பிரசவம் மற்றும் குழந்தைப்பேறு சிக்கல்கள் - Labor and Delivery Complications in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

April 24, 2019

July 31, 2020

பிரசவம் மற்றும் குழந்தைப்பேறு சிக்கல்கள்
பிரசவம் மற்றும் குழந்தைப்பேறு சிக்கல்கள்

பிரசவம் மற்றும் குழந்தைப்பேறு சிக்கல்கள் யாவை?

கர்ப்பக்காலம் மற்றும் குழந்தைப்பேறு என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் தனித்துவம் வாய்ந்த அனுபவங்கள் ஆகும். இருப்பினும், சில உடல்நலப் பிரச்சினைகள் இத்தகைய அனுபவங்களை சிக்கலடைய செய்யலாம், அதாவது பிரசவ வலி வழக்கம் போல் முன்னேறாமல் பலவீனமான கருப்பை சுருக்கங்கள் அல்லது கருப்பைவாயின் அளவு மோசமாக இருத்தலின் காரணங்களினால் இத்தகைய அனுபவத்தை மாற்றியமைக்கலாம். பிரசவ நேரத்தில் ஏற்படும் வலி மற்றும் சிக்கல்கள் அனைத்தும் 'மகப்பேறியல் சிக்கல்கள்' என பெயரின் கீழ் அடங்குவதோடு தாய் மற்றும் குழந்தையின் உடல்நலத்தை மோசமாக பாதிக்கக்கூடும்.

ஆரம்பக்கட்டத்தில் ஏற்படும் பனிக்குடச் சிதைவிற்கு சிகிச்சைஅளிக்காமல் விட்டுவிட்டால் அது நோய்த் தொற்று போன்ற சிக்கல்களை ஏற்படுத்தி இந்நிலையை மேலும் சிரமத்திற்குள்ளாக்கும். மற்ற பிரச்சனைகளுள் அடங்குபவை, குறைவான ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்ளுவதால் தாயிற்கு, சிறிய உடல்ரீதியான குறைபாடுகள் ஏற்படுவதோடு குழந்தைப்பேறில் சிக்கல்கள் ஏற்படலாம். இத்தகைய சிக்கல்கள் குழந்தையிடத்தில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தி, எதிர்காலத்தில் அவர்களுக்கு நடவடிக்கை  பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். அதேபோல, சொல்லப்பட்ட நேரத்தில் முன்னேற்றமடையாமல் இருக்கும் பிரசவ வலியால் 20 மணிநேரத்திற்கும் மேல் போராடி பிரசவிக்கும் தலை பிரசவம் மற்றும் 14 மணி நேரம் கழித்து பிரசவிக்கும் பின்வரும் பிரசவங்கள் நிகழக்கூடும். அதனால், இந்த சிக்கல்கள் மற்றும் அதை சார்ந்த அறிகுறிகளைப் புரிந்து கொள்வதன் மூலம் குழந்தை மற்றும் தாய்க்கு கெட்ட பாதிப்பும் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு அவசியமானதாகும்.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

பிரசவ வலியின் முன்னேற்றத்தின் வகையினை பொறுத்து சிக்கல்கள் வேறுபடுகின்றது. அவை பின்வருமாறு:

  • பெரினியல் கிழிசல்.
  • குழந்தைக்கு ஏற்படும் அசாதாரண இதய துடிப்பு.
  • தொப்புள்கொடியுடன் கூடிய பிரச்சினைகள்.
  • பனிக்குடம் உடைத்தலில் ஏற்படும் பிரச்சனைகள்.
  • குழந்தையின் மூளைக்கு சப்ளையாகும் ஆக்ஸிஜனில் ஏற்படும் பற்றாக்குறை.
  • பிரசவிக்கும் போது குழந்தையின் தோள்பட்டை சிக்கிகொள்தல்.
  • அதிகமான வெஜினல் இரத்தப்போக்கு.
  • இரத்தத்துடன் சளி வெளியேறுதல்.
  • கருச்சிதைவு ஏற்படத்தக்கூடிய சிக்கல்கள்.
  • எக்லம்ப்ஸியா - உயர் இரத்த அழுத்தம் மற்றும் கர்ப்பக்காலத்தில் சிறுநீரில் புரதங்கள் இருத்தல்; இது மருத்துவ அவசர நிலை ஆகும்.
  • சிதைவுற்ற கருப்பை.
  • எக்டோபிக் கர்ப்பம் (கருப்பையின் வெளியே கரு உருவாகுதல், குறிப்பாக ஃபெல்லோப்பியன் குழாய்களில்).
  • சரும நிறம்மோசமடைதல்.
  • கர்பத்தின் இறுதி காலத்தில் பிரசவத்திற்கு ஏதுவாக குழந்தையின் தலை கீழ்நோக்கி இருப்பதற்கு பதிலாக மேல் நோக்கி இருத்தல்.
  • ஃபைப்ராய்ட்ஸ்.
  • அதிக எடை கொண்ட குழந்தை மற்றும் பெரிய தலையினை கொண்ட குழந்தையை பிரசவித்தல்.
  • வெஜினல் சுவர்களில் இருந்து நஞ்சுக்கொடியை பிரிப்பதில் ஏற்படும் சிக்கல்கள்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

இதனால் ஏற்படும் சிக்கல்களின் முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

  • தாயின் ஊட்டச்சத்து குறைபாடு.
  • மது அருந்துதல் அல்லது போதை பொருட்களின் வெளிப்பாடு.
  • சிறிய உடலியல் பிரச்சினைகள்.
  • பிரசவ சிக்கல்கள்.
  • முன்பு நடந்த சிசேரியன் பிரசவத்தின் விளைவு.
  • கர்ப்ப காலத்தில் தூண்டப்படும் ஹைப்பர்டென்ஷன்.
  • உடல்பருமன்.

மற்ற பிரச்சனைகள் பின்வருவன:

  • தொப்புள்சார் பிரச்சினைகள்: குறிப்பிட்ட சில வழக்குகளில், குழந்தையின் கைகளிலோ அல்லது கால்களிலோ தொப்புள் கொடி மாட்டிக்கொள்தல். தீவிர நிகழ்வுகளில், தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தை சுற்றி கொள்ளலாம். இதை கையாயாண்டு, இறப்பை தவிர்க்க சிசேரியன் பிரசவம் மேற்கொள்ளப்படலாம்.
  • ஒழுங்கற்ற இதயத் துடிப்பு.
  • ஆரம்பகட்டத்தில் பனிக்குடம் உடைந்து நீர் வெளியேறியவுடன் பிரசவ முறைகளை செயல்படுத்தாவிட்டால் அது சிக்கல்களை உண்டாக்கலாம்.
  • அதிக வெஜினல் இரத்தப்போக்கு அல்லது கருப்பை சுருங்குதளுக்கான திறனின்மை ஆகியவை கருப்பை கிழிவதின் விளைவால் ஏற்படுகின்றது. இதன் விளைவால் தாய்க்கு மரணம் கூட ஏற்படலாம்.
  • கர்ப்பக்காலம் 42 வாரங்களுக்கும் மேலாக பிரசவிக்காமல் நீடித்தால் அதுவும் சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
  • தாயின் வயது அதிகமாக இருந்தால், அதாவது 30 க்கு மேல் இருப்பின் சிக்கல்கள் ஏற்படலாம்.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

இதய துடிப்பு மற்றும் ஆக்ஸிஜன் அளவுகள் பாதிக்கப்படும்போது ஏற்படும் நிலைதான் கருச்சிதைவு ஆகும். ஃபெடோஸ்கோபி அல்லது கார்டியோடோகிராஃபி உதவியுடன் நோயறிதல் மேற்கொள்ளப்படுகிறது.

மேலே உள்ள நிலைகளின் சிகிச்சை முறைகள் தாயின் பிரச்சினைகளின் வகைகளை பொறுத்து வேறுபடலாம் மற்றும் அவை பின்வருவனவற்றை கொண்டிருக்கலாம்:

  • முழுமையான படுக்கை ஓய்வு அல்லது கடுமையான சந்தர்ப்பங்களில் மேற்பார்வையின் கீழ் ஒய்வெடுத்தல்.
  • இரத்த பரிமாற்றம்.
  • சிசேரியன் முறையில் உடனடியாக பிரசவித்தல்.
  • ஃபோர்செப்ஸ் அல்லது அதை போன்ற வேறு கருவிகளை பயன்படுத்தி வெஜினல் பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கலை கையாளுதல்.



மேற்கோள்கள்

  1. Eunice Kennedy Shriver National Institute of Child Health and Human Development. What are some common complications during labor and delivery?. US Department of Health and Human Services
  2. American Academy of Family Physicians. Labor, Delivery, and Postpartum Issues. [Internet]
  3. Women's health care physicians: The American College of Obstetricians and Gynecologists; Labor and birth
  4. Internation Scholarly Research Notices. Incidence of Obstetric and Foetal Complications during Labor and Delivery at a Community Health Centre, Midwives Obstetric Unit of Durban, South Africa. Volume 2011, Article ID 259308, 6 pages
  5. Encyclopedia on Earlychildhood Development. Aggression. University of Southern California, USA April 2003

பிரசவம் மற்றும் குழந்தைப்பேறு சிக்கல்கள் டாக்டர்கள்

Dr. Samadhan Atkale Dr. Samadhan Atkale General Physician
2 Years of Experience
Dr.Vasanth Dr.Vasanth General Physician
2 Years of Experience
Dr. Khushboo Mishra. Dr. Khushboo Mishra. General Physician
7 Years of Experience
Dr. Gowtham Dr. Gowtham General Physician
1 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

பிரசவம் மற்றும் குழந்தைப்பேறு சிக்கல்கள் க்கான மருந்துகள்

Medicines listed below are available for பிரசவம் மற்றும் குழந்தைப்பேறு சிக்கல்கள். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.