தலை காயம் என்றால் என்ன?
உச்சந்தலை அல்லது மூளை, போன்ற தலை பாகத்தில் ஏற்பட்டிருக்கும் காயம் என்பது தலை காயம் என்று குறிப்பிடப்படுகிறது. தலை காயங்கள் என்பது தலையில் ஏற்படும் லேசான வீக்கத்திலிருந்து கடுமையான மூளையதிர்ச்சி அல்லது கபாலத்தில் ஏற்படும் எலும்பு முறிவு வரை குறிப்பிடக்கூடியது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
காயத்தின் தாக்கத்தை பொறுத்து, இந்நிலையில் இருப்பவருக்கு ஏற்படும் அறிகுறிகளின் அளவில் மாறுபாடுகள் இருக்கலாம், அவை லேசானதாகவோ, மிதமானதாகவோ அல்லது கடுமையானதாகவோ இருக்கக்கூடும்.
- லேசான காயம்.
- மிதமான காயம்:
- தற்காலிகமாக சுயநினைவை இழத்தல்.
- தீவிரமான தலைவலி.
- குமட்டல் மற்றும் வாந்தி.
- வெளிரிய தோல்.
- எரிச்சலூட்டும் தன்மை அல்லது நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றம்.
- திறந்த காயம்.
- கடுமையான காயம்:
- சுயநினைவை இழத்தல்.
- ஆழ்மயக்கம்/ கோமா நிலை.
- வலிப்பு.
- தெளிவற்ற பேச்சு.
- விரிவடைந்த அல்லது நிலையான ப்யூப்பில்.
- தூசி போன்ற வெளிப்பொருட்கள் தலையினுள் ஊடுருவிசெல்தல்.
- தன்னிலை அறியாமல் செயல்படுதல்.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
தலையில் ஏற்படும் காயத்திற்கான காரணங்கள் வேறுபடுகின்றன. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வெவ்வேறு விதமான காரணங்களால் தலை காயம் ஏற்படுகின்றன. குழந்தைகளுக்கான காரணத்தை பார்க்கும் போது, உயரத்திலிருந்து கீழே விழுந்ததனாலோ, வன்முறையினாலோ அல்லது விளையாட்டை- சார்ந்த காயத்தினாலோ இந்நிலை ஏற்படலாம், பெரியவர்களுக்கு ஏற்படும் தலை காயத்தின் காரணமானது, சாலை நெரிசலின் விளைவால் ஏற்படும் விபத்தோ (வாகன விபத்து), உடல் ரீதியான தாக்குதலோ அல்லது வன்முறையில் பங்கு கொள்தலோ, கீழே விழுதலோ அல்லது விளையாட்டினால் விளையும் காயம் போன்றவையினால் இருக்கலாம்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
தலை காயத்தின் நிலையினை அறிய உதவும் கிளாஸ்கோ கோமா ஸ்கேல்(ஜி சி எஸ் ) உட்பட முழுமையான மருத்துவ பரிசோதனை அவசியம். ஜிசிஎஸ் மூலம் கிடைக்கும் குறைவான மதிப்பெண்கள் மிக கடுமையான காயத்தையும் அதிகமான மதிப்பெண்கள் அதற்கு நேர்மாறாக இருப்பதாகவும் கருதப்படுகிறது. சிலநேரங்களில், கோமா நிலை காரணமாக மருத்துவ ஆய்வு பெறுவது சற்று கடினமாக இருக்கின்றது. சில சோதனைகள் காயத்தின் வீரியம் மற்றும் மூளை அணுக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சேதத்தினை பரிசோதிக்க மிக அவசியமாக மேற்கொள்ளக்கூடியவை. இந்த சோதனைகளுள் அடங்குபவை:
- வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி (சிடி) ஸ்கேன்: கபாலத்தில் ஏற்பட்டிருக்கும் எலும்பு முறிவு, இரத்த கசிவு மற்றும் திசுக்கலின் வீக்கம் ஆகியவற்றை காண உதவிபுரிகிறது.
- காந்த அதிர்வு விம்பங்கள் (எம் ஆர் ஐ) ஸ்கேன்: சி டி ஸ்கேனோடு ஒப்பிடும் போது முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் துல்லியமான அறிக்கையை கொடுக்கக்கூடியது.
லேசான காயத்தினால் ஏற்படும் வலிக்கு கவனிப்பு அல்லது வலி நிவாரணிகள் தேவைப்படுகின்றது (ஐஸ் பேக் ஒத்தடத்துடன் கூடிய வலி நிவாரணிகள்), அதே நேரத்தில் மிதமான மற்றும் கடுமையான காயத்துக்கு சாதாரண மருத்துகளிலிருந்து அறுவை சிகிச்சை அல்லது சில நேரங்களில் அவசர சிகிச்சை பிரிவின் சேர்க்கை தேவைப்படுகிறது.
தலை காயத்திற்கான சிகிச்சைகளுள் அடங்குபவை:
- எதிர்ப்பு வலிப்பு மருந்துகள் - தலை காயத்தின் மிக பொதுவான அறிகுறி வலிப்பு நோயாக இருப்பதோடு இது மூளைக்கு சேதத்தைதையும் விளைவிக்கின்றது, எனவே எதிர்ப்பு வலிப்பு மருந்துகள் இந்நிலை குணமடைய பெரிய அளவில் உதவக்கூடியவை.
- நீர்ப்பெருக்கிகள் - சில வகையான தலை காயம் மூளையை சுற்றி வீக்கத்தை ஏற்படுத்தக்கூடியது; அத்தகைய வீக்கத்தை குறைக்க நீர்ப்பெருக்கிகள் உதவுவதோடு அழுத்தத்திற்கான அறிகுறிகளுக்கும் நிவாரணம் அளிக்க உதவுகின்றது.
- கோமாவை- தூண்டக்கூடிய மருந்துகள் - மூளை தானாக குணமடைய முயற்சி செய்யும் போது, அதிகப்படியான ஆக்சிஜனை பயன்படுத்த ஆரம்பிக்கிறது. இருப்பினும், இரத்த நலன்கள் பாதிக்கப்பட்டிருப்பதால், அதற்கு போதிய ஆக்சிஜன் கிடைக்காமலிருக்கலாம், இதன் விளைவால் மேலும் காயம் ஏற்படுவதோடு மூளை உயிரணுக்கள் இறக்க நேரிடும். எனவே, இத்தகைய காயத்தை தவிர்க்கவும், மூளை உயிரணுக்களின் செயல்பாடுகளை குறைக்கவும் கோமாவை- தூண்டக்கூடிய மருந்துகள்தற்காலிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
தலை காயத்திற்கான அறுவைசிகிச்சை முறைகளுள் அடங்குபவை:
- மண்டை ஓட்டில் ஏற்பட்டிருக்கும் எலும்பு முறிவை சரிசெய்தல்.
- மூளை குழாய்களில் ஏற்படும் இரத்த கசிவை தடுக்க அறுவை சிகிச்சை மூலம் தையல்போட்டு குணமடைய செய்தல்.
- மூளையில் இருக்கும் அழுத்தத்தை வெளியேற்ற மண்டை ஓட்டில் ஒரு சாளரத்தை ஏற்படுத்துதல்.
அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகளை மட்டுமின்றி, மூளை செயல்பாட்டினை மேம்படுத்துவதற்கும் மற்றும் மூளை சேதத்தினால் பாதிக்கப்பட்ட உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் மறுவாழ்வு சிகிச்சை தேவை. மறுவாழ்வு சிகிச்சையில் பிஸியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, மருத்துவ ஆலோசனை மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த சிகிச்சை போன்ற அனைத்தும் அடங்குகின்றது.