தோள்பட்டை மரத்துப்போதல் என்றால் என்ன?
தாளிறுக்கம் நோய் (உறைந்த தோள்பட்டை) என்பது தோள்பட்டைகளில் உள்ள விறைப்பு காரணமாக வலி அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒரு நிலையாகும்.எந்தவொரு வெளிப்படைக் காரணமும் ஏதுமின்றி தோள்பட்டை இயக்கங்களின் குறிப்பிடத்தக்க இயக்கமின்மைக்கு இந்த நோய் காரணமாகிறது.உலக அளவில் உறைந்த தோள்பட்டை 2% -3% என கண்டறியப்பட்டுள்ளது.இது பொதுவாக 40 முதல் 70 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு வருகிறது, மேலும் ஆண்களைவிட பெண்களை பாதிக்கும் வாய்ப்பு அதிகம்.
இதன் முக்கிய அடையாளம் மற்றும் அறிகுறிகள் என்ன?
உறைந்த தோள்பட்டை தன்மையைக் வகைப்படுத்த மூன்று கட்டங்கள் உள்ளன:
- உறைதல் நிலை.
- முடக்கு நிலை.
- உருகுதல் நிலை.
பொதுவான அறிகுறிகள் அடங்கியவை:
- தோள்பட்டை விறைப்பு.
- நாள்பட்ட வலி.
- அசௌகரியம் காரணமாக தோள்பட்டை இயக்கங்களில் பாதிப்பு ஏற்படுவது.
- இரவில் தாங்க முடியாத வலி.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
உறைந்த தோள்பட்டை பிரச்சனைக்கான காரண காரணிகள் இதுவரை அறியப்படவில்லை.இது பொதுவாக உயர் இரத்த சர்க்கரை அளவு கொண்ட நபர்களில் இது பொதுவாக கவனிக்கப்படுகிறது.இது உயர் அல்லது குறைந்த தைராய்டு ஹார்மோன் அளவு, உள இயலாமை, மற்றும் இதயம் சார்ந்த(இதயம் ) செயலிழப்பு உள்ள நபர்களிடத்தில் பொதுவாக காணப்படுகிறது.படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகள் உறைந்த தோள்ப்பட்டை ஏற்படுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர்.
இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
நோயாளியை உடல் ரீதியாக பரிசோதித்தல் இந்த நிலைமையைக் கண்டறிவதில் முதன்மை படியாகும்.பிற சாத்தியக்கூறுகளை விலக்க இமேஜிங் சோதனை செய்யப்படலாம்.எக்ஸ் கதிர்கள் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஆகியவை பொதுவாக எலும்பில் ஏதேனும் அசாதாரணங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய பயன்படுத்தப்படுகின்றன.
சிகிச்சை:
அறுவை சிகிச்சை அல்லாத முறைகள் அடங்கியவை:
- வலி, அசௌகரியம் மற்றும் அழற்சி நிலைகளைக் குறைப்பதில் நான்ஸ்டீராய்டல் அழற்சி எதிர்ப்பு மருந்துகள் உதவலாம்.
- சிறந்த வலி நிவாரணத்திற்கு ஸ்டீராய்டுகள் ஊசி மூலம் உட்செலுத்தப்படுகிறது.
- தோள்ப்பட்டையின் இயக்கங்களை மேம்படுத்துவதற்கு பிசியோதெரபி தேவைப்படலாம்.
அறுவை சிகிச்சை முறைகள்:
- தோள்ப்பட்டை ஆர்த்ரோஸ்கோபி.
- மயக்க மருந்தின் கீழ் தோள்பட்டையை சரி செய்தல்.
சுய பாதுகாப்பு குறிப்புகள்:
- இதற்கு முதல் மற்றும் முக்கிய சிகிச்சையாக உடற்பயிற்சி மற்றும் உடல் சார்ந்த சிகிச்சைமுறைகள் தேவைப்படும்.
- தோள்களில் வலியை குறைக்க எந்த கனமான பொருட்களையும் தூக்காமல் இருப்பது சிறந்தது.
- பொதுவான வலிக்கான மருந்துகள் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு நிவாரணத்தை வழங்க பயன்படுத்தலாம்.
உறைந்த தோள்பட்டை என்பது தானாகவே சரியாகிவிடுகிற ஒரு நிலை ஆகும் , சரியான நடைமுறை மற்றும் சுய உடல் பராமரிப்புகள் தேவை.தினசரி நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி போன்றவை நீண்ட கால நோய் தடுப்பு நடவடிக்கைகளாக எதிர்காலத்தில் இது மீண்டும் வராமல் இருக்க உதவும்.