் இருந்தாலும், இதனோடு தொடர்புடைய சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- எடை இழப்பு.
- கடுமையான குமட்டல் மற்றும் வாந்தி (மசக்கை நோய்).
- மீக்கடுமையான சோர்வு.
- வழக்கத்திற்கு மாறான சுவை மாற்றம் அதாவது எப்பொழுதும் விரும்பப்படும் உணவுகளும் சுவையற்றது போல் தோன்றும்.
- உணவு சாப்பிடாத போதும் கூட புளிப்பு அல்லது உலோக சுவையை உணர்தல் (சுவை உணர்வு விலகல்).
- மனநிலை மாற்றங்கள் (விவரிக்கப்படாத அழுகை போன்றவை).
- மலச்சிக்கல்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
கர்ப்ப காலத்தில் ஏற்படும் பசியின்மைக்கு தொடர்புடைய சில காரணிகள் பின்வருமாறு:
- முதல் அல்லது இரண்டாவது மும்மாத காலத்தில் ஏற்படும் மசக்கை நோயானது சாப்பிடும் ஆசையை இழக்கச்செய்து பசியின்மைக்கு வழிவகுக்கிறது.
- ஹார்மோன் மாற்றங்கள்.
- கர்ப்பம் தொடர்பான மன அழுத்தம் மற்றும் பதட்டம்.
- அடிக்கடி ஏற்படும் மனநிலை மாற்றங்கள்.
- நறுமணத்தை நுகரும் உணர்வு: சில பெண்களில் கர்ப்பகாலத்தின் போது, நறுமணத்தை நுகரும் உணர்வு அதிகப்படியாக இருக்கும். இதன் விளைவாக பசியின்மை ஏற்படுகிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
நோயாளியின் முழுமையான மருத்தவ பின்புலத்தை அறிந்து, ஊட்டக்குறை, அளவிடக்கூடிய எடை இழப்பு மற்றும் தீவிர சோர்வு ஆகியவற்றை அறிய உதவும் உடல் பரிசோதனை மேற்கொண்டு, இதனை மருத்துவர் கண்டறிவார். ஊட்டச்சத்து குறைபாடுகளை மதிப்பிடுவதற்கான இரத்த பரிசோதனைகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் பசியின்மையை நிர்வகிப்பதற்கான வழிகள் பின்வருமாறு:
- வீட்டு நிர்வகிப்பு முறைகள்:
மிகுதியான பழங்கள், காய்கறிகள் (நார் சத்து நிறைந்த) பாலால் ஆன பொருட்கள் (பால், பாலாடைக்கட்டி, தயிர்), மாச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் (பாஸ்தா, அரிசி, சாப்பாத்தி, ரொட்டி மற்றும் காலை உணவு தானியங்கள்), பீன்ஸ், பருப்பு வகைகளுடன் புரதங்கள் நிறைந்த இறைச்சி மற்றும் கோழி முதிலியன அடங்கிய உணவுப் பொருட்கள் ஆகியவற்றால் செறிவூட்டப்பட்ட உணவுத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். உணவை அளவுக்கு அதிகமாக கொதிக்க வைப்பதை தவிர்த்தல். - மருந்துகளுடனான மருத்துவ நிர்வகிப்பு.
- வாயு, அஜீரணம், அமிலப் பின்னோட்ட நோய் மற்றும் நெஞ்செரிச்சல் முதலியவற்றைக் குறைக்க அமிலநீக்கிகள் பயன்படுத்துதல்.
- வாந்தியெடுப்பதை நிறுத்துவதற்கான விண்வெளிப்பயணி மருந்து (ப்ரோமேதசீன்), ஒண்டான்செட்றன் மற்றும் மெடொக்லொபிரமைட் போன்ற வாந்தியடக்கி மருந்துகள்.
- ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்ய வைட்டமின் பிற்சேர்க்கைகள்.
- கால்சியம் பிற்சேர்க்கைகள் போன்ற கனிமங்கள்.
- வைட்டமின் டி 3 பிற்சேர்க்கைகள்.