எபிடிடிமைடிஸ் என்றால் என்ன?
எபிடிடிமைடிஸ் என்பது ஆண்களின் விரையின் மேல் ஏற்படும் ஒரு வித நாள அழற்சி நிலை ஆகும்.இதுதான் விந்தகத்திலிருந்து விந்தணுக்களை ஆண்குறிக்கு எடுத்து செல்லும் குழாயாகும்.இந்த எபிடிடிமைடிஸ் வீக்கம் மற்றும் எரிச்சலை உண்டாக்கும்.இந்த நிலை எந்த வயதிலும் ஏற்படலாம், ஆனால் இது பொதுவாக 14 வயதிலிருந்து 35 வயதிற்குள் ஏற்படுகிறது.
இதன் முக்கிய அறிகுறிகள் என்ன?
பொதுவாக ஏற்படும் அறிகுறிகள் பின்வருமாறு:
- இடுப்புத் தொடை நரம்பு பகுதியில் வலி.
- விதைப்பை வீக்கம் மற்றும் சிவத்தல்.
- காய்ச்சல் மற்றும் குளிர்.
- வலியுடன் சிறுநீர் கழித்தல்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
இது ஒரு வகைத் தொற்று மற்றும் இதற்கான பொதுவான காரணம் சி டிராகோகோமாடிஸ் அல்லது என்.கோனோரிகா என்றழைக்கப்படும் பாக்டீரியாஆகும்.இது பெரும்பாலும் பாலியல் உடலுறவினால் பரவுகிறது. எபிடிடிமைடிஸால் ஏற்படக்கூடிய பிற தொற்றுகள், பொன்னுக்கு வீங்கி நோய் (ஒரு வைரஸ் தொற்று) மற்றும் காசநோய் (ஒரு பாக்டீரியா தொற்று) ஆகியவையாகும்.இது குழந்தைகள், வயதான ஆண்கள் மற்றும் ஆசனவாயில் உடலுறவு வைத்துக் கொள்பவர்களுக்கும் ஈ.கோலி பாக்டீரியாவினால் இந்ததொற்று பரவுகிறது.சில மருந்துகள் கூட எபிடிடிமைடிஸ் ஏற்படுத்தலாம்.விரைமேல் நாள அழற்சி எப்போதாவது அதிக கணம் வாய்ந்த பொருட்களை தூக்குவதன் விளைவால் ஏற்படும் சிறுநீரின் பின்னோட்டத்தினால் கூட ஏற்படக்கூடும்.இது சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது விதைப்பையில் சீழ் தோன்ற வழிவகுக்கும்.இது ஆண்களிடத்தில் இனப்பெருக்க பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
அப்பகுதியில் ஏதேனும் மென்மைத்தன்மை அல்லது கட்டி இருக்கிறதா என்பதை சரிபார்க்க உடல் பரிசோதனை செய்யப்படுகிறது.ஏதேனும் பாக்டீரியா நோய்த்தொற்று இருக்கிறதா என்பதை அறிய சிறுநீர் சோதனை செய்யப்படலாம்.விதைப்பையில் உள்ள அசாதாரணங்களைக் கண்டறிய அல்ட்ராசவுண்ட் முறை செய்யப்படலாம்.
பிற சோதனைகள் பின்வருமாறு:
- முழுமையான இரத்த அணுக்கள் எண்ணிக்கை.
- கிளமிடியா மற்றும் கோனோரியா இரத்த பரிசோதனைகள்.
எந்த வகையான பாக்டீரியா இந்த நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது என்பதை அறிய நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் அடிப்படையில் இந்த சிகிச்சையளிக்கப்படுகிறது.
சுய பாதுகாப்பு குறிப்புகள்:
- போதிய அளவு ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.
- அசௌகரியத்தில் இருந்து விடுபட விந்தகப்பையை சிறிதுநேரம் மேல்நோக்கிய நிலையில் இருக்கும்படி வைத்து படுத்துக்கொள்ளுங்கள்.
- பொறுத்துக்கொள்ளமுடியும் வரை, ஐஸ் கட்டி ஒத்தடம் பாதிக்கப்பட்ட இடத்தில் வைக்கவும்.
- அதிக திரவ நிலை உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
- வலி நிவாரண மருந்துகள் வலியை குறைக்க உதவுகின்றன.
தடுப்பு நடவடிக்கைகள் உள்ளடிங்கியவை:
- தடுப்பு நடவடிக்கைகள் உள்ளடிங்கியவை.
- நோய் குணமடையும் வரை அதிக பழு உள்ள பொருட்களை தூங்குவதை தவிருங்கள்.
- நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதை தவிருங்கள்.
திடீரென கடுமையான வலி ஏற்பட்டால், அது ஒரு மருத்துவ அவசரமாக கருதப்பட வேண்டும மற்றும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.