சுருக்கம்
உடலில் யூரிக் அமிலம் என்பது, அசாதாரணமான அளவில், உடம்பில் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும் ஒரு உடல்நலப் பிரச்சினையாகும். புரதங்கள் உடைக்கப்பட்ட பிறகு, உடலில் யூரிக் அமிலம் உருவாக்கப்படுகிறது. புரதங்கள் உடைக்கப்படும் பொழுது, அவற்றுள் இருக்கும் ப்யூரின்கள் எனப்படும் வேதிப்பொருள் யூரிக் அமிலமாக உடைக்கப்படுகிறது. யூரிக் அமில அளவுகள் உடலில் அதிகரிப்பது மூன்று முக்கியக் காரணங்களால் ஏற்படலாம்- அதிகரிக்கப்பட்ட யூரிக் அமில உற்பத்தி, குறைவான யூரிக் அமில வெளியேற்றம், அல்லது இந்த இரண்டு இயக்க முறைகளின் சேர்க்கை.
உடலில் யூரிக் அமிலம் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் (அறிகுறியின்மை) அல்லது இணைந்த அறிகுறிகளோடு (அறிகுறித்தன்மை) இருக்கக் கூடும். இணைந்த அறிகுறிகளோடு உடலில் யூரிக் அமில அளவுகள் அதிகரிப்பதன் விளைவாக ஏற்படும் மருத்துவப் பிரச்சினைகள் அதிகம் உள்ளன. அவற்றுள் யூரிக் அமில சிறுநீரக நோய் (சிறுநீரில் அதிகரித்த யூரிக் அமில அளவு காரணமாக சிறுநீரகத்தின் செயல்பாடுகள் குறைதல்), முடக்குவாதம் (இரத்த சுழற்சியில் இருக்கும் அதிகரித்த யூரிக் அமில அளவுகளின் காரணமாக மூட்டுக்களில் சிறுநீர் உப்புப் படிமம் சேருதல்), மற்றும் யூரிக் அமில சிறுநீரக கல் (யூரிக் அமில சிறுநீரக கற்கள்) ஆகியவை அடங்கும். உடலில் யூரிக் அமிலத்தோடு இணைந்த அறிகுறிகள் எதுவும் இல்லையென்றால், வழக்கமாக சிசிக்சை பரிந்துரைக்கப்படாது, ஆனால், அறிகுறிகள் உள்ள உடலில் யூரிக் அமிலத்துக்கு மருத்துவமனை நடைமுறைகளின்படி சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. உடலில் யூரிக் அமிலத்தினால் ஏற்படும் பிரச்சினைகளில், முடக்குவாதம், தீவிரமான யூரிக் அமில சிறுநீரக நோய், யூரிக் அமில சிறுநீரக கல், நாள்பட்ட சிறுநீரக பற்றாக்குறை ஆகியவை அடங்கும்.