கண் குழி எலும்பு முறிவு என்றால் என்ன?
கண் விழியை சுற்றியுள்ள எலும்புகளில் ஏதேனும் முறிவு ஏற்படுதலே கண் குழி எலும்பு முறிவு எனப்படுகிறது. கண்களை சுற்றியுள்ள எலும்புகள் விழிக்குழி அல்லது விழிக்குழி எலும்பு என அழைக்கப்படுகின்றது. கண் குழி எலும்பு முறிவு என்பது விழிக்குழி சுவரில் மட்டும் ஏற்படும் தனி எலும்பு முறிவாகவோ அல்லது அதனுடன் விழிக்குழி விளிம்பின் முறிவு சேர்ந்தும் ஏற்படலாம்.
இதை சார்ந்த முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
முறிவின் வகையை பொறுத்தே அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் ஏற்படுகின்றன:
விழிக்குழி தளம் முறிவோடு (விழிக்குழி வெடிப்பு எலும்பு முறிவு) தொடர்புடைய அறிகுறிகள் பின்வருமாறு:
- இரட்டை பார்வை.
- கண் குழியில் அடங்கியிருக்கும் பொருட்கள் அனுவெலும்பு சைனஸில் மாட்டிக்கொள்தல்.
- கண் விழிகள் பின்னோக்கி இடம்பெயர்தல்.
- தொய்வடைந்த கண்கள்.
- நரம்புக் காயம் இருக்கும் பட்சத்தில் ஒளிக்கு அதிகரித்த உணர்திறன் ஏற்படுதல்.
விழிக்குழியின் உட்சுவர் முறிவுடன் தொடர்புடைய அறிகுறிகள் பின்வருமாறு:
- மூக்கில் ஏற்பட்டிருக்கும் முறிவின் அழுத்தத்தின் தொடர்பினாலும் இவை ஏற்படலாம்.
- காயமடைந்த கண்களின் உள் முனைகளுக்கு இடையே ஏற்படும் அதிகரித்த தூரம்.
- விழிக்குழி தளத்தில் ஏற்படும் முறிவு.
- கண்களை சுற்றி ஏற்படும் வீக்கம்.
- கண்ணீர் நாளத்தில் ஏற்படும் சேதம்.
- நாசியில் ஏற்படும் இரத்தக்கசிவு.
விழிக்குழியின் மேற்பகுதி முறிவுடன் தொடர்புடைய அறிகுறிகள் பின்வருமாறு:
- இந்த முறிவு அரிதானதாக இருப்பதோடு, இது முன்புற சைனஸ் மற்றும் மூளையில் ஏற்பட்ட காயத்தினால் விளையக்கூடியது.
- செரிப்ரோஸ்பைனல் ரைனோரியா (செரிப்ரோஸ்பைனல் திரவம் சைனஸ்கள் மற்றும் மூக்கின் வழியாக வெளியேறும் போது ஏற்படக்கூடிய தீவிர நிலை).
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
இத்தகைய முறிவுகள் பொதுவாக மழுங்கிய விசையினால் ஏற்படக்கூடியது; பெரும்பான்மையாக வாகன விபத்தின் விளைவால் ஏற்படும் முக அதிர்ச்சியின் காரணமாகவும், விளையாடும் போது ஏற்படும் காயத்தினாலும், உடல் ரீதியான தாக்குதல்களாலும் ஏற்படக்கூடியது.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
கண் குழி எலும்பு முறிவுகளுக்கு கண் மருத்துவரது ஆலோசனை அவசியம், அவர் கண்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்வார்.
விழிப்பள்ளத்தின் இருக்கும் கண்களின் காட்சி திறன் மற்றும் நிலைப்பாடுகள் மதிப்பீடு செய்யப்படும்.
கூடுதலாக தேவைப்படும் பரிசோதனைகள் பின்வருமாறு:
- மண்டை ஓட்டின் எக்ஸ்-கதிர்கள்.
- எலும்பின் முறிவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியினை மதிப்பீடு செய்ய சிடி ஸ்கேன் செய்யப்படும்.
கடுமையான சிக்கல் ஏற்படும் நிலையில், நரம்பியல் நிபுணரிடம் ஆலோசித்தல் மற்றும் அறிவுறுத்தலின் படி ஓட்டோலரிங்கலாஜிஸ்ட்டை சந்தித்தல் அவசியம்.
கண் குழி எலும்பு முறிவுகளின் தீவிரம் மற்றும் அறிகுறிகளை பொறுத்தே சிகிச்சைகள் தீர்மானிக்கப்படும்.
- சாதாரண கேஸ்களில், வலி நிவாரணிகள் மற்றும் ஆண்டிபயாடிக் ப்ரோபிலாக்ஸிஸ் போன்றவையின் உபாயகத்தினால் அறிகுறிகளிருந்து நிவாரணம் பெறலாம்.
- கடுமையான கேஸ்களில், முறிந்த எலும்புகளை திருத்தம் செய்ய மற்றும் அதை சரியாக பொருத்த அறுவை சிகிச்சை தலையீடுகள் தேவைப்படும்.
சுய-பராமரிப்பு:
- தலையணையில் தலையை வைத்து ஓய்வெடுத்தல் அவசியம்.
- வீக்கம் குறைய குளிர் ஒத்தடத்தை பயன்படுத்தலாம்.
- தும்மல், இருமல் அல்லது மூக்கினை வலுக்கொண்டு சிந்துதல் போன்றவைகளை தவிர்த்தல் அவசியம்.