தொண்டையில் அரிப்பு - Itchy Throat in Tamil

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

April 24, 2019

October 28, 2020

தொண்டையில் அரிப்பு
தொண்டையில் அரிப்பு

தொண்டை அரிப்பு என்றால் என்ன?

தொண்டையில் அரிப்பு என்பது ஒவ்வாமை அல்லது நோய் தொற்றின் காரணமாக மிகவும் பொதுவாக அறியப்படும் ஒரு அறிகுறியாகும்.இது நோயாளிக்கு வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது, ஆனால் மருந்து மற்றும் வீட்டு பராமரிப்பு மூலம் எளிதில் இதை சரிசெய்யலாம்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

பெரும்பாலான நேரங்களில்,ஏதேனும் ஒரு மருத்துவ நிலையினை பொறுத்து தொண்டை அரிப்பு மற்ற அறிகுறிகளுடன் சேர்ந்து ஒன்றாக ஏற்படுகிறது.

  • நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு சளி மற்றும் தும்மல் மற்றும் தொடர் இருமல் இருக்கும்
  • சைனஸ் அடைப்பு ஏற்பட்டால், முகம் மற்றும் தலை பாரமாய் இருப்பதுபோல் உணரலாம்.
  • கண் மற்றும் கை,கால்களில் உள்ள சருமங்களில் அரிப்பு உண்டாகலாம்.
  • தொற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதால், தொண்டை அரிப்புடன் உள்ள நபர் காய்ச்சலை பரப்பலாம்.
  • தொண்டை அரிப்பு ஒவ்வாமையினால் ஏற்பட்டால், வயிற்று வலி, குமட்டல் மற்றும் தலைச்சுற்று போன்ற அறிகுறிகள் தனிநபருக்கு இருக்கலாம்.
  • அவை சருமத்தின் மீது தடிப்புகள் அல்லது வெடிப்புகளை உருவாக்கலாம்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

  • தொண்டை அரிப்பு நோய்க்கு அரித்தல் ஒவ்வாமை ஒரு பொதுவான அறிகுறியாகும். இது சளிக்காய்ச்சல் எனவும் அழைக்கப்படுகிறது. இது உடலின் உடலின் மிகையான நோய் எதிர்ப்பு அமைப்பு இயக்கத்தின் காரணமாக ஏற்படுகிறது.
  • இந்த தொண்டை அரிப்பினால் உண்டாகும் மற்ற வகை. ஒவ்வாமையானது, மூக்கு ஒழுகுதல்,சில உணவு பொருட்களினால் ஏற்படும் ஒவ்வாமை,அல்லது வாசனைகளால் ஏற்படலாம். இதில் சுற்றுப்புற மாசு ஒரு முக்கிய பங்குவகிக்கிறது.
  • பெரும்பாலும் நுண்ணியிரிகளால் தொண்டைத் தொற்று ஏற்பட்டு தொண்டை அரிப்பு உணர்வு ஏற்பட காரணமாககிறது.ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (பாக்டீரியா) பொதுவாக தொண்டைத் தொற்று ஏற்பட காரணியாகிறது.
  • உடலில் கடுமையான நீர்ச்சத்துக் குறைவு மற்றும் அமிலத்தன்மை காரணமாகவும் தொண்டை அரிப்பு ஏற்படலாம்.
  • புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதால் ஏற்படும் நமைச்சல் கூட தொண்டை அரிப்பு நோயை அதிகப்படுத்துகிறது.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

நீங்கள் தொண்டை அரிப்பு காரணமாக மருத்துவரை சந்தித்தால், முதலில் உடல் பரிசோதனை மற்றும் சில சோதனைகளை அறிகுறிகள் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிய மருத்துவர் சோதனை செய்வார்.

  • தொண்டைப் பரிசோதனை என்பது திசுக்களினால் ஏற்படும் சிவத்தல் மற்றும் வீக்க பிரச்னையை வெளிப்படுத்த உதவும்.
  • நோய்த்தொற்று மற்றும் ஒவ்வாமைகளை பரிசோதிக்க இரத்த பரிசோதனைகள் தேவைப்படும்.
  • மூச்சு விடுதல் சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் இரைப்பைசார் பிரச்சனைகள் இருப்பதாக சந்தேகித்தால், எக்ஸ்-ரே மற்றும் சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யலாம்.
  • ஒவ்வாமை அல்லது நாசியழற்சி ஒவ்வாமையினால் தொண்டை அரிப்பு ஏற்பட்டால், ஆண்டிஹிஸ்டமின்கள் உணர்திறன்மிக்க எதிர்வினைகளை விடுவிக்க பரிந்துரைக்கப்படுகின்றன.
  • நுண்ணுயிர் தொற்றுக்கு எதிராக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உதவுகின்றன, அவை தொண்டைப் பிரச்சனை ஏற்பட காரணமாக இருக்கலாம்.
  • அமில ரிஃப்ளக்ஸ் காரணமாக தொண்டை அரிப்பு ஏற்பட்டால், அமில முறிவு பொருள் மற்றும் உணவுக் கட்டுப்பாடு பரிந்துரைக்கப்படுகிறது.
  • டான்சில்ஸின் தொற்று காரணமாக மீண்டும் மீண்டும்தொண்டையில் அரிப்பு ஏற்பட்டால், டான்ஸில்லெக்டோமி எனப்படுகிற அடிநாக்குச் சதை அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.



மேற்கோள்கள்

  1. Kakli HA, Riley TD. Allergic Rhinitis.. Prim Care. 2016 Sep;43(3):465-75. doi: 10.1016/j.pop.2016.04.009. PMID: 27545735
  2. American Thoracic Society. [Internet]. New York, United States; Air Pollution from Traffic and the Development of Respiratory Infections and Asthmatic and Allergic Symptoms in Children.
  3. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Sore Throat.
  4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Strep Throat: All You Need to Know.
  5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Stuffy or runny nose - adult.