ஹைப்பர்பாராதைராய்டிசம் என்றால் என்ன?
தைராய்டு சுரப்பிக்கு அருகில் உள்ள சிறிய சுரப்பிகள் பாராத்தைராய்டு சுரப்பிகள் எனப்படும். நமது உடலில் மொத்தம் நான்கு பாராத்தைராய்டு சுரப்பிகள் உள்ளன. இந்த சுரப்பிகள் உடலின் ரத்தத்தில் கால்சியம் அளவினை கட்டுப்படுத்தும் வேலையை செய்கிறது. உடலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அதிக செயல்பாடுள்ள பாராத்தைராய்டு சுரப்பிகளால் அதிகமாக சுரக்கப்படும் பாராத்தைராய்டு ஹார்மோன் நிலையே ஹைப்பர்பாராதைராய்டிசம் என்று குறிப்பிடப்படுகிறது. பொதுவாக இந்த நிலை 50 வயது அல்லது அதற்கு மேற்பட்டுள்ள பெண்களிடம் அதிகமாக காணப்படுகிறது. பாராத்தைராய்டு அதிக அளவு சுரப்பதால் அது இரத்தத்தில் கால்சியம் அளவினை அதிகரிக்க வழிவகுக்கிறது, இதன் விளைவாக எலும்புகளில் கால்சியம் செறிவு குறைபாடு காணப்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
- லேசான ஹைப்பர்பாராதைராய்டிசம் பின்வரும் அறிகுறிகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்:
- எலும்புகள் மற்றும் மூட்டுகளில் வலி.
- பலவீனமான தசைகள்.
- சோர்வு.
- மன அழுத்தம்.
- பசியின்மை.
- செரிமான பிரச்சனை.
● கடுமையான ஹைப்பர்பாராதைராய்டிசத்துடன் தொடர்புடைய அறிகுறிகள் பின்வருமாறு:
- குமட்டல் மற்றும் வாந்தி.
- குழப்பம்.
- அதிகமாக தாகம் எடுத்தல் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
● மற்ற அறிகுறிகள் பின்வருமாறு:
- எலும்புத் தேய்தல் (ஆஸ்டியோபோரோசிஸ்).
- குறைவான சிறுநீரக செயல்பாடு.
- சிறுநீரக கற்கள்.
- உயர் இரத்த அழுத்தம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இரண்டு வகையான ஹைப்பர்பாராதைராய்டிசம் உள்ளது, அதாவது:
- முதல்நிலை ஹைப்பர்பாராதைராய்டிசம்: இந்த நிலையில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அதிக செயல்பாடுள்ள பாராத்தைராய்டு சுரப்பிகள் காரணமாக அதிகமான பாராத்தைராய்டு ஹார்மோன்கள் சுரப்பதை இந்த முதல் நிலை என்பதைக் குறிக்கிறது, ஏனென்றால் இந்த குறிப்பது நேரடியாக பாராத்தைராய்டு சுரப்பிகளின் காரணமாக ஏற்படுவதால் ஆகும். பாராத்தைராய்டு சுரப்பிகளின் மீது உண்டாகும் கட்டியோ அல்லது தீங்கற்ற வளர்ச்சி கட்டிகளினாலோ இந்த அதிகப்படியான ஹார்மோன் (அடேனாமா எனப்படும் அதிகப்படியான ஹார்மோன் சுரப்பதே 80% நோயாளிகளில் முதன்மையான ஹைப்பர்பாராதைராய்டிசத்திற்கு முக்கிய காரணியாகும்).
- இரண்டாம் நிலை ஹைப்பர்பாராதைராய்டிசம்: இது ஒரு அடிப்படை மருத்துவ நிலையின் விளைவாக, பாராத்தைராய்டுசுரப்பிகள் அதிகமாக சுரக்கவும் மற்றும் பாராத்தைராய்டுஹார்மோனின் அதிகமான சுரப்பிற்கும் காரணமாகிறது.
- இரத்தத்தில் கால்சியம் அளவுகள் குறைவாக இருத்தலால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுதல்.
- பரம்பரை அல்லது மரபணு காரணிகள்.
- வைட்டமின் டி கோளாறுகள்.
- உடலில் உணவு உறிஞ்சப்படுவதில் சிக்கல் ஏற்படுவதினால் இரண்டாம் நிலை ஹைப்பர்பாராதைராய்டிசம் ஏற்பட ஒரு சில காரணிகளாக அமைகிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
நோயாளியின் மருத்துவ அறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய நோய் அறிகுறிகளின் மதிப்பீடு ஆகியவற்றை பொருத்து ஹைப்பர்பாராதைராய்டிசம் நோயறிதலை கண்டறிய தேவையான பரிசோதனைகளை செய்ய மருத்துவர் அறிவுறுத்துவார்.
- ஆய்வுகள் அடங்கியவை:
- இரத்தத்தில் உள்ள கால்சியம் மற்றும் பாராத்தைராய்டு ஹார்மோன் அளவை மதிப்பிடுவதற்கான இரத்த பரிசோதனைகள்.
- டெக்ஸா ஸ்கேன் என்று அழைக்கப்படும் எலும்பின் அடர்த்தி விகிதத்தை கண்டறியும் ஸ்கேன் சோதனை.
- அடிப்படை சிறுநீரக நோயைக் கண்டறிவதற்கான சிடி ஸ்கேன் மற்றும் அல்ட்ராசோனோகிராபி சோதனை.
- வைட்டமின் D அளவுகளை கண்டறிய சோதனை.
வழக்கமாக இந்த முதல்நிலை ஹைப்பர்பாராதைராய்டிசம் பிரச்னையை சரிசெய்ய அறுவை சிகிச்சை முறை தேவைப்படுகிறது. அதிகமாக ஹார்மோன்களை சுரக்கும் பாராத்தைராய்டுசுரப்பி அல்லது கட்டிகளை நீக்குதல் இந்த முதல்நிலை ஹைப்பர்பாராதைராய்டிசம் நோயாளிகளுக்கு நல்ல விளைவைத் தரும்.
- அறுவை சிகிச்சை முறைகளாவன:
- குறைந்தபட்சமாக துளையிடும் பாராத்தைராய்டெடுப்பு அதிக செயல்பாடுளை சுரப்பிகள் மட்டும் கண்டறியப்பட்டு பிரித்தெடுக்கப்படுகிறது.
- கழுத்துவழி ஆய்வுகள்: நான்கு வகையான பாராத்தைராய்டுசுரப்பிகளும் அறுவை சிகிச்சை மூலம் ஆராயப்பட்டு அதிக செறிவுள்ள சுரப்பிகள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
- லேசான ஹைப்பர்பாராதைராய்டிசம் இரத்த பரிசோதனைகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வைட்டமின் D மற்றும் கால்சியம் போன்ற மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. உணவு, ஊட்டச்சத்து, மற்றும் உடல் சார்ந்த சிகிச்சை முறைகளும் ஹைப்பர்பாராதைராய்டிசத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
- இரண்டாம்நிலை ஹைப்பர்பாராதைராய்டிசம் பிரச்சனைக்கு அடிப்படை நிலையில் இருந்து சிகிச்சை அளிப்பது அவசியமாகிறது. கால்சிமிமிடிக்ஸ் என்று அறியப்படும் மருந்துகளின் ஒரு தொகுப்பானது துணை சேர்ம சிகிச்சையாக பரிந்துரைக்கப்படலாம்.