சுருக்கம்
மாரடைப்பு என்பது உடனடியாகக் கவனிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது ஆகும். மேலும், மிகவும் வழக்கமான மருத்துவ அவசர நிலைகளில் இதுவும் ஒன்று ஆகும். இது, இதயத் தசைகளுக்கு இரத்தத்தை செலுத்துகிற, இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக ஏற்படுகிற, ஒரு திடீர் நிகழ்வு ஆகும். இரத்தக் குழாய்களின் சுவர்களில் படியும் பிளேக் எனப்படும் கொழுப்பு படிவுகள், மாரடைப்பின் மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்று ஆகும். புகைப்பிடித்தல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடல் பருமன், அதிக இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, மது மற்றும் ஒரு சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறை ஆகிய இவற்றின் கூட்டு சேர்க்கை, மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கின்றது. இதயக் குறிப்பான்களோடு இணைந்த ஒரு எலக்ட்ரோகார்டியோகிராம் (ஈசிஜி), ஒரு கடுமையான மாரடைப்பின் போது நோயைக் கண்டறிய உதவும். ஒரு வலுவான மாரடைப்பு ஏற்படும் நிகழ்வில், மருந்துகளோடு இதய ஆஞ்சியோபிளாஸ்டி-யும் கூடவே பரிந்துரைக்கப்படுகிறது, மேலும் எப்போதாவது பைபாஸ் நடைமுறையும் பரிந்துரைக்கப்படுகிறது.