முழங்கை முறிவு என்றால் என்ன?
முழங்கை முறிவு என்பது மேல்கை மற்றும் முழங்கைகளை இணைக்கும் மூட்டில் ஏற்படும் முறிவினை குறிக்கின்றது. முழங்கை மூட்டு மூன்று எலும்புகளால் ஆனது, அவை, மேல்கை எலும்பு, முன்கை எலும்பு மற்றும் பின்கை எலும்பு எனப்படுகிறது. வழக்கமாக, இந்த முறிவு முழங்கையில் நேரடியாக அடி ஏற்படுவதாலோ அல்லது மேல் கையில் காயம் ஏற்படுவதாலோ ஏற்படுகிறது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
மிகவும் பொதுவான அறிகுறிகள்:
- மூட்டில் திடீரென ஏற்படும் கடுமையான வலி.
- முழங்கை மூட்டுகளின் இயக்கத்தில் ஏற்படும் சிரமம்.
- முழங்கையில் ஏற்படும் விறைப்பு.
வேறு அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளுள் அடங்குபவை:
- முழங்கை முறிவு ஏற்பட்ட இடத்தின் மீது வீக்கம் ஏற்படுதல்.
- முழங்கையை சுற்றி ஏற்பட்டிருக்கும் சிராய்ப்பு மேல்நோக்கி தோள்பட்டை வரையோ அல்லது கீழ்நோக்கி மணிக்கட்டு வரையோ பரவக்கூடும்.
- குறிப்பிட்ட இடத்தை தொடுதலின் போது உணரும் வலி.
- ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விரல்கள், மணிக்கட்டு அல்லது கைகளில் ஏற்படும் உணர்வின்மையாக இருத்தல்.
- முழங்கை அல்லது கைகள் செயல்படும்போது ஏற்படும் வலி.
- ஒருவர் முழங்கை இடம்பெயர்ந்தது போலவோ அல்லது அதற்கான இடத்தில் இல்லாதது போலவோ உணர்தல்.
இவற்றின் முக்கிய காரணங்கள் என்ன?
முழங்கை எலும்பு முறிவுகளுக்கான பொதுவான காரணங்கள் பின்வருமாறு:
- அதிர்ச்சி: விபத்துகளிலோ அல்லது விளையாட்டிலோ நேரடியாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் கைகளில் விழுவதால் ஏற்படும் காயம்.
- முழங்கை மூட்டுகளில் ஏற்படும் நேரடியான அடி அல்லது கைகளில் முறுக்கப்படுவதால் ஏற்படும் காயத்தினாலேயே இவை பொதுவாக ஏற்படுகின்றன.
பிற காரணங்கள் பின்வருமாறு:
இத்தகைய முறிவுகள் ஆஸ்டியோபோரோசிஸ் அல்லது புற்றுநோய் போன்ற சில நிலைகளுடன் தொடர்புடையது, ஆகவே சிறிய அதிர்ச்சிக்கூட சேதம் ஏற்பட போதுமானதாக இருப்பதோடு எலும்பு முறிவுக்கும் வழிவகுக்கின்றது.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
முழங்கை எலும்பு முறிவை கண்டறிதலுக்கு உடல் பரிசோதனை அவசியம்.
மருத்துவருடன் கூடிய ஆலோசனையின் போது எடுக்கப்பட்ட மருத்துவ வரலாறு கூட எலும்பு முறிவை மதிப்பீடு செய்ய உதவுகிறது.
இமேஜிங் பரிசோதனைகள் பின்வருமாறு:
- எக்ஸ் கதிர்.
- சிடி ஸ்கேன்.
பெரும்பாலான எலும்பு முறிவுகள் சிகிச்சைகளின் போது உடைந்த எலும்புகளை சீரமைப்பதோடு எலும்பு துண்டுகள் குணமடையவும் உதவுகிறது. எலும்பின் இயக்கத்தை கட்டுப்படுத்தவதற்கு ஸ்லிங், வார்ப்பு அல்லது அணைவரிக்கட்டை போன்றவைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த சிகிச்சை முறை எலும்பு குணமடைவதற்கு பெரியளவில் பயன்படுகிறது.
வலியை குறைக்க வலி நிவாரணிகள் உதவுகிறது.
சதை பிடித்து விடுதல், குளிர் ஒத்தடம், தசை இருக்கத்தை குறைத்தல் போன்ற உடலியல் தெரபி மூலம் பழைய நிலமையை அடையாளம்.
எலும்பு முறிந்து மிக கடுமையாக இடம்பெயர்ந்திருக்கும் வழக்குகளில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.