மார்பெலும்பு முறிவு என்றால் என்ன?
மார்பெலும்பு முறிவு என்பது மார்பிலிருக்கும் எலும்புகளில் ஏற்படும் முறிவை குறிக்கின்றது, இது தட்டையாகவும், நீளாமாகவும் நெஞ்சின் மையப்பகுதியில் அமைந்திருக்கக்கூடிய எலும்பு ஆகும். இது பொதுவாக மார்பை சார்ந்து நேரடியாகவும், முன்னிருந்து மார்பை சார்ந்து மழுங்கிய அதிர்ச்சியாகவும் ஏற்படக்கூடியது. மார்பு எலும்புகள் ஸ்டெர்னம் என குறிப்பிடப்படுகின்றது ஆதலால் இந்த முறிவுகள் ஸ்டெர்னம் எலும்பு முறிவுகள் எனவும் அழைக்கப்படுகிறது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- சாதாரணமாக சுவாசிக்கும் போது ஏற்படும் வலி ஆழ்ந்து சுவாசிக்கும் போது, இருமும் போது அல்லது சிரிக்கும்போது மேலும் மோசமடைதல்
- கைகளை அசைக்கும் போது மற்றும் கனமான பொருட்களை தூக்கும்போது ஏற்படும் அசௌகாரியம்.
- எலும்பு முறிந்த இடத்தில் வீக்கம் ஏற்படுதல்.
- முறிந்த எலும்பு பிணைப்பு (உடைந்து போன இரண்டு எலும்பு துண்டுகள் ஒன்றாக உராயும் போது ஏற்படும் அசாதாரணமான ஒலி).
- எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தை தொட்டாய்வு செய்யும் போது ஒரு அடி உருகுலைந்திருப்பது போன்று உணர்தல்.
- கடுமையான நிகழ்வுகளில் இதயம் மற்றும் நுரையீரலில் கூட காயம் ஏற்படலாம்.
நோய் தாக்குதலு.க்கான முக்கிய காரணங்கள் என்ன?
மார்பெலும்பு முறிவிற்கான மிக பொதுவான காரணங்கள் பின்வருமாறு:
- முன்பகுதியில் ஏற்படக்கூடிய, மழுங்கிய மார்பு அதிர்ச்சி.
- உயர் தாக்கம் கொண்ட விளையாட்டுக்களான ரக்பி, கால்பந்து அல்லது வாகன விபத்து போன்றவைகளால் ஏற்படும் வேகத்தை குறைக்கக்கூடிய காயங்கள்.
பொதுவாக மிதமான தாக்குதலை ஏற்படுத்தக்கூடிய காரணிகள் பின்வருமாறு:
- தடகள விளையாட்டுக்களால் ஏற்படும் காயங்கள்.
- கீழே விழுவதினால் ஏற்படும் காயம்
- தாக்குவதால் ஏற்படும் காயம்.
- இதய இயக்க மீட்பு.
- அசாதாரண காரணங்கள் பின்வருமாறு:
- கடுமையான முதுகெலும்பு குரோபோசிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் அல்லது ஆஸ்டியோபினியா ஆகியவை காரணமாக மார்பக எலும்பில் பற்றாக்குறை முறிவுகள் ஏற்படலாம்.
- மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு மார்பக முறிவு ஏற்படும் அபாயம் அதிகம் இருக்கின்றது.
- கோல்ஃப், பளு தூக்குதல் போன்ற விளையாட்டின் போது தொடர்ந்து மீண்டும் ஏற்படும் உடலின் மேல்பாகத்தின் உழைப்பால் அழுத்த முறிவுகள் ஏற்படலாம்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
உடல் பரிசோதனையின் போது, மருத்துவர் முறிவு ஏற்பட்ட இடத்தை தொட்டு பரிசோதனை செய்து மதிப்பீடு செய்வார்.
மார்பக எலும்பு முறிவுகளை கண்டறிவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் மார்பின் பக்கவாட்டில் எடுக்கப்படும் எக்ஸ்-கதிர்கள்.
இந்நிலையை கண்டறிவதற்கான பிற பரிசோதனைகள் பின்வருமாறு:
- சிடி ஸ்கேன்.
- எலக்ட்ரோகார்டியோகிராம்.
- அல்ட்ராசோனோகிராஃபி.
- நோயாளிகள் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் போது அவர்களின் இதய கண்காணிப்பு மற்றும் புல்ஸ் ஒக்ஸிமெட்ரி ஆகியவை அவசியம்.
கடுமையான மார்பக எலும்பு முறிவு ஏற்பட்ட நோயாளிகளை மதிப்பீடு செய்து, அவர்களது சுவாசம் மற்றும் சுவாச சுழற்சிக்கான காற்று வழியை பராமரித்தல் ஆகியவைகளை முதலில் கையாள வேண்டும்.
முக்கிய அறிகுறிகள் மதிப்பீடு செய்யப்படுவதோடு பராமரிக்கப்படுகிறது.
ஏதேனும் உயிர்-அச்சுறுத்தலுக்கான சிக்கல்கள் இருந்தால் அவற்றில் உடனடியாக கவனம் செலுத்தி கண்காணிக்கப்படுகின்றது.
எலும்பு முறிவினால் ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் பெற வலி நிவாரணிகள் கொடுக்கப்படுகின்றது.
பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு ஆழமாக சுவாசிக்க வேண்டுமென மருத்துவர் நோயாளிகளுக்கு அறிவுறுத்தக்கூடும்.
எலும்பு முறிவை முற்றிலுமாக சரிசெய்ய அறுவை சிகிச்சை தேவைப்படும்.