ஹிட்ராடீனீடிஸ் சர்புரேடிவா என்றால் என்ன?
ஹிட்ராடீனீடிஸ் சர்புரேடிவா என்பது ஆக்னே இன்வெர்சா என்றும் அழைக்கப்படுகிறது.இது வியர்வை சுரப்பிகளின் சீழ்வைப்புத் தூண்டுகிற ஒரு அரிதான நோய்த் தொற்றாகும்.இந்த நோய்த்தொற்றானது நாள்பட்ட, தீவிரமான மற்றும் மீண்டும் மீண்டும் ஏற்படக் கூடியதாக உள்ளது.இது வழக்கமாக அக்குள், கவட்டி அல்லது ஆசன வாய் பகுதிகளில் கொப்புளங்கள் தோன்றுவதன் மூலமாக குறிப்பிடும் வகையில் தொடங்குகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
- ஆரம்ப கால தாக்கங்களும் அறிகுறிகளும் பின்வருமாறு:
- முகப்பரு (ஆக்னே) போன்று தோன்றும் ஒன்று அல்லது பல கணு புடைப்புகள்.
- இந்த புடைப்புகள் சருமத்தில் நிலைத்திருக்கும் அல்லது மறைந்து போகும்.
- சருமம் ஒன்றோடொன்று உரசிக்கொள்ளும் பகுதிகளான அக்குள், கவட்டி, பிட்டம், மேல் தொடைகள், மார்பகங்கள் போன்றவற்றில் இது பொதுவாக தோன்றுகிறது.
- பிற்கால தாக்கங்களும் அறிகுறிகளும் பின்வருமாறு:
- கொப்புளங்கள் அல்லது பிளவுகள் வலிமிகுந்தன.அவை குணமடைவது மீண்டும் தோன்றுவதற்காகத்தான்.
- கொப்புளங்கள் வெடித்து, அதிலிருந்து துர்நாற்றம் மிக்க திரவங்கள் வெளியேறலாம்.
- சருமத்தின் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள வடுக்கள் தடிமனாகிவிடும்.
- சுரங்கப்பாதை போன்ற பாதைகள் சருமத்தில் ஆழமாகத் தோன்றி சருமம் பஞ்சு போன்று தோன்றும்.கட்டிகள் வழக்கமாக சருமத்திற்கு அடியில் சுரங்கப்பாதையின் இரு முனைகளிலும் காணப்படுகின்றன.
- கடுமையான நோய்த்தொற்று.
- சரும புற்றுநோய்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
ஹிட்ராடீனீடிஸ் சர்புரேடிவா ஏற்படுவதற்கான சரியான காரணம் தெரியவில்லை.பாக்டீரியா மற்றும் பிற பொருட்கள் ஒரு மயிர்க்காலுக்குள் சிக்கிக் கொள்ளும்போது, இந்த நோய் தொடங்குகிறது.
மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் இந்த நிலை ஏற்படுவதுடன் தொடர்புடையன ஆகும்.
ஆபத்து விளைவிக்கும் காரணிகள் பின்வருமாறு:
- பலவீனமடைந்த நோய் எதிர்ப்பு அமைப்பு.
- உடற் பருமன்.
- புகைப்பிடித்தல்.
- இலித்தியம் எடுத்துக்கொள்ளுதல்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
ஹிட்ராடீனீடிஸ் சர்புரேடிவாவை கண்டறியும் பொருட்டு, உங்கள் மருத்துவர் உங்களின் மருத்துவம் சார்ந்த வரலாற்றை அறிந்து, நோயின் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகளை மதிப்பீடு செய்வார்.
இதற்கான ஆய்வு முறைகள் பின்வருமாறு:
- மற்ற நோய்த் தொற்றை கண்டறிய இரத்த பரிசோதனைகள்.
- பிற நோய்த் தொற்றை புறக்கணிக்க துடைப்பு மூலம் சீழை சோதனை செய்தல்.
உங்கள் தோல் நோய் மருத்துவர் வலி நிவாரணிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்துகளுடன் கூடிய அறிகுறி சார்ந்த சிகிச்சையை பரிந்துரை செய்யக்கூடும்.
உங்கள் மருத்துவர் சில ஸ்டீராய்டுகளுடன் சேர்த்து நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பரிந்துரை செய்வார்.
இயக்குநீர் மருத்துவம் ஹிட்ராடீனீடிஸ் சர்புரேடிவா சிகிச்சைக்கு நன்மை பயக்கக்கூடியதாக உள்ளது.
கடுமையான நிலைமைகளில், அறுவை சிகிச்சை தேவைப்படக்கூடும்.