முடிச்சச்சிறுநீரகவழற்சி என்றால் என்ன?
முடிச்சச்சிறுநீரகவழற்சி என்பது வடிமுடிச்சுக்கு சேதத்தை விளைவிக்கும் ஒரு வகையான சிறுநீரக நோய் ஆகும் (இரத்தத்தில் இருக்கும் கழிவுகள் மற்றும் திரவங்களை பிரித்து வெளியேற்ற உதவுகின்ற சிறுநீரகத்தினுள் இருக்கும் சிறிய ஃபில்டர்கள்). இது பொதுவாக நோய் எதிர்ப்பு அமைப்பு, ஆரோக்கியமான சிறுநீரக திசுவை தாக்குவதாலேயே ஏற்படுகின்றது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
முடிச்சச்சிறுநீரகவழற்சியை சார்ந்த அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- சோர்வு.
- மூச்சு திணறல்.
- கால்கள் அல்லது உடலின் வேறு பாகங்களில் ஏற்படும் வீக்கம்(நீர்க்கட்டு).
- உயர் இரத்த அழுத்தம்.
- மூட்டு வலி.
- தடித்தல்.
- சிறுநீரில் அதிக அளவு புரதங்கள் வெளியேறுதல்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் யாவை?
முடிச்சச்சிறுநீரகவழற்சியின் முக்கிய காரணங்களுள் அடங்குபவை:
- வாஸ்குலட்டிஸ் மற்றும் சிஸ்டமிக் லூபஸ் எரிடேமடோசஸ்(எஸ் எல் இ) போன்ற நிலைகள் உட்பட உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்புடன் இருக்கக்கூடிய பிரச்சனை.
- சில நபர்களில், சில நோய்த்தொற்றுகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் அசாதாரணத்தை தூண்டிவிடும். அவற்றுள் அடங்குபவை:
- எண்டோட்கார்டியம், எனப்படும் இதய குழாய்களில் ஏற்படும் நோய்த்தொற்று.
- கல்லீரலில் ஏற்படும் வைரல் தொற்றுகள் அதாவது ஹெபாடைட்டிஸ் பி மற்றும் ஹெபாடைட்டிஸ் சி.
- மனித நோய்த்தடுப்புக்குறை வைரஸ்கள் (எச்.ஐ.வி).
- மரபுவழியாக இந்நிலை ஏற்படுதல் சாத்தியம்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
அறிகுறிகளுக்கான சரியான வரலாறு எடுத்த பின், மருத்துவர் பின்வருபவற்றை அறிவுறுத்தக்கூடும்:
- இரத்த சோதனைகள்:
- கிரியேட்டினின் நிலை, ஒருவருக்கு இது அதிகமாக இருக்கும் பட்சத்தில் சிறுநீரக கோளாறு ஏற்படும்.
- மதிப்பிடப்பட்ட குளோமலர் வடிகட்டுதல் விகிதம் (இ.ஜி.எஃப்.ஆர்), என்பது சிறுநீரக கோளாறு இருப்பவர்களுக்கு குறைவாக இருக்கும்.
- ஆட்டோ இம்யூன் எதிர்வினைகளை தூண்டக்கூடிய பல பொருட்களுக்கு ஆண்டிபையாட்டிக்ஸ் பயன்பாடு.
- சிறுநீர் சோதனை: சிறுநீரில் இரத்தம் அல்லது புரதம் வெளியேறுகிறதா என்பதை சோதிக்கக்கூடிய சோதனை.
- அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்: சிறுநீரகத்தில் இருக்கும் எந்தவித பிரச்சனைகளையும், சிறுநீரகங்களின் அளவு மற்றும் சீறுநீரக அடைப்பு ஆகியவைகளை சோதனை செய்ய இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
- திசுப் பரிசோதனை: சிறுநீரக திசுவின் மாதிரியை சேகரித்து அதை நுண்ணோக்கியின் உதவியோடு ஆய்வு செய்தல்.
முடிச்சச்சிறுநீரகவழற்சியின் தீவிரம் மற்றும் இதனால் ஏற்படும் அறிகுறியை பொறுத்தே சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்நிலை லேசாக இருக்கும் வழக்குகளில், சிகிச்சைகள் தேவையில்லை.
சில சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
- உணவுத்திட்டத்தில் மாற்றம்: அதிக அளவு உப்பு மற்றும் பொட்டாசியம் கொண்டிருக்கும் உணவுகள் மற்றும் திரவங்களை தவிர்ப்பதோடு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான திரவங்களை உட்கொள்தல் அவசியம்.
- புகைபிடிப்பதை நிறுத்தவும்: புகைபிடித்தல் முடிச்சச்சிறுநீரகவழற்சி நிலையை மோசமடைய செய்வதோடு இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்க்கான வாய்ப்புகளை அதிகரிப்பதால் புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது.
- இதற்கான மருந்துகள் பின்வருமாறு:
- இரத்த அழுத்தங்களை குறைக்கக்கூடிய மருந்துகளான ஆஞ்சியோடென்சின் ஏற்பி தடுப்பிகள் (ஏஆர்பிஸ்), ஆஞ்சியோடென்சின்-மாற்று என்சைம் (ஏசிஇ) தடுப்பான்கள், சிறுநீரிறக்கிகள் மற்றும் பிற மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.
- வீக்கம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஒடுக்க, கார்டிகோஸ்டெராய்டு (ப்ரெட்னிசோன்) பரிந்துரைக்கபடும்.
- நோய் எதிர்ப்பு அமைப்பில் பிரச்சனை ஏற்படும் போது, டாக்ரோலிமஸ், சைக்ளோஸ்போரின், அசாதியோப்ரின், ரிட்டுக்ஷிமப் அல்லது மைக்கோபனொலேட் மொஃபட்டில் போன்ற தடுப்பாற்றடக்கிகள் பரிந்துரைக்கப்படலாம்.
- குறைந்த அளவு சைக்ளோபாஸ்பைமடு தடுப்பாற்றடக்கியாகவும் பயன்படுத்தலாம்.
- வைரஸ் தொற்று இருபவர்களுக்கு ஆன்டிவைரல் மருந்துகள் கொடுப்படுகின்றது.
- பொதுவாகவே முடிச்சச்சிறுநீரகவழற்சி இருப்பவர்களுக்கு கொழுப்பு சத்து அதிகமாக இருப்பதால், கொழுப்பு-குறைக்கும் மருந்துகள் அறிவுறுத்தப்படுகிறது.
- கடுமையான வழக்குகளில் பிளாஸ்மா பரிமாற்றம் செய்யப்படலாம்.