அளவுக்கு மீறிய முடி வளர்ச்சி (ஹிர்சுடிசம்) என்றால் என்ன?
பெண்கள் அதிகமான முடி வளர்ச்சியைக் கொண்டிருக்கும் ஒரு பொதுவான நிலைதான் அளவுக்கு மீறிய முடி வளர்ச்சி என்பதாகும் .இது அனைத்து வயது பெண்களிடமும் ஏற்படலாம் மற்றும் இதனால் சமூக, உளவியல் மற்றும் சுயமரியாதை பிரச்சினைகள் ஏற்படலாம்.
இந்த நிலை மிகவும் பொதுவானது மற்றும் உலக மக்களில் 5-10 சதவிகிதம் மக்களை இது பாதிக்கிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பருவம் அடைதல் இந்த அதீத முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதன் முக்கிய அறிகுறி ஆண்களை போன்று பெண்களுக்கும் முடி வளர்ச்சி ஏற்படுதல். மேலும், உச்சந்தலையில் வளரும் முடியை போன்று கீழ் கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் முடி வளரும்:
- மேல் உதடு.
- சைடுபர்ன்ஸ்.
- கண்ணம்.
- முலைக்காம்புகளைச் சுற்றியுள்ள பகுதி.
- அடிவயிற்றின் கீழ் பகுதி.
பொதுவாக காணப்படும் மற்ற அறிகுறிகள்:
- எண்ணெய் தோய்த்த சருமம்.
- வழுக்கை தலை.
- முகப்பரு.
- ஒழுங்கற்ற மாதவிடாய்.
- சத்தமான குரல்வளை.
- பெண்குறி மூலத்தில் மாற்றங்கள்.
- கருவுறாமை.
எனினும் முதிர்ந்த நோயாளிகளில், இந்த முடிவளர்ச்சி பொதுவாக பின்புற முதுகுப்பகுதி, மார்பின் மைய பகுதி மற்றும் அடிவயிறை சுற்றி முழுவதும் அல்லது அடிவயிற்றின் மேல்பகுதியில் காணப்படுகிறது.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
பெண்களில் சுரக்கும் அதிகமான ஆண்ட்ரோஜென் நிலை இந்த அதீத முடிவளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாகும். அதுமட்டுமன்றி பின்வரும் காரணிகளும் இருக்கின்றன:
- பாலிசிஸ்டிக் கருப்பை நோய்க்குறி (பிசிஓஎஸ்) மற்றும் உடல் பருமன்.
- மாதவிடாய் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஹார்மோன் ஏற்றத்தாழ்வு.
- மருந்துகள்.
- அட்ரீனல் ஹைபர்பிளாசியா.
- குஷிங் சிண்ட்ரோம்.
- தைராய்டு செயலிழப்பு.
- மிக அரிதான நிகழ்வுகளில், ஆண்ட்ரோஜென்-சுரக்கும் கட்டிகள் ஹிர்சுடிசத்திற்கு காரணமாக இருக்கலாம்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
இந்த அதிக முடி வளர்ச்சியின் காரணத்தை கண்டறிய ஒரு முழுமையான உடல் பரிசோதனையைத் தொடர்ந்து கருப்பையின் நிலையை அறிய அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மற்றும் ஒரு மருத்துவ வரலாறு செய்யப்படும். நோயறிதலை உறுதிசெய்ய ஆன்ட்ரோஜன் அளவு பரிசோதிக்கப்படலாம்.
மிதமான முடி வளர்ச்சியைக் கொண்ட பெண்கள், இந்த நிலைமையை சரிசெய்ய ஒப்பனை வழிமுறைகளைப் பயன்படுத்தலாம். இதில் அடங்கியவை:
- வெளிறச்செய்தல்.
- முடி நீக்குதல்.
- மெழுகு பயன்படுத்தி முடியை நீக்குதல்.
- முடியைப் பிடுங்குதல்.
- மின்னாற்பகுத்தல்.
- முடி நீக்கும் சிகிச்சை.
- லேசர் சிகிச்சை.
இந்த அதிக முடிவளர்ச்சியை சரிசெய்ய ப்ளக்கிங் (முடியைப் பிடுங்குதல்) ஒரு குறுகிய கால வழிமுறையாகும் மற்றும் லேசர் சிகிச்சை முறை கண்ணுக்கு தெரியும் தேவையற்ற முடிகளை நீக்க மிக சிறந்த் நீண்ட கால சிகிச்சை முறையாகும்.
ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டின் கருத்தடை மாத்திரைகள், ஆண்ட்ரோஜென் ஹார்மோன்களின் விளைவு மற்றும் முடி வளர்ச்சி விகிதத்தை குறைக்கின்றன.
மருத்துவர்கள் மிதமான அல்லது கடுமையான நிலைக்கு சிகிச்சையளிப்பதற்காக ஆண்ட்ரொஜென் எதிர்ப்பிகளைப் பயன்படுத்தலாம். மற்ற சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
- எஃப்லோர்னிதின் கிரீம்.
- சிப்ரோடரோன் அசிடேட்.
- ப்ளுததமிதே.
- பினஸ்டிரைடு.