சுருக்கம்
எய்ட்ஸ் நோய்க்கு அதாவது பெறப்பட்ட நோய்த்தடுப்பு குறைபாடுக்கு காரணமான, எச்.ஐ.வி என்பது ஹியூமன் இம்முனோடிஃபிசியன்சி வைரஸ் என்பதன் சுருக்கமாகும். இந்த வைரஸ் பொதுவாக உடலுறவின் மூலம் உடல் திரவங்கள் வழியாக, தொற்றுள்ள ஊசிகள் மூலம் இரத்தத்தின் வழியாக அல்லது பாதிக்கப்பட்ட அம்மாவிடமிருந்து அவள் குழந்தைக்குப் பரவுகிறது. இந்த வைரஸ் நோய் எதிர்ப்பு அமைப்பைத் தாக்கி, உடலின் பெரிய பாதுகாப்பு அமைப்பை செயலிழக்க வைத்து, அந்த நபரை மற்ற நோய்த்தொற்று மற்றும் வியாதிகளுக்கு இலக்காக்குகிறது. எச்.ஐ.வி-1 மற்றும் எச்.ஐ.வி-2 என இரண்டு வகையான வைரஸ்கள் இருக்கின்றன. இந்த நோய் ஒரு தீவிர நிலையில் இருந்து நாள்பட்ட நிலைக்கு வளர்ந்து, இறுதியாக வாழ்நாளைக் குறைக்கக் கூடிய எய்ட்ஸ்க்கு கொண்டு செல்கிறது. அறிகுறிகள், நிலை 1இல் காய்ச்சல் போன்ற ஒரு நிலையிலிருந்து, நிலை 2இல் அறிகுறிகள் குறைந்து கொண்டு வருவது , நிலை 3இல் புற்றுநோய் மற்றும் உறுப்பு செயலிழப்பு போன்ற தீவிரமான பிரச்சினைகள் ஏற்படுவது என வேறுபடுகின்றன. போதைப்பழக்கம் உள்ளவர்கள், பாதுகாப்பற்ற உடலுறவு கொள்பவர்கள் மற்றும் ஆண்குறியின் நுனித்தோலை அகற்றாதவர்கள் எச்.ஐ.வி வருவதற்கான மிக அதிக அபாயத்தில் இருக்கிறார்கள்.
இரத்தப் பரிசோதனைகள் மற்றும் வீட்டில் செய்யப்படும் சோதனைகள் நிலையைக் கண்டறிய உதவுகிறது, ஆனால் முடிவினை உறுதி செய்ய, அதைத் தொடர்ந்து மேற்கத்திய புள்ளி சோதனை செய்யப்பட வேண்டும். எச்.ஐ.வி/எய்ட்ஸ் குணப்படுத்த முடியாதது, ஆனால், ரெட்ரோவைரஸ் எதிர்ப்பு சிகிச்சையைக் (ஏ.ஆர்.டி) கொண்டு பெரிய அளவில் சமாளிக்கப்படக் கூடியது. எச்.ஐ.விக்கான பெரும்பாலான மருந்துகள், வைரஸ் பெருகுவதற்கு உதவக்கூடிய குறிப்பிட்ட புரதங்கள் உருவாவதைத் தடுக்கும் தடுப்பிகள், மற்றவை சி.டி.4 எனப்படும் குறிப்பிட்ட நோய் எதிர்ப்பு செல்களுக்குள் நுழைந்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் அடிப்படையைப் பாதிக்கக் கூடிய, வைரஸைத் தடுக்கின்றன. உணவுப் பழக்கத்தில் சில மாறுதல்கள் மற்றும் சிகிச்சையைப் பெறுவதிலும், மன மற்றும் உடல் அழுத்தங்களை சமாளிப்பதிலும் குடும்பத்தினரின் ஆதரவும், நிலைமையை நன்கு சமாளிக்க உதவுகிறது. சிகிச்சையின் பக்க விளைவுகள், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியின் காரணமாக வளரும் இணைந்த நோய்கள் மற்றும் நிலை 3இல் பாதிக்கக்கூடிய புற்றுநோய் உட்பட பலவிதமான சிக்கல்கள் இருக்கக் கூடும். எய்ட்ஸ் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கப்படும் வாழ்நாட்கள் 10 வருடங்கள் வரை இருக்கும் பொழுது, சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டால், எச்.ஐ.வி உள்ள நபர்கள் 50 வருடங்கள் வரை நோய்த்தொற்றுடனே, இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.