ஜிபிஎம் என்றால் என்ன?
குளோபிளாஸ்டோமா மல்டிஃபார்ம் (ஜிபிஎம்) அல்லது கிளைய மூலச்செல்புற்றுச் சிவாப்பு என்பது ஒரு வீரியமிக்க (புற்றுநோயை) குறிக்கிறது, ஆக்ரோஷமான (வேகமாக வளரும்) மூளை மற்றும் முதுகுத்தண்டு வடத்தில் ஏற்படும் கட்டியாகும். இவ்வகை கட்டிகள் கிளையல் திசு, இது ஒரு வகையான இணைப்புத் திசு. இது பொதுவாக மூளை மற்றும் முதுகுத்தண்டில் காணப்படும் திசுக்களாகும்.
அதன் முக்கிய தாக்கங்களும் அறிகுறிகளும் என்ன?
கட்டி வளரும் போது, அது நரம்பு செயல்பாட்டு அமைப்பின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஜிபிஎம்-ன் அறிகுறிகள் பின்வருமாறு:
- சம்பவங்கள் மற்றும் நிகழ்வுகளை நினைவுகூறுவதில் சிரமம் (மேலும் வாசிக்க: நினைவு இழப்பு காரணங்கள்).
- உணர்ச்சி ஸ்திரத்தன்மை.
- தன்னிச்சையற்ற இயக்கங்கள்.
- பார்வை சிரமங்கள்.
- கேட்கும் திறனில் பிரச்சனைகள்.
- பேசுவதில் சிரமம் ஏற்படுதல்.
- வலிப்புத்தாக்கங்கள்.
- அடிக்கடி ஏற்படும் மனநிலை மாற்றங்கள்.
- குமட்டல் மற்றும் வாந்தி.
- அடிக்கடி மற்றும் கடுமையாக ஏற்படும் தலைவலிகள்.
அதன் முக்கிய காரணங்கள் என்ன?
ஜிபிஎம் இன் முக்கிய காரணம் தெரியவில்லை।எனினும்,சுற்றுச்சூழல், மரபியல், மற்றும் பல காரணிகளைப் பற்றிய ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. தொழில்சார் ஆபத்துகளாலும் ஜிபிஎம் ஏற்படுவதாக நம்பப்படுகிறது.
இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
நோயாளியின் அறிகுறிகளை ஒரு உடல் வழி பரிசோதனை செய்து மதிப்பிடுவதன் மூலம் நோயறிதல் தொடங்கும். மருத்துவர் அவர்களின் குடும்பம், நோயாளியின் மருத்துவ வரலாறையும் பற்றி விசாரிப்பார்
ஒரு நரம்பியல் பரிசோதனையும் மதிப்பீடு செய்யப்படுகிறது:
- அனிச்சைச் செயல்கள்.
- ஒருங்கிணைப்பு.
- வலி தன்மை.
- தசை வலிமை.
அறிகுறிகளின் ஆரம்ப மதிப்பீட்டிற்குப் பிறகு, மருத்துவர் இமேஜிங் சோதனைகளை நடத்துவார். அச்சோதனைகள் முறையே, காந்த அதிர்வு இமேஜிங் (எம்.ஆர்.ஐ), கம்ப்யூட்டட் டோமோகிராபி (சி.டி) மற்றும் போஸிட்ரான் எமிஷன் டோமோகிராபி போன்றவை மூளையின் படங்களை எடுத்து வீக்கம் அல்லது அசாதாரண வளர்ச்சி உள்ளதா என்பதை சோதிக்க உதவுகிறது.
ஜிபிஎம் -ன் அறிகுறிகளை உறுதிப்படுத்துவதற்காக பயோப்ஸி (மூளை திசு சோதனை) செய்யப்படலாம்
ஜிபிஎம் -ஐ குணப்படுத்த முடியாத நிலையில். அதன் அறிகுறிகளின் தீவிரத்தன்மை அறிந்து சிகிச்சையளிப்பது மற்றும் நோயாளி உயிர்வாழ்க்கை நீடிக்கிறது.
சிகிச்சையின் 3 முக்கிய முறைகள் பின்வருமாறு உள்ளன:
- கதிர்வீச்சு சிகிச்சை: கதிர்வீச்சு சிகிச்சையானது கட்டிகளை அழிக்கவும் அதனால் சுற்றியுள்ள திசுக்களுக்கு ஏற்படும் எந்த சேதத்தையும் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த சிகிச்சை கட்டியின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது.
- கீமோதெரபி: கீமோதெரபியில் கெமிக்கல் மருந்துகள் பயன்படுத்துகின்றன, அவை புற்றுநோய் செல்களை பெருக்குவதைத் தடுக்கின்றன. இந்த மருந்துகள் வாய்வழியாக அல்லது ஊசி மூலம் வழங்கப்படலாம். கீமோதெரபி மருந்துகள் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
- அறுவை சிகிச்சை: இது மூளையில் இருந்து புற்றுநோய் திசுக்களை நீக்குவதற்கும், கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சையுடன் இணைந்து இந்த சிகிச்சை வழங்கப்படலாம்.