ஹைப்போபாராதைராய்டிசம் என்றால் என்ன?
உடலில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவுகளை கட்டுப்படுத்தி பராமரிக்கவும், பாராத்தைராய்டு ஹார்மோனை சுரக்கவும், கழுத்தில் தைராய்டு சுரப்பிக்கு அருகில் அமைந்துள்ள நான்கு சிறிய சுரப்பிகளே பாராத்தைராய்டு சுரப்பிகள் ஆகும். இந்நிலை தைராய்டு சுரப்பிகள் மூலம் பற்றாக்குறையான பாராத்தைராய்டு ஹார்மோன் சுரப்பதை குறிக்கிறது. இதன் விளைவாக இரத்தத்தில் கால்சியத்தின் அளவு குறைகிறது (ஹைபோகால்செமியா) மற்றும் அதிக அளவு சீரம் பாஸ்பரஸ் (ஹைபர்போஸ்பேட்டேமியா) உடலில் ஏற்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இரத்தத்தில் கால்சியம் குறைந்த அளவு காணப்படுவது ஹைப்போபாராதைராய்டிசத்தின் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளில் ஒன்றாகும்.
- லேசானதிலிருந்து மிதமான அளவைக் குறிக்கும் அறிகுறிகள் பின்வருமாறு:
- கூச்ச உணர்வுகள்.
- கால்,கை விரல்கள்,மற்றும் உதடுகளை சுற்றி உணர்வின்மை மற்றும் பாராயஸ்தேசியா (ஒரு அசாதாரண உணர்வு).
- தசை வலிகள்.
- உடல் பலவீனம்.
- தலைவலி.
- கவலை அல்லது பதட்டம்.
- வறண்ட மற்றும் தடித்த சருமம்.
- முடி இழப்பு ஏற்பட்டு தலையில் திட்டுகள் தோன்றுதல்.
- உடையக்கூடிய நகங்கள்.
- மன அழுத்தம்.
- தீவிரமான ஹைப்போபாராதைராய்டிசத்தின் அறிகுறிகள் பின்வருமாறு:
- தசைச் சுருக்கம், இது லரிங்கோஸ்பாசம் (குரல் நாளங்களின் இழுப்பு) அல்லது ப்ராஞ்சோஸ்பேஸ்ம் (நுரையீரல் காற்றுப்பாதைகளின் புறணியில் வரும் இழுப்பு - மூச்சுக்குழாய்) காரணமாக இருக்கலாம்.
- தசைப்பிடுப்புக்கள்.
- நாள்பட்ட நோய் தாக்கத்தினால் ஏற்படும் பொதுவான அசாதாரணமான அறிகுறிகள் பின்வருமாறு:
- எனாமல் ஹைப்போபிளாஸியா என்பது குழந்தைகளுக்கு ஏற்படும் பற்கள் வளர்ச்சியில் ஏற்படும் அசாதாரண குறைபாடு ஆகும்.
- ஒழுங்கற்ற வடிவமைப்பில் இருக்கும் பற்களின் வேர்கள்.
- பல் குழிகளில் சேதம் அதிகரிக்கும்.
- கரகரப்பான குரல்.
- மூச்சு இழுப்பு.
- டிஸ்பனியா(மூச்சுத்திணறல்).
- வலிப்பு.
- மயக்கம்.
- கார்டியாக் அரித்திமியாக்கள் (இதய நோயாளிகளுக்கு அசாதாரண இதய துடிப்பு நிலைமைகள் - மிக வேகமாக, மிக மெதுவாக, அல்லது ஒழுங்கற்ற இதய துடிப்புகள்).
- கண்கள் மங்கலாக தெரிவது அல்லது கண்புரை.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பாராத்தைராய்டு சுரப்பிகளில் குறைவான பாராதைராய்டு ஹார்மோன் சுரப்பதன் காரணமாக ஹைப்போபாராத்தைராய்டு ஏற்படுகிறது.
- பொதுவான காரணங்கள்:
- தைராய்டு அல்லது கழுத்து அறுவை சிகிச்சையின் போது பாராத்தைராய்டு சுரப்பிகளில் காயம் ஏற்படுதல் அல்லது முற்றிலுமாக பாராத்தைராய்டு சுரப்பிகளை அகற்றுதல்.
- பிற காரணங்கள் பின்வருமாறு:
- அதிதைராய்டியத்திற்கான கதிரியக்க அயோடின் சிகிச்சையை வழங்கும் போது பாதிப்பு ஏற்படுகிறது.
- குரோமோசோம்கள் சம்பந்தமான சில நோய்களுடன் இணைந்து இது ஏற்படலாம் (மரபணுப் பொருட்களை எடுத்துச்செல்லும் கட்டமைப்புகள்) போன்ற டைஜார்ஜ் நோய்க்குறி, அட்ரீனல் ஹார்மோன் பற்றாக்குறை அல்லது அடிசன்ஸ் நோய் போன்றவற்றாலும் இநோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
- சீரம் மெக்னீசியம் சாதாரண அளவை விட குறைவாக இருப்பது.
- தன்னுடல் தாக்கு நோய்கள் (ஒரு நோயாளியின் அவரது நோய் எதிர்ப்பு அமைப்பே உடலின் செல்கள் மற்றும் திசுக்களை தாக்குவது) பாராத்தைராய்டு சுரப்பிகளை பாதிக்கிறது.
- பிறந்ததிலிருந்து பராதைராய்டு சுரப்பிகள் இல்லாமல் இருப்பது (பிறவி ஹைப்போபாராதைராய்டிசம்).
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
நோயின் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டு மற்றும் நோயின் விரிவான மருத்துவ பின்புலம், மருத்துவ மதிப்பீடு, மற்றும் நோயின் முழுமையான தன்மை ஆகியவற்றை கேட்டறிந்து நோயறிதல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
சோதனைகள் உள்ளடக்கியவை:
- கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் கிரியேட்டினைன் அளவுகளை மதிப்பீடு செய்ய இரத்த பரிசோதனைகள்.
- பாராத்தைராய்டு ஹார்மோன் சோதனை.
- கால்சியம் வெளியேற்றத்தை மதிப்பிடுவதற்கான சிறுநீர் சோதனை.
- இதய தசைகளை பரிசோதிக்க எலெக்ட்ரோ கார்டியோகிராம் (ஈசிஜி), கண்புரையை சரிபார்க்க கண் மருத்துவரை ஆலோசிக்க வலியுறுத்தப்படுகிறது.
நோயின் அறிகுறிகளில் இருந்து நிவாரணமடைய எலும்புகள் மற்றும் இரத்ததில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவுகள் சரியாக அளவில் இருப்பதை உறுதி செய்வதே சிகிச்சையின் நோக்கமாகும். பிற சிகிச்சை முறைகள் உள்ளன:
- கால்சியம் மற்றும் வைட்டமின்-டி க்கான வாய்வழி மாற்று மற்றும் கூடுதல் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
- பாராத்தைராய்டு ஹார்மோன் ஊசி தேவைப்படலாம்.
- நோயின் தீவிரமான நிலைகளில், நரம்புகள் வழி கால்சியம் ஊசிகள் வழங்கப்படும்.
- முக்கிய அறிகுறிகளான (இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, சுவாசம் மற்றும் உடல் வெப்பநிலை) மற்றும் இதயத்தாளம் ஆகிவற்றை தொடர்ந்து கண்காணித்தல் கடுமையான சந்தர்ப்பங்களில் அவசியமாகும்.