ஃபோலிகுலிடிஸ் என்றால் என்ன?
ஃபோலிகுலிடிஸ் என்பது மயிர்கால்களை பாதிக்கக்கூடிய ஒரு பொதுவான தோல் தொற்று நோய் ஆகும். இந்த தொற்று நோய், தோல் அல்லது உச்சந்தலையில் என எங்குவேண்டுமானாலும் ஏற்படும். பொதுவாக, தலை மற்றும் கழுத்து பகுதி, அக்குள், இடுப்பு மற்றும் பிட்டம் போன்ற முடி வளரக்கூடிய பகுதிகளில் இது காணப்படும். இது பார்ப்பதற்கு உடைந்துபோன முகப்பரு போல இருக்கும் ஆனால் தொற்றைச் சுற்றி சிவந்த வளையங்கள் காணப்படும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஃபோலிகுலிடிஸ், தோலில் நமைச்சல், பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் வலி போன்ற பல்வேறு அறிகுறிகள் இருக்கும் அல்லது சில நேரங்களில் இது அறிகுறிகள் இல்லாமல் கூட இந்த தொற்று இருக்கலாம். பொதுவாக கீழ்வருவன ஃபோலிகுலிடிஸ் நோயின் அறிகுறிகளாகும் –
- சிவந்த புடைப்புக்கள் அல்லது மயிர்கால்கள் அருகே வெள்ளை நிறத்திலான பருக்கள் கொத்தாக காணப்படும்.
- சீழ் பிடித்து கொப்பளங்கள் உடைந்து வெளிவரும்.
- அரிப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள தோல்கள் எரியும்.
- தோல் மிகவும் மென்மையாதல்.
- கொப்புளங்கள் வீங்கி காணப்படுதல் அல்லது தோல் தடித்து காணப்படுதல்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
சில இரசாயனங்களால் மயிர்க்கால்களில் ஃபோலிகுலிடிஸ் தொற்றானது பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் அல்லது எரிச்சல்கள் காரணமாக ஏற்படுகிறது.
- ஸ்டெஃபிலோக்கோகல் ஃபோலிகுலிடிஸ் ஸ்டெஃபிலோக்கோகஸ் ஆரியஸ் என்ற பாக்க்டீரியாவால் ஏற்படுகிறது. பொதுவாக இந்த வகையான பாக்க்டீரியா தொற்றுக் காய்ச்சல் இல்லாமலேயே ஏற்படும்.
- சூடோமோனாஸ் எரூஜினோசா சூடான தண்ணீர் தொட்டியின் காரணமாக ஏற்படுகிறது, இது சரியாக பராமரிக்காத குளியல் தொட்டிகளால் ஏற்படுகிறது.
- கிராம் எதிர்மறை ஃபோலிகுலிடிஸ் மிகவும் அரிதாகவே காணப்படும் மேலும் ஆண்டிபயாடிக் சிகிச்சைகளினால் இந்நோய் ஏற்படுகிறது.
- பிட்ரோஸ்போரோம் ஓவல் பூஞ்சை தோல் அழற்சி நோய் முகப்பரு போன்ற தோல் தடிப்புகள் போன்று உடலின் பின்புறம், பெரியவர்களின் மார்பு பகுதியிலும் ஏற்படும், பிட்ரோஸ்போரோம் ஃபோலிகுலிடிஸ் காரணமாக ஏற்படுகிறது.
- உச்சந்தலையில் ஏற்படும் டீனே கபீடீஸ் எனப்படுகிற புழுவெட்டு அல்லது படர்தாமரை மயிர்க்கால்களில் ஏற்படும் பூஞ்சை தொற்று காரணமாக ஏற்படுகிறது.
- ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் காரணமாக ரேசர் கொண்டு சவரம் செய்யும் ஆண்களுக்கு மீண்டும் மீண்டும் முகத்தில் ஃபோலிகுலிடிஸ் ஏற்படும்.
- முடி வளர்ச்சியின் எதிர் திசையில் சவரம் செய்வதினால் ஏற்படும் நாள்பட்ட உராய்வு காரணமாக இயந்திர ஃபோலிகுலிடிஸ் ஏற்படுகிறது.
- களிம்பு அல்லது கிரீம் அல்லது மாய்ஸ்ச்சரைசர் உபயோகிப்பதனால் மயிர்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு அதனால் வீக்கம் உண்டாகி அடைப்பு ஃபோலிகுலிடிஸ் ஏற்படுகிறது.
- நிலக்கரி தார்கள் மற்றும் கார்டிகோஸ்டிராய்டிகளை அதிகம் பயன்படுத்துவதாலும் ஃபோலிகுலிடிஸ் ஏற்படுகிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
உங்கள் மருத்துவர் தொற்று ஏற்பட்ட தோல் பகுதியையும் உங்கள் மருத்துவ பின்புலத்தையும் முழுமையாக பரிசோதிப்பார். தொற்று ஏற்பட்ட தோல் பகுதியின் மாதிரியை பரிசோதிக்க நுண்ணோக்கி பரிசோதனைக்காக டெர்மோஸ்கோபி சோதனையை பரிந்துரைப்பார். உபயோகிப்பார். சிகிச்சை பலனளிக்காவிடில், தொற்றுநோய்க்கான காரணத்தை சோதித்துப்பார்க்க ஸ்வாப் பரிசோதனை செய்யப்படுகிறது. நாள்பட்ட நோய்க்கு தோல் திசுப் பரிசோதனை தேவைப்படலாம்.
ஃபோலிகுலிடிஸ் எதனால் ஏற்பட்டுள்ளது என்பதை பொறுத்து, ஆண்டி ஃபங்கல் எனப்படும் எதி்ர்பூஞ்சை மருந்துகள், ஆண்டிபயாடிக் கிரீம்கள் மற்றும் களிம்புகள் மற்றும் ஷாம்புகள் ஆகியன பரிந்துரைக்கப்படும். பெரிய கொப்புளங்கள் அல்லது பிளவைக் கட்டியை அகற்ற சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஃபோலிகலில் ஏற்பட்டுள்ள தொற்று லேசர் சிகிச்சையின் மூலம் அழிக்கப்படும்.
வெப்பமான துணியை வைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தடம் தருவதால் அசௌகரியத்தை சற்று குறைக்கும். தொற்று பாதிக்கப்பட்ட இடத்தை ஆண்டிபாக்டீரியல் சோப்பு கொண்டு தினமும் இரண்டு முறை தேய்த்து சுத்தம் செய்து வந்தால் தொற்று மீண்டும் வராமல் தவிர்க்க முடியும்.