கண்களில் ஏற்படும் காயம் - Eye Injury in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

November 30, 2018

July 31, 2020

கண்களில் ஏற்படும் காயம்
கண்களில் ஏற்படும் காயம்

கண்களில் ஏற்படும் காயம் என்றால் என்ன?

கண்களில் ஏற்படும் காயம் என்பது பெயர் குறிப்பிடுவது போலவே, கண்ணின் அமைப்பு மற்றும் செயல்பாடு வெவ்வேறு காரணங்களால் பாதிப்படையும் / மாற்றமடையும் ஒரு மருத்துவ அறிகுறியாகும், இது கண்ணின் எந்த திசுவிலும் ஏற்படும் காயத்தைக் குறிக்கும் ஒரு பரந்த சொற்கூறு ஆகும். இது அவசர சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நிலையாகும். இல்லையென்றால் பார்வை இழப்பிற்கு வழிவகுக்கும்.  

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

கண் காயத்தின் பொதுவான தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

  • தொடர்ச்சியான கண் வலி.
  • கண்ணின் கண்மணி வடிவத்தில் ஒழுங்கற்ற தன்மை.
  • பார்வை குறைவு.
  • தெளிவின்மை.
  • கண்களின் இரத்தம் தோய்ந்த தோற்றம்.
  • கண் எரிச்சல்.
  • கண்ணில் நீர் வடிதல்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பல்வேறு காரணங்களால் கண்ணில் காயம் ஏற்படலாம். பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும்போது, கடினமான மனநிலையுடன் இருத்தல் கண்ணில் காயம் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கலாம்.

குத்துச்சண்டை, மல்யுத்தம், நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ், மார்ஷியல் ஆர்ட்ஸ், டென்னிஸ் அல்லது பேட்மின்டன் போன்ற விளையாட்டுகளை விளையாடுகையில் உங்கள் கண்ணில் காயம் ஏற்படலாம்.

எனினும், விரிவாக, இதற்கான பொதுவான காரணங்கள் பின்வருமாறு,

  • திடீர் காற்று, அல்லது கண்ணிமையில் ஏற்படும் ஒரு வெட்டு போன்ற காரணங்களால் கண்களில் சிராய்ப்புக் காயங்கள் ஏற்படலாம்.
  • பிரகாசமான விளக்குகள் போன்ற கதிர்வீச்சின் மூலத்திலிருந்து ஏற்படும் ஃபிளாஷ் தீக்காயங்கள் மேலும் உங்கள் காயத்தை அதிகப்படுத்தும். எனவே, உங்கள் பணியிடத்தில் இந்த விஷயங்களைக் கொண்டு வேலை செய்யும் போது, நீங்கள் கண்டிப்பாக உங்கள் பாதுகாப்பு கண்ணாடிகளை அணிந்திருக்கவும்.
  • வேலை செய்யும் போது பயன்படுத்தப்படும் அமிலங்கள் மற்றும் காரப்பொருட்கள் ஆகியவற்றால் ஏற்படும் இரசாயன தீக்காயங்கள்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

கண்ணில் காயம் இருப்பதை நீங்கள் அறிந்து, மேற்குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை கவனித்தால், நீங்கள் உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும்.

கண் நிபுணர் உங்கள் அறிகுறிகளை சோதிப்பார். கண்ணின் தெளிவான பார்வையைப் பெறுவதற்காக, அவர் கண்மணியை விரிவுபடுத்த உதவும் சொட்டு மருந்து சேர்க்கலாம். இதனால் மருத்துவர் கண்களினுள் துல்லியமாக ஆய்வு செய்து நோயை சரியாக கண்டறிய முடியும்.

  • ஏதேனும் வெளிப்புற துகள் கண்களில் இருந்தால், சிறிய பஞ்சு உருண்டை பயன்படுத்தி அதை மருத்துவர் அகற்றுவார்.
  • நோய்த்தொற்றின் காரணமாக கடுமையான காயம் ஏற்பட்டால், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பரிந்துரைக்கப்படலாம்.
  • உங்கள் கண் நிபுணர் முழுமையாக குணமடைவதை உறுதிசெய்யும் வகையில் தொடர்கண்காணிப்பு ஆலோசனைகளை வழங்கலாம்.

கண்ணில் காயம் ஏற்படுவதை தடுக்க, பின்வரும் சில பொதுவான விஷயங்களில் கவனம் செலுத்துதல் வேண்டும்:

  • கண்களை பாதிக்கக்கூடிய இரசாயனங்களுடன் நீங்கள் வேலை செய்யும்போது, நீங்கள் பாதுகாப்பு கண்ணாடிகள் அணிந்திருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  • நீங்கள் தூரத்தில் இருந்தே கூர்மையான பொருட்கள் கொண்டு வேலை செய்ய வேண்டும், இதனால்  நேரடியான தொடர்பை தவிர்க்கலாம்.



மேற்கோள்கள்

  1. American academy of ophthalmology. Eye Symptoms. California, United States. [internet].
  2. American academy of ophthalmology. Preventing Eye Injuries. California, United States. [internet].
  3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Eye Injuries
  4. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Eye injuries: foreign body in the eye
  5. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Eye injuries: chemical burns