வேனிற் கொப்புளம் என்றால் என்ன?
வேர்க்குரு என்று பொதுவாக அழைக்கப்படும் வேனிற் கொப்புளம் என்பது சருமத்தில் அரிப்புத் தன்மையுடன் கூடிய சிவப்பு நிற புள்ளிகள் உடலின் பல பகுதிகளில் தோன்றும் ஒரு சரும அல்லது தோல் நோய் ஆகும்.இது பொதுவாக வெப்பம் நிறைந்த கோடைகாலத்தில் நிகழ்கிறது, இந்த காலத்தில் சற்று அசௌகரியமானவிதத்தில் வழக்கத்தை விட அதிகமாக உடலில் வியர்க்கும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
வேனிற் கொப்புளத்தின் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் சருமத்தில் காணப்படுகின்றன மற்றும் இதனை அடையாளம் காண்பது மிகவும் எளிதானது.
இதன் அறிகுறிகள் பின்வருமாறு:
- சருமத்தில் சிவப்பு நிற புள்ளிகள் தோன்றுதல்.
- மேலோட்டமாக கொப்புளங்கள் உருவாகுதல்.
- சருமத்தில் அதிகமாக அரிப்பெடுத்தல்.
- நீங்கள் உடுத்தியிருக்கும் உடை உடலை உரசும் போது, அசௌகரியமான உணர்வு ஏற்படுதல்.
- சொற சொறப்பான சருமம்.
இந்த அறிகுறிகள் பொதுவாக கழுத்து, தோள்கள், மார்பு மற்றும் பின்புற பகுதிகளில் ஏற்படும்.சில சந்தர்ப்பங்களில், வேனிற் கொப்புளம் முழங்கைகள் மற்றும் கவட்டை மடிப்புகளிலும் உருவாகக் கூடும்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
நாம் வெயிலில் இருக்கும் போது, அதிகமாக வியர்க்கும்.அதிகப்படியான வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக வியர்வைச்சுரப்பிகள் அடைபடும் போது வேனிற் கொப்புளங்கள் உண்டாகிறது.இந்த அடைப்பின் காரணமாக, சருமத்தில் அழற்சி ஏற்பட்டு, இது அரிப்பு மற்றும் தோல் சிவத்தலுக்கு வழிவகுக்கிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
வேனிற் கொப்புளங்கள் பொதுவானவை என்பதால் வேறு எந்த சிக்கலையும் அது உண்டாக்குவதில்லை.இதன் அறிகுறிகள் சில நாட்கள் அல்லது ஒரு சில வாரங்கள் வரை நீடிக்கக் கூடும்.பொதுவாக எந்தவொரு சிகிச்சையுமின்றி, இது மறைந்துவிடும்.இருப்பினும், இந்த நிலை சிறிது அசௌகரியமாக இருப்பதால், அதைத் தடுக்கவும், சருமத்தின் அரிப்புத்தன்மையை தணிக்கவும் மருத்துவர்கள் சில வழிமுறைகளை பரிந்துரைக்கக் கூடும்.
இதனை தடுக்கும் நடவடிக்கைகள் பின்வருமாறு:
- சருமம் மூச்சு விடுவதற்கு ஏதுவாக, தளர்வான ஆடைகளை அணிதல்.
- குளிர்ந்த, வறண்ட சுற்றுப்புறச் சூழலில் இருத்தல்.
- உடல் பயிற்சிக்குப் பிறகு குளித்தல்.
- சரும எரிச்சலைத் தடுக்க மென்மையான ஆடைகளை அணிதல்.
கொப்புளங்கள் உள்ள பகுதிகளை குளிர்ந்த நீரில் கழுவுதல் மற்றும் சோற்றுக்கற்றாழை சாற்றை தடவுதல் போன்ற எளிய வீட்டு வைத்தியங்கள் அரிப்பிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.
வியர்வைச் சுரப்பிகள் பாதிக்கப்பட்டிருந்தால், மேலும் சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும்.