ஈசோபாகல் அட்ரஸ்ஸியா மற்றும்/அல்லது டிராக்சியோபயல் ஃபிஸ்துலா - Esophageal Atresia and/or Tracheoesophageal Fistula in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

January 03, 2019

March 06, 2020

ஈசோபாகல் அட்ரஸ்ஸியா மற்றும்/அல்லது டிராக்சியோபயல் ஃபிஸ்துலா
ஈசோபாகல் அட்ரஸ்ஸியா மற்றும்/அல்லது டிராக்சியோபயல் ஃபிஸ்துலா

எஸாகேஜியல் அரேஸ்ஸியா (உணவுக்குழாய் துவாரம் இன்மை) மற்றும் டிராக்சீஃபிஃபிகல் ஃபிஸ்துலா என்றால் என்ன ?

இது உணவுக்குழாயின் நிலைகளைக் குறிக்கிறது, இது வாய் மற்றும் வயிற்றினை இணைக்கும் தொடர்ச்சியான குழாய் ஆகும்.எஸாகேஜியல் அரேஸ்ஸியா என்பது ஒரு பிறப்புக் குறைபாடு ஆகும், இப்பிரச்சனை  உணவுக்குழாய்க்குரிய வளர்ச்சியில் தடை ஏற்படுவதால் உண்டாகிறது, மற்றும் உணவுக்குழாய் இரண்டு பாகங்களாக பிரிக்கப்படுகிறது. பெரும்பாலும், மேல் குழாயானது  வாயில் இணைக்கப்பட்டும் மற்றும் கீழ் குழாயானது உணவுக்குழாயுடன் இணைக்கப்பட்டும் உள்ளது.அதனுடைய இணைப்புகள்  துண்டாகும்போது அந்த இரு குழாய்களின் முனையும் சிறு தொலைவு விட்டு மூடப்படுவதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.அதன் கீழ் இறுதியில் மூடப்பட்டு இருப்பதால். உமிழ்நீரானது உணவு மேல் குழாயில் சேர்க்கப்படுகிறது.

டிராக்சீஃபிஃபிகல் ஃபிஸ்துலா (டி.எஃப்) பெரும்பாலும் பிறந்த குழந்தைகளில் எஸாகேஜியல் அரேஸ்ஸியா உடன் காணப்படும்.டி.எஃப் என்பது உணவுக்குழாயானது சுவாசக் குழாய் வரை வழக்கத்திற்கு மாறான இணைப்பின் விளைவாக ஏற்படுகிற ஒரு குறைபாடு ஆகும்.தொற்றுநோய் பொதுவாக உணவுக்குழாயின் கீழ் பகுதியுடன் தொடர்புபடுத்தப்படுகிறது, சில சமயங்களில் இந்த பிரச்சனை உணவுக்குழாயின் மேல் பகுதியிலும் கூட ஏற்படலாம் அல்லது உணவுக்குழியின் இரண்டு பகுதிகளிலும் ஏற்படுகிறது. ஈ.ஏ.வின் எந்த அறிகுறியும் இல்லாமல் கூட டி.எஃப் மட்டும் தனியாக ஏற்படலாம்.

அதன் முக்கிய அறிகுறிகள் என்ன?

இதன் அறிகுறிகள் ஒரு பிறந்த குழந்தைக்கும், மற்ற குழந்தைக்கும் ஏற்படுவதில் மாறுபடும் என்றாலும், ஈ.ஏ. மற்றும் டி.எஃப் -ன் பொதுவாக காணப்படும் அறிகுறிகள்:

  • உணவு உண்ணும் போது இருமல் மற்றும் மூச்சுத்திணறல் உண்டாகுதல்.
  • உணவு உண்ண முற்படும்பொழுது சயோனிசிஸ் காரணமாக சருமம் நீல நிறமாதல்.
  • கட்டுப்படுத்த முடியாத அளவு வாயில் இருந்து உமிழ்நீர் சுரத்தல்.
  • எடை அதிகரிக்க முடியாமை.
  • வாந்தி.
  • வழக்கத்திக்கு மாறான வட்டமான அடிவயிறு.

முக்கிய காரணங்கள் என்ன?

இந்த தொற்றுகளின் சரியான காரணம் தெரியவில்லை, ஆனால் பின்வரும் பிறப்புக்  குறைபாடுகள் பொதுவாக ஈ.ஏ மற்றும் டி.எஃப் உடன் தொடர்புபடுத்தப்படுகின்றன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்:

  • கீழறை செப்டல் குறைபாடு போன்ற இதய குறைபாடுகள்.
  • பாலிசிஸ்டிக் சிறுநீரகங்கள் போன்ற சிறுநீரக அமைப்பின் நிலைகள்.
  • ட்ரைசோமி 13, 18 அல்லது 21.
  • தசைநார் குறைபாடுகள்.

இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?

மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் எடுக்கப்படும் X- கதிர்கள் இந்த குறைபாடுகளின் நோயறிதலை கண்டறிய பொதுவாக  பயன்படுத்தப்படும் இரண்டு சரியான ஆய்வு முறை ஆகும்.

இந்த இரண்டு பிறப்புக்  குறைபாடுகளுக்கான சிகிச்சை முறை அறுவை சிகிச்சை ஆகும். உணவுக்குழாய்க்குரிய பிரச்சினைகள்  குழந்தைக்கு எதிர்காலத்தில் வரக்கூடும் , எ.கா., தழும்பு திசு, இதற்கு குழந்தை வளர்ந்த பின்னர் இரண்டாவது அறுவை சிகிச்சை தேவைப்படும்.இதனுடன்  தொடர்புடைய பிற பிரச்சினைகளை எதிர்கொள்ளும்   குழந்தைகள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளால்  சரிசெய்யப்படலாம்.



மேற்கோள்கள்

  1. MedlinePlus Medical: US National Library of Medicine; Esophageal atresia
  2. Children's National Health. Pediatric Tracheoesophageal Fistula and Esophageal Atresia. Washington DC.United States. [internet].
  3. American Academy of Family Physicians [Internet]. Leawood (KS); Esophageal Atresia and Tracheoesophageal Fistula
  4. Northwestern Medicine. Symptoms of Tracheoesophageal Fistula and Esophageal Atresia. Northwestern Memorial HealthCare. [internet].
  5. Northwestern Medicine. Causes and Diagnoses of Tracheoesophageal Fistula and Esophageal Atresia. Northwestern Memorial HealthCare. [internet].
  6. Northwestern Medicine. Tracheoesophageal Fistula and Esophageal Atresia Treatments. Northwestern Memorial HealthCare. [internet].