ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன?
ஹீட் ஸ்ட்ரோக் என்பது ஒரு அவசர மருத்துவ நிலை, இந்நிலையின் போது உடலின் வெப்பநிலை 40°C அல்லது அதற்கு மேல் அதிகரிப்பதோடு சூரிய வெளிப்பாட்டுக்கு உட்படும் போது இதனால் சாதாரண வெப்ப நிலையை தானாகவே கையாள முடியாத நிலை ஏற்படுகின்றது. பொதுவாக, நமது உடல் அதிக வெப்பநிலையினை வேர்வையின் மூலம் வெளியேற்றி சமநிலைக்கு கொண்டு வருகின்றது, ஆனால் இந்நிலையில் நமது உடல் அதை செய்ய தவறிவிடுகிறது. இந்த ஹீட்-சார்ந்த நோய்கள் பொதுவாக கோடை கால சூழ்நிலையின் போது நீண்ட நேர சூரிய வெளிப்பாட்டினால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பாதிபேற்படுத்துவதை காணமுடிகிறது. அலுவலகமின்றி வெளிப்புற அமைப்புகளில் பணிபுரிபவர்களுக்கு இந்த ஹீட் ஸ்ட்ரோக்கின் பாதிப்பின் அபாயம் அதிகளவில் உள்ளது. இந்நிலை உடனடியாக கையாளப்படவில்லையெனில் இது மற்ற உள்ளுறுப்புகளுக்கு சேதம் விளைவிப்பதோடு மரணத்திற்கும் வழிவகுக்கலாம்.
இந்தியவின் டேட்டா காலதிற்கேற்ப வெப்பநிலை அதிகரிக்கும் போது ஹீட் ஸ்ட்ரோக்கை சார்ந்த இறப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கிறது என காட்டுகின்றன.
இதனுடன் தொடர்புடைய முக்கிய அடையாளம் மற்றும் அறிகுறிகள் என்ன?
ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் பின்வரும் பொதுவான அறிகுறிகளில் பலவற்றை கொண்டிருக்கலாம்:
- வேர்வையின்மையுடன் சிவந்த, சூடான, அல்லது வறண்ட சருமம்.
- மூச்சு திணறல்.
- மயக்கம்.
- சோர்வு.
- குமட்டல்.
- வாந்தி.
- தலைவலி.
- அதிகரித்த இதய துடிப்பு (மேலும் வாசிக்க: டாக்ரிக்கார்டியாவின் காரணங்கள்).
- குழப்பம்.
- எரிச்சலூட்டும் தன்மை.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
இதற்கான முக்கிய காரணம் சூரிய வெளிபாடேயாகும், மற்றும் இந்நிலையானது சூரிய ஒளியில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ செயல்படுபவர்கள் எதிர்கொள்ளக்கூடியது. ஹீட் ஸ்ட்ரோக்கால் அதிகமாக பாதிக்கப்பட கூடியவர்கள் பின்வருமாறு:
- கைக்குழந்தைகள்.
- முதியவர்கள்.
- வெளிப்புற பணியாளர்கள்.
- பருமனான நபர்கள் (மேலும் வாசிக்க: உடல் பருமனுக்கான சிகிச்சை).
- மன நோய் உடையவர்கள்.
- மது அருந்துபவர்கள்.
- போதிய திரவ உணவினை எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு, இது நீர்ச்சத்துக் குறைவு விளைவிக்கின்றது
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
இந்த ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவர்களை சரிசெய்ய நீங்கள் எடுக்கும் ஆரம்ப படிகளானது அவர்களை நிழலான மற்றும் குளிர்ச்சியான இடத்திற்கு மாற்றுவதே ஆகும். அதன் பிறகு, நீங்கள் ஈரமான துண்டுகளையோ அல்லது விசிறியினையோ உபயோகப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களின் உடல் வெப்பநிலையை குறைக்கவேண்டும். சாத்தியமானால், அக்குள் மற்றும் இடுப்பு பகுதியில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம். இந்த முதன்மையான கவனிப்புகளுக்கு பிறகு, நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்தல் அவசியம்.
மருத்துவமனையில், நோயாளியின் நிலையினை பொறுத்து மருத்துவர் தேவையான சிகிச்சைகளை செய்வார், அதாவது எடுத்துக்காட்டுக்கு மூச்சு திணறல் போன்றவை இருந்தால், அவை உடனடியாக கவனிக்கப்படும். உடல் வெப்ப நிலை இயல்பான வெப்பநிலையை (38° சி) அடையும் வரை மருத்துவர்கள் உடல் வெப்பநிலையை குறைப்பதற்கு வேண்டிய சிகிச்சைகளை தொடர்வார்கள். குறிப்பிட்ட சில ஆய்வக சோதனைகள் வேறேதும் நோய் தாக்குதல் இருக்கிறதா என்பதை கண்டறிய செய்யப்படுகிறது.
ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ள முடியும்:
- தண்ணீர் நிறைய குடிப்பதன் மூலம் முறையான நீரேற்றத்தை பராமரித்தல்.
- மெலிதான மற்றும் தளர்வான ஆடைகளை அணிதல்.
- சூரிய ஒளியில் குறைந்த நேரத்தை செலவிடுதல் குறிப்பாக அதிக வெப்பம் இருக்கும் வேலைகளான 12 மணி முதல் மாலை 3 மணி வரை.
- தொப்பி அல்லது ஸ்கேர்ப் அணிதல் அல்லது குடைப் பயன்படுத்துதல்.