இம்பெட்டிகோ என்றால் என்ன?
இம்பெட்டிகோ என்பது குழந்தைகளை பாதிக்கும் ஒரு பொதுவான தோல் நோய் ஆகும்.இது அரிப்பினால் நமைச்சலை உருவாக்கி கொப்புளங்களை வெடிக்க செய்து அதனால் புண்களை ஏற்படுத்தும் மிகவும் தோலின் மற்ற இடங்களுக்கும் எளிதில் பரவக்கூடிய தொற்றும் பண்புடையது.இது குழந்தைகளில் இடையே மிகவும் பொதுவாக இருப்பதால் இதனை 'பள்ளி புண்' என்றும் கூறுவர்.இது தோலின் மேல்புற அடுக்கை பாதிக்கும் ஒரு பாக்டீரியா தொற்று ஆகும் மற்றும் இந்த புண் தானாகவே 7 முதல் 10 நாட்களுக்குள் மறைந்துவிடும்.
அதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இரண்டு வகை இம்பெட்டிகோ உள்ளன-
- நீர்க்கொப்புளம் அல்லாத இம்பெட்டிகோ
- அரிப்புடன் கூடிய புண்கள்.
- கொப்புளங்கள் வெடித்து மேற்புறம் உள்ள தோல் சிவந்து இருத்தல்.
- புண்கள் அருகே சுரப்பிகள் வீங்கி இருப்பது.
- தேன் நிறத்தில் தோலின் மேலடுக்கு சொரசொரப்பாக மாறியிருப்பது.
- நீர்க்கொப்புளம் இம்பெட்டிகோ - இது சுற்றியுள்ள தோலை சிவப்பாக மாற்றாமல் ஒரே இடத்தில கொத்தாக திரவம் நிறைந்த கொப்புளங்களை உண்டாக்குகிறது.மஞ்சள் நிற கொப்புளங்கள் தோன்றி அது நன்றாக பழுத்து, வெளிப்படையாக உள்ளிருக்கும் திரவம் தெரியும் படி மாறுகிறது, பின்பு கொப்புளம் அடர்த்தியாகி, உடைந்து, தோலின் மேலடுக்கில் புண்கள் உருவாகி தழும்பு இல்லாமல் குணமாகிவிடும்.
அதன் முக்கிய காரணங்கள் என்ன?
இது பொதுவாக ஸ்டேஃபிலோகாக்கஸ் ஆரியஸ் அல்லது ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பியோஜெனெஸ் என்று அழைக்கப்படும்பாக்டீரியாவால் ஏற்படுகிறதுகுழந்தை கவனிப்பு மையங்கள், அதிக நெரிசலான இடங்கள் மற்றும் குழந்தைகள் விளையாடும் போது தோல்கள் உரசுவதாலும் இந்த இம்பெட்டிகோ பரவலாம். எக்ஸிமா (குழந்தை கிரந்தி நோய்) அல்லது அம்மை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் கூடுதலாக இம்பெட்டிகோவும் வர வாய்ப்பிருக்கிறது. அரிப்பதனால் தோலில் கீறல் உருவாகி அதன் வழியாக பாக்டீரியா உள்ளே செல்ல எளிதாகின்றது.இந்த பாக்டீரியாவை மூட்டைப்பூச்சிக் கடி, தோல் அரிப்பு, வெட்டுக்காயம் அல்லது தீப்புண் மூலம் கூட உடலின் உள்ளே செல்ல முடியும்.இது சூடான ஈரப்பதமான காலநிலையில் காணப்படுகிறது.
இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
தோல் நோய் மருத்துவர் தோலை பரிசோதனையிடுவதன் மூலம் தோல் நோயை கண்டறிய முடியும்.கொப்புளத்திலிருந்து பஞ்சைக் கொண்டு எடுக்கப்படும் கொப்புள மாதிரியை ஆய்வகத்திற்கு அனுப்பி எந்த வகை பாக்டீரியா இம்பெட்டிகோவை உண்டாகியுள்ளது என்பதை ஆராய ஆய்வக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இம்பெட்டிகோ பொதுவாக ஒரு தீவிரமான நோய் அல்ல, 2 முதல் 3 வாரங்களில் தானாகவே சரியாகிவிடும்.நோய்த்தாக்கம் கடுமையாக இல்லாதவர்களுக்கு ஆண்டிபயாடிக் கிரீம்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.நோய்த்தாக்கம் பரவலாகவும் கடுமையானதாகவும் இருந்தால் வாய்வழி மருந்தாக எடுத்துக்கொள்ளப்படும் ஆண்டிபயாடிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம்.
பாதிக்கப்பட்ட பகுதியில் நோய் மேலும் பரவாமல் இருக்க கிரீம் போடுவதற்கு முன்னும் பின்னும் கைகளை நன்கு கழுவ வேண்டும். திட்டுகளை நீங்கள் தொடுவதையும் மற்றவர்களைத் தொடுவதையும் தவிர்க்க வேண்டும்.பாதிக்கப்பட்ட குழந்தைகள் பள்ளி, குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் அல்லது பொது இடங்களில் இருந்து பங்கேற்பதை தவிர்க்கப்படல் வேண்டும்.நோய் பரவுதலை தடுக்க, நோயாளியின் துண்டுகள், படுக்கை மற்றும் துணிகளை சூடான நீரில் (சுமார் 60 டிகிரி) துவைக்க வேண்டும்.