காஸ்ட்ரோஇன்டெஸ்ட்டினல் ஸ்ட்ரோமல் புற்றுநோய் கட்டி என்றால் என்ன?
இரைப்பை-குடல்வழி திசுக்களில் ஏற்படும் அரிதான புற்றுநோய் கட்டிகள் காஸ்ட்ரோஇன்டெஸ்ட்டினல் ஸ்ட்ரோமல் புற்றுநோய் கட்டி (ஜி.ஐ.எஸ்.டி) என்று அழைக்கப்படுகிறது. இவை இணைப்பு திசுவின் கட்டிகள் ஆகும். அவை கொடிய (புற்றுநோய்களாக) அல்லது தீங்கற்ற (புற்று நோயற்றவை) கட்டிகளாக இருக்கலாம்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
- இந்த கட்டி முக்கியமாக இரைப்பைக் குழாயிலிருந்து இரத்தக்கசிவு மூலம் வெளிப்படுகிறது. இந்த இரத்த கசிவு காரணமாக ஒரு நபருக்கு இரத்த சோகை கூட உருவாகலாம்.
- கட்டி மிகவும் பொதுவாக வயிறு அல்லது சிறு குடலில் தொடங்குகிறது.
- இது வயிற்று வலி மற்றும் தசைப்பிடிப்புடன் சேர்த்து கடுமையான எடை இழப்பை ஏற்படுத்துகிறது.
- குமட்டல் மற்றும் அடிக்கடி வாந்தியுடன் சேர்த்து விழுங்குவதில் சிரமம் ஏற்படுத்துகிறது.
- கட்டி பெரிதாக ஆக, அடிவயிறு கனமாவது போன்ற உணர்வினை தனிநபருக்கு ஏற்படுத்துகிறது. இது பரவினால், கல்லீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படலாம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
- ஜி.ஐ.எஸ்.டிகள் இணைப்புத் திசுப்புற்று வகைக்குள் சேரும், அதாவது அவை இணைப்பு திசுவின் கட்டி ஆகும்.
- ஜி.ஐ.எஸ் கட்டிகள் பரம்பரையான நோயாக இருக்கலாம், மற்றும் அத்தகைய சந்தர்ப்பங்களில், அவை பெரும்பாலும் கடுமையான பிற நிலைமைகளுடன் சேர்ந்து நிகழ்கின்றன.
- மரபணு மாற்றம் கூட ஜி.ஐ.எஸ் கட்டிகளை உருவாக்கும். மரபணு காரணங்களால் ஏற்படும் ஜி.ஐ.எஸ் கட்டிகளை பற்றி தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
- அடிக்கடி, மற்ற கட்டிகளை போன்று இந்த கட்டியின் காரணங்களும் தெரியாமலே இருக்கலாம்.
- வயதான நபர்களிடம் ஜி.ஐ.எஸ்.டி கள் பொதுவாக காணப்படுகிறது, இந்த கட்டி வளர்வதால் ஏற்படும் ஆபத்து வயதாக ஆக அதிகரிக்கிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
ஆரம்பத்தில், உங்கள் மருத்துவ அறிக்கை மற்றும் தற்போதைய அறிகுறிகளை மருத்துவர் மதிப்பீடு செய்வார். நோயறிதலில் உள்ள படிகள் பின்வருமாறு:
- பொதுவாக வாய், செரிமானப் பாதை மற்றும் அடிவயிற்றுப் பரிசோதனை ஆகியவற்றின் பரிசோதனை மிக முக்கியம். ஜி.ஐ.எஸ்.டி இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், மேலும் சோதனைகள் தேவைப்படும்.
- கட்டியின் சரியான இடம், நிலை மற்றும் அளவை தெரிந்து கொள்ள இரைப்பை குடல் பாதை எண்டோஸ்கோபி மற்றும் வயிற்றின் அடிப்பகுதியில் அல்ட்ராசவுண்ட் செய்யப்படுகிறது.
- நோயறிதலின் இறுதி சோதனைக்கு, கட்டியின் ஒரு சிறிய பகுதி திசு பரிசோதிப்பதற்காக நீக்கப்படுகிறது.
- வளர்ந்த கட்டியை அடிவயிற்றில் ஒரு கீறலிட்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல் அல்லது லாபராஸ்கோபி மூலம் அகற்றுதல்.
- எனினும், மிக பெரிய கட்டிகள் அறுவை சிகிச்சை மூலமும் நீக்க கடினமானதாக இருக்கலாம்.
- கட்டியை சுருக்க கீமோதெரபியின் ஒரு பகுதியாகவும் அது பரவுவதை தடுக்கவும் மருந்துகள் பயன்படுகின்றன.
- கதிர்வீச்சு சிகிச்சை, அறுவைசிகிச்சை மூலம் நீக்கம் செய்ய முடியாத பெரிய கட்டிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக தேர்வு செய்யப்படலாம்.