மணிக்கட்டு எலும்புமுறிவு என்றால் என்ன?
மணிக்கட்டு என்பது எட்டு சிறிய எலும்புகளால் ஆனது. இது முழங்கையின் இரண்டு நீண்ட எலும்புகளுடன் இணைந்து மூட்டாக உருப்பெறுகிறது. இந்த எலும்புகளில் ஏதாவதொன்று முறிந்தால் அது மணிக்கட்டு எலும்பு முறிவை ஏற்படுத்துகிறது. எலும்பு முறிவு அதன் அளவைப் பொருத்தும், காயத்தின் காரணத்தை பொருத்தும் வலிமிகுந்ததாக இருக்கும்.
இதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
- மணிக்கட்டு எலும்பு முறிவின் அறிகுறிகள் வழக்கமான எலும்பு முறிவின் அறிகுறிகளை போன்றிருக்கும்.
- மணிக்கட்டை சிறிது அசைக்க முயற்சி செய்தாலும் வலி மோசமடையலாம்.
- வலியுடன் சேர்ந்து அந்த இடத்தை சுற்றி வீக்கம் மற்றும் சிராய்ப்பு ஏற்படுத்தலாம்.
- எலும்புமுறிவு ஏற்பட்டால், அது அடிப்படை திசுக்கள் வெளிப்படுவதற்க்கு காரணமாகிறது, இதனால் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
- ஒருசில நேரங்களில் எலும்பு உடையும்பொழுது மணிக்கட்டு மட்டுமன்றி கட்டைவிரலும் கூட உருக்குலைந்து காணப்படும்.
- ஒருவருக்கு, கையில் வலியுடன் சேர்ந்து அசௌகரியமான கூச்ச உணர்வு அல்லது உணர்வின்மை உண்டாகும்.
- எலும்பு அதன் இடத்திலிருந்து நகர்ந்திருந்தால், அதனை இடம்பெயர்ந்த எலும்பு முறிவு என்பர்.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
- மணிக்கட்டு எலும்பு முறிவு பெரும்பாலும் கீழே விழுவதால் ஏற்படுகின்றது. ஒருவர் மணிக்கட்டு அதிர்வடையும்படி விழுவதாலும் உடலின் எடையை மணிக்கட்டு மீது செலுத்துவதாலும் எலும்பு முறிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- கனமான பொருளில் இடித்துக்கொள்வதாலும் கனமான பொருள் மணிக்கட்டின் மீது விழுவதாலும் எலும்பு முறிவு ஏற்படுகின்றது.
- விளையாட்டுகளில் சில அசைவுகள் கூட மணிக்கட்டு எலும்பு முறிவை ஏற்படுத்தும்
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
- வீக்கம் மற்றும் சிராய்ப்பு இருந்தால் அது உடல் பரிசோதனை மூலம் வெளிப்படுகிறது. மணிக்கட்டின் எக்ஸ்-கதிர்கள் சோதனையை மருத்துவர் பரிந்துரைப்பார்.
மணிக்கட்டு பல துண்டுகளாக உடைந்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டால் சி.டி ஸ்கேன் அல்லது எம் .ஆர் .ஐ ஸ்கேன் தேவைப்படும். எலும்பு முறிவின் சிகிச்சையானது, பாதிக்கப்பட்ட எலும்புகள், அதன் தீவிரம் மற்றும் எலும்பு முறிவு, இடம் பெயர்ந்த ஏலும்பு முறிவா அல்லது இடம் பெயராத எலும்பு முறிவா என்பதை பொறுத்து அமையும்.
- வலியை குறைக்க வலிநிவாரணிகளையும் நோய்த்தொற்று இருந்தால் ஆண்டிபயாடிக் மருந்துகளையும் மருத்துவர் கொடுப்பார்.
- ஸ்ப்லின்ட் அல்லது காஸ்ட் என்னும் அணைவரிக்கட்டைகள், எலும்புகளை ஓரிடத்தில் பிடித்து அவற்றை சீராக்கும். இடம் பெயராத எலும்பு முறிவுகளுக்கு இது சிறந்த தீர்வாகும்.
- சில நேரங்களில் எலும்புகளை அதன் இடத்தில் பொறுத்த தட்டுகள் அல்லது திருகுகள் தேவைப்படும். இது இடம் பெயர்ந்த எலும்பு முறிவுகளுக்கு சிகிச்சை அளிக்கும் அறுவைசிகிச்சை முறையாகும்.
- மருத்துவர் பரிந்துரைக்கும் மணிக்கட்டு உடற்பயிற்சிகள் மற்றும் பிஸியோதெரபியும் பயன்தரும்.
- பெரும்பாலான எலும்பு முறிவுகள் பெரிய சிக்கல்கள் ஏதும் இன்றி சுமார் எட்டு வாரங்களில் குணமடையும். எனினும், முழுமையாக குணமடைய சில மாதங்கள் ஆகலாம்.