காதில் ஏற்படும் தொற்று நோய் (ஓடிடிஸ் மீடியா) - Ear Infection (Otitis Media) in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

December 01, 2018

September 11, 2020

காதில் ஏற்படும் தொற்று நோய்
காதில் ஏற்படும் தொற்று நோய்

காதில் ஏற்படும் தொற்று நோய் (ஓடிடிஸ் மீடியா) என்றால் என்ன?

ஓடிடிஸ் மீடியா என்பது நடுக்காதில் ஏற்படும் தொற்று ஆகும், இது காதில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் செவிப்பறைக்கு பின்னால் திரவத்தை சேர்க்கிறது. இது பொதுவாக சாதாரண சளி (நாசித்தொண்டை), தொண்டைப்புண், அல்லது சுவாச தொற்றினாலும் ஏற்படுகிறது. என்றாலும், இந்த தொற்றுநோய் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதித்தாலும், 6 மற்றும் 15 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளை மிகவும் பாதிக்கும். 75% குழந்தைகள் 3 வயதிற்குள்ளாகவே குறைந்தபட்சம் ஒருமுறையேனும் இந்த நோயால் அவதிப்பட்டிருப்பார்கள். ஓடிடிஸ் மீடியாவின் வகைகள் பின்வருமாறு:

  • கடுமையான ஓடிடிஸ் மீடியா.
  • நீர்மத்தேக்கத்துடன் கூடிய ஓடிடிஸ் மீடியா.
  • நாள்பட்ட நீர்மத்தேக்கத்துடன் கூடிய ஓடிடிஸ் மீடியா.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

பொதுவாக, கடுமையான ஓடிடிஸ் மீடியாவில், நடுக்காதில் ஏற்பட்ட தொற்று வேகமாக வளரும் மற்றும் ஒரு சில நாட்களில் குணமாகிவிடும்.அதன் அறிகுறிகள் பின்வருமாறு:

  • காதுவலி.
  • காய்ச்சல்.
  • உடம்பு சரியில்லாமல் போவது.
  • சோர்வு
  • சிறிது கேட்கும் திறன் இழப்பு - நடுக்காதில் திரவம் குவிந்ததால், காது கேட்கும் திறனில் இழப்பு ஏற்படலாம் (காதில் பசை போன்று ஏற்படுதல்).

எப்பொழுதாவது, ஒரு துளையோடுகூடிய செவிப்பறை வளரலாம் (செவிப்பறையில் ஓட்டை ஏற்படுதல்), மற்றும் காதிலிருந்து சீழ் வடியலாம். ஒரு குழந்தைக்கு காது தொற்று இருப்பதற்கான மற்ற அறிகுறிகள்:

  • வலிப்பு, இழுத்தல், அல்லது தேய்தல் போன்ற உணர்வு ஏற்படுதல்.
  • எரிச்சலூட்டுதல், மோசமான உணவு, அல்லது இரவில் தூக்கமின்மை.
  • இருமல் அல்லது மூக்கு ஒழுகுதல்.
  • வயிற்றுப்போக்கு.
  • வித்தியாசமான மற்றும் மங்கலாக ஒலி கேட்பது அல்லது கேட்பதில் பிரச்சனை, கவனமின்மை ஆகியன மற்ற அடையாளங்களாகும்.
  • சமநிலை இழப்பு.

அவர்களுடன் பெரியவர்களை போல் அறிகுறிகளை வெளிக்காட்ட முடியாது, அதனால் குழந்தைகளிடம் காணப்படும் அறிகுறிகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

சாதாரண சளி சில சமயங்களில் நடுக்காதில் சளி குவிவதற்கு வழிவகுக்கும், எனவே காது இணைப்பு குழாய் (நடுக்காதிலிருந்து மூக்கின் பின்புறம் வரையிலும் இணைகிறது) வீங்கும் அல்லது சளியால் தடுக்கப்படும். சளிக்கு சரியான வடிகால் இல்லாததால், தொற்று மிக எளிதாக நடுக்காது வரை பரவுகிறது. குறிப்பாக சிறிய குழந்தைகளுக்கு நடுக்காதில் தோற்று ஏற்படுவதற்கான காரணங்கள் பின்வருமாறு:

  • பெரியவர்களுடன் ஒப்பிடும்போது காது இணைப்பு குழாய் குழந்தைகளுக்கு சிறியதாகத்தான் இருக்கும்.
  • ஒரு குழந்தையின் மூக்கின் அடிச்சதை பெரியவர்களைவிட பெரியதாக இருக்கும்.
  • சில சூழ்நிலைகளால் நடுக்காதில் ஏற்படும் தொற்று ஆபத்துகளை அதிகரிக்கும். அவை:
    • பிளவுபட்ட மேல்தாடை - ஒரு குழந்தைக்கு அவர்களின் பிறப்பு குறைபாட்டால் வாயின் மேல்தாடையில் பிளவு ஏற்படும்.
    • தாழ்ந்த நோய்க்குறி (டவுன்'ஸ் சிண்ட்ரோம்) - ஒரு குறிப்பிட்ட அளவு கற்றல் குறைபாடு மற்றும் அசாதாரணமான உடல் வளர்ச்சி மாற்றங்கள், மரபணு நிலையின் பண்புகளால் ஏற்படுகிறது.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஓடிடிஸ் மீடியாவிற்கு மருத்துவரிடம் போக தேவையில்லை, அது ஒருசில நாட்களில் தானாகவே குணமாகிவிடும். எனினும், அறிகுறிகள் மோசமாக இருந்தால், நடுக்காதில் ஏற்பட்டிருக்கும் தொற்றை ஒரு ஓடோஸ்கோப்பை பயன்படுத்தி கண்டறிய முடியும். மருத்துவர் ஓடோஸ்கோப்பை பயன்படுத்தி நடுக்காதிலிருக்கும் திரவத்தின் தொற்றுகளையும் அதன் அறிகுறிகளையும் கண்டுபிடிப்பார். சிகிச்சைகள் பயனற்றதாக இருந்தாலோ அல்லது சிக்கல்கள் அதிகமாக இருந்தாலோ டிம்பனோமேட்ரி, ஆடியோமேட்ரி மற்றும் சி.டி ஸ்கேன்/ காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ) போன்ற பரிசோதனைகள் உங்கள் காது, மூக்கு, தொண்டை (ENT) மருத்துவரால் மேற்கொள்ளப்படும்.

சிகிச்சைகள்:

  • நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகளை வாய்வழியாக எடுத்துக்கொள்ளுதல் மற்றும் காதில் மருந்து ஊற்றுதல்.
  • மருந்துகள் (வலி மற்றும் காய்ச்சலுக்கு).
  • சில கால கவனிப்பு.
  • வடம் செலுத்து வளையம் - குழந்தைகளுக்கு நடுக்காதில் அடிக்கடி தொற்று ஏற்பட்டால், மயக்கமருந்து செலுத்தி (வலி இல்லாமல் இருக்க) காதிலிருக்கும் திரவத்தை வெளியேற்ற வடம் செலுத்து வளையங்கள் என அழைக்கப்படும் சிறிய குழாய்களை செவிப்பறையில் பொறுத்தப்படலாம். பொதுவாக இந்த செயல்முறைக்கு சுமார் 15 நிமிடங்களாகும், மற்றும் அந்த நோயாளி அன்றைக்கே மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு செல்லலாம்.
  • பாரஸிட்டமால் மற்றும் இப்யூபுருஃபனின் போன்ற வலி எதிர்ப்பு மருந்துகள் நோயாளிகளுக்கு வலி மற்றும் காய்ச்சலை குறைக்க கொடுக்கப்படலாம்.

சுய பாதுகாப்பு வழிமுறைகள்:

  • அறிகுறிகள் குறையும் வரை பாதிக்கப்பட்ட காதின் மீது சூடான துணியால் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையலாம்.



மேற்கோள்கள்

  1. National Health Service [Internet] NHS inform; Scottish Government; Middle ear infection (otitis media).
  2. The Johns Hopkins University. [Internet]. Baltimore, United States; Otitis Media.
  3. National Institutes of Health [Internet]. U.S. Department of Health & Human Services; Otitis Media.
  4. National Institutes of Health [Internet]. U.S. Department of Health & Human Services; Ear Infections in Children.
  5. Office of Disease Prevention and Health Promotion. [Internet]. U.S. Department of Health and Human Services. Evidence-Based Resource Summary.

காதில் ஏற்படும் தொற்று நோய் (ஓடிடிஸ் மீடியா) டாக்டர்கள்

காதில் ஏற்படும் தொற்று நோய் (ஓடிடிஸ் மீடியா) க்கான மருந்துகள்

Medicines listed below are available for காதில் ஏற்படும் தொற்று நோய் (ஓடிடிஸ் மீடியா). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.