மெக்னீசியம் குறைபாடு என்றால் என்ன?
உடலில் உள்ள மெக்னீசியம் சாதாரண அளவை விட குறைவாக இருப்பதே மெக்னீசியம் குறைபாடு ஆகும். இதுவே ஹைப்போமெக்னிசெமியா (இரத்தத்தில் மெக்னீசியச் சத்துக் குறைப்பாட்டிற்கு) வழிவகுக்கிறது. மெக்னீசியம் ஒரு அத்தியாவசிய கனிமமாகும், இது கிட்டத்தட்ட அனைத்து உடல் திசுக்களுக்கும், குறிப்பாக நரம்புகளுக்கு அதி முக்கியமாக தேவைப்படும் ஒரு உடல் வேதிப்பொருளாகும். மெக்னீசியம் குறைபாடானது ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்புப்புரை) உடன் சேர்ந்து மாதவிடாய் நின்ற பெண்களின் மத்தியில் மிகவும் பொதுவாக காணப்படக்கூடிய உடல் உபாதையாக உள்ளது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
- மெக்னீசியம் குறைபாட்டின் ஆரம்ப தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- மிதமான மக்னீசியம் குறைபாடிலிருந்து தீவிரமான மக்னீசியம் குறைபாடு வரை உள்ள அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- கால்களில் உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு.
- தசை பிடிப்பு மற்றும் இறுக்கம்.
- வலிப்பு மற்றும் நடுக்கம்.
- ஹைபோக்கலேமியா (குறைந்த பொட்டாசியம் அளவுகள்), ஹைபோகால்செமியா (குறைந்த கால்சியம் அளவு),மற்றும் சோடியம் தேக்கம்.
- நடத்தை மாற்றங்கள் மற்றும் மோசமான நினைவாற்றால்.
- கார்டியாக் அரித்திமியாக்கள் (அசாதாரணமான இதய துடிப்புடன் கூடிய ஒரு நிலை).
- கரோனரி பிடிப்புக்கள் (இதயத்தின் இதய தமனிகளின் சுவர்களில் தசைகளை இறுக்குவது).
- டெட்டனி (விரல்கள் மற்றும் கால்விரல்களின் தசைப்பிடிப்புகளுடன் கூடிய ஒரு நிலை).
மெக்னீசியம் குறைபாடு ஹைப்பர்டென்ஷன் (உயர் இரத்த அழுத்தம்), ஆஸ்துமா, கரோனரி இதய நோய்கள், மாற்றப்பட்ட குளுக்கோஸ் ஹோமியோஸ்டாசிஸ் (சமநிலை), ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்புகள் தாமதமாகவும் பலவீனமாகவும் இருப்பதால் எலும்புகளில் எலும்புப்புரை ஏற்படுவது) நாள்பட்ட சோர்வு நோய் மற்றும் ஒற்றைத்தலைவலி.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
உணவு சரியாக உண்ணாதிருத்தல் மிக அரிதாகவே மெக்னீசியம் குறைபாட்டை உடலில் விளைவிக்கிறது. இது வழக்கமாக மற்ற நிலைமைகளுடன் தொடர்புடையது.
மக்னீசியத்தின் பற்றாக்குரையின் காரணங்கள் பின்வருமாறு:
- இது பெரும்பாலும் நீரிழிவு டைப் II மற்றும் கிரோன் நோய், பெருங்குடல் அழற்சி, செலியாக் நோய், குறுகிய குடல் நோய்க்குறி, மற்றும் விப்பிள்ஸ் நோய் போன்ற செரிமான கோளாறுகளுடன் தொடர்புடையது.
- ஹார்மோன் குறைபாடுகள் மற்றும் சிறுநீரகம் சார்ந்த (சிறுநீரக) நோய்கள்.
- மது அருந்துதல்.
- இரைப்பை குடல் புண்கள் மற்றும் ரிஃப்ளக்ஸ் நோய் ஆகியவற்றிற்கு நீண்டகாலமாக எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகளின் பயன்பாடு.
- வேதியியல் நோய்த்தடுப்பு மருந்துகள், சிறுநீரிறக்கிகள், மற்றும் சில நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்ற மருந்துகள்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
உங்கள் மருத்துவ வரலாறு மற்றும் உடல் பரிசோதனையுடன் மருத்துவர் மெக்னீசியம் அளவுகள் அறிந்துகொள்ள உங்கள் இரத்தத்தை பரிசோதிப்பா.
சாதாரண மெக்னீசியம் அளவுகள் 1.3 முதல் 2.1 மிலி சமமான/ L (0.65 லிருந்து 1.05 மிலி மோல் /லிட்டர்) வரை இருக்கும்.
நோயறிதலுக்குத் தேவைப்படும் பிற ஆய்வுகள் பின்வருமாறு:
- சிறுநீர் மெக்னீசியம் சோதனை.
- விரிவான வளர்சிதை மாற்ற சோதனைகள் (எலெக்ட்ரோலைட்டுகள், சிறுநீரக மற்றும் கல்லீரல் சோதனை செயல்பாடு, இரத்தத்தில் குளுக்கோஸ், மற்றும் இரத்தத்தில் அமிலம் மற்றும் காரத்தின் இருப்பு).
- உங்கள் அறிகுறிகளைப் பொறுத்து, உங்கள் மருத்துவர் உங்களுக்கு எலக்ட்ரோ கார்டியோகிராம் (ஈசிஜி) எடுக்க உத்தரவிவிடுவார்.
மெக்னீசியம் குறைபாடு சிகிச்சை:
- வாய்வழியாக மெக்னீசியம் பிற்சேர்ப்புகள் எடுத்தல்.
- நரம்பு வழியாக கூடுதல் மெக்னீசியம் செலுத்துதல்.
- மெக்னீசியம் மாற்றீடு ஒரு நாளைக்கு 600 மில்லி என்ற குறைந்தபட்ச அளவோடு ஆரம்பிக்கப்படுகிறது.
- நரம்பு வழியாக சத்து திரவங்கள் ஏற்றுவது (நரம்பு வழி அல்லது ஐ.வி).
- நிவாரணத்திற்கு நோய் அறிகுறிகள் சார்ந்த மருந்துகள்.
- மிக முக்கியமாக, இதற்கு காரணமான பிற மருத்துவ நிலையை கண்டறிந்து மதிப்பிட்டு சிகிச்சை அளிக்கப்படும்.