கைபோகிலைசிமியா என்றால் என்ன?
கைபோகிலைசிமியா, குறைந்த இரத்த குளுக்கோஸ் அல்லது குறைந்த இரத்த சர்க்கரை என்றும் அறியப்படுகிறது,இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஒரு முக்கிய மருத்துவ பிரச்சனையாகும். உடலின் முக்கிய ஆதார சக்தியான இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு, சாதாரணமான அளவிற்கும் கீழே செல்லும்போது கைபோகிலைசிமியா நிலை ஏற்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
- மிதமான மற்றும் லேசான அறிகுறிகள் பின்வருமாறு:
- ஒழுங்கற்ற இதயத்துடிப்பு.
- களைப்பு.
- அதிரும் அல்லது நிலைகுலைந்துள்ள உடல்.
- வெளிறிய தோல்.
- கவலை.
- வியர்த்தல்.
- பசி.
- எரிச்சல்.
- வாயைச்சுற்றி ஏற்படும் கூச்ச உணர்வு.
- குழப்பம், தன்னிலையிழத்தல் மற்றும் தலைச்சுற்று.
- பலவீனம்.
- கடுமையான அறிகுறிகள் பின்வருமாறு:
- தூக்கத்தின் போது ஏற்படும் அறிகுறிகள் பின்வருமாறு:
- பதற்றமூட்டும் கனவு.
- உடைகள் நினையும் அளவிற்கு வெளிப்படும் அதிகப்படியான வியர்வை.
- காலையில் எழுந்ததும் சோர்வு மற்றும் களைப்பு.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
- கைபோகிலைசிமியாவின் பொதுவான காரணம் இவை
- நீரிழிவு நோய்க்கு சிகிச்சையாக எடுத்துக்கொள்ளும் மருந்துகள், அதாவது, சல்போனைல்யூரியாக்கள் அல்லது மெக்லீட்டினிட்ஸ்.
- குறிப்பாக வெறும் வயிற்றில் மது அருந்துதல்.
- கணையத்தில் வரும் கட்டி, அதன் விளைவாக அதிக இன்சுலின் உற்பத்தியால், உடலில் குறைந்த இரத்த குளுக்கோஸ் அளவிற்கு வழிவகுக்கிறது (இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் ஒரு ஹார்மோன்).
- இன்சுலின் மிகைப்பு மற்றும் குளுக்கோஸ் வளர்ச்சிதையில் ஏற்படும் கோளாறுகள்.
- ஆபத்து காரணிகள் பின்வருமாறு:
- தாமதமாக உணவு உண்ணுதல் அல்லது உணவை முற்றிலுமாக தவிர்த்தல்.
- கார்போஹைட்ரேட் பற்றாக்குறை.
- நோயுற்றிருப்பது.
- அதிகமான உடல் செயல்பாடு.
- சிறுநீரக நோய்கள்.
- கல்லீரல் நோய்கள்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
நீரிழிவுக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டால்,இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை ஒரு குளுக்கோமீட்டர் கொண்டு .எப்போதும் பரிசோதித்துக் கொள்ளவேண்டும். இரத்தச் சர்க்கரைக் குறைபாட்டை கண்டறிய உங்கள் மருத்துவர் உடல் பரிசோதனையை செய்ய உங்கள் மருத்துவ பின்புலத்தை விவரமாக விசாரிப்பார். எனினும்,கைபோகிலைசிமியாவின் நோய்க்கான கடுமையான அறிகுறிகள் தெளிவாக தென்படின் உங்கள் மருத்துவர் உடனடியாக சிகிச்சையை ஆரம்பிப்பார். நீங்கள் ஆரம்பத்தில் மருத்துவரிடம் செல்லும்போது எந்த அறிகுறிகளும் இல்லை என்றால் மருத்துவர் உங்களை ஒரு இரவு முழுவதும் உணவு உண்ணாமலிருந்து பின்னர் சிலபரிசோதனைக்கு பரிந்துரைப்பார்.
பரிசோதனைகள் பின்வருமாறு:
- உணவிற்கு முன்பும் மற்றும் பின்பும் சர்க்கரையின் அளவை அளவிடுவதற்கு சோதனைகள்.
- அறிகுறிகள் ஏற்படும் போது இரத்தத்தின் சர்க்கரை அளவை கண்டறிவதற்கான சோதனைகள்.
கைபோகிலைசிமியாவின் உடனடி சிகிச்சையாக 15 முதல் 20 கிராம் அளவுள்ள கார்போஹைட்ரேட்டுகள், குளுக்கோஸ் மாத்திரைகள், பழச்சாறுகள் அல்லது சர்க்கரை மிட்டாய்கள், தேன் அல்லது வெறும் சர்க்கரை ஆகியவை உடலில் எளிதாக குளுக்கோஸாக மாற்றப்படுகின்றன.
தீவிர நிலைமைகளில் ஊசி அல்லது நரம்புகளில் குளுக்கோஸ் அளிக்கப்படுகின்றன.
சிகிச்சைக்கு பின்னர் இரத்த சர்க்கரை அளவுகள் உடனடியாக ஒவ்வொரு 15 நிமிடத்தில் சோதனை செய்யப்பட வேண்டும் மற்றும் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். இந்த குறைபாட்டிற்கு காரணமாக அமையும் மருத்துவ நிலைகளான நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளித்தல் அல்லது கணையத்தின் கட்டி அகற்றுவதற்கான மருந்துகளில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன.