சுருக்கம்
பாதம் என்பது நாம் நடப்பதற்கும் மற்றும் நிமிர்ந்த தோற்றத்திக்கும் உதவும், மனித உடலின் முக்கிய அங்கமாகும். கால்களின் கட்டமைப்பானது நடக்கும் போதும் மற்றும் நிற்கும் போதும் உடலின் எடையை சமநிலையாக வைக்க பெரிதும் உதவுகிறது. அமெரிக்காவின் பாதக் கோளாறுக்கான மருத்துவ சங்கத்தின் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளின்படி, ஒரு மனிதன் தனது 50 வயதில் சுமார் 75,000 மைல்கள் வரை நடப்பதாக கூறப்படுக்கிறது. இதன் விளைவாக, பாதமானது, நீண்ட காலமாக தேய்மானம், காயங்கள், மற்றும் உடல் அழுத்தம் போன்ற முக்கிய காரணங்களினால் பாத வலி ஏற்படுகிறது. தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்குக் குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதில், ஆண்களை விட பெண்களுக்கு பாத வலியானது அதிகமாக உள்ளது. பாத பகுதியில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வலி ஏற்படலாம். இருப்பினும், குதிகால் மற்றும் கணுக்கால் (கால் குதிகால் மற்றும் கால்விரல்களுக்கு இடையில் உள்ள எலும்புகள்) மிகவும் பொதுவான பாதிக்கப்பட்ட பகுதிகளாக கருத்தப்படுக்கிறது, ஏனெனில் அவைகள் கால்களின் முக்கியமான உடல் எடையை தாங்கும் பகுதிகளாகும். பாத வலியை மருத்துவர் உடல் பரிசோதனை, உருவமாக்கம் பரிசோதனைகள், இரத்த பரிசோதனைகள் மற்றும் பிற கருவிகளை அடிப்படையாகக் கொண்டு கண்டறியப்படுக்கிறது. ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தல், நல்ல பொருத்தமான மற்றும் அதிர்ச்சி தாங்கும் காலணிகளை அணித்தல், குதிக்கால் பட்டைகள், எடை கட்டுப்பாடு, கால்நீட்டு பயிற்சிகள் போன்ற சுய பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் பாத வலியை குறைக்கலாம். வலி நிவாரணி மற்றும் பிசியோதெரபி பயிற்சிகள் போன்ற மருந்துவ சிகிச்சைகளும் பாத வலியை குறைக்க உதவுகின்றது.