காதில் ஏற்படும் நோய் என்றால் என்ன?
காதில் ஏற்படும் நோய் என்பது காதில் வலி மற்றும் அசௌகரியத்தில் ஆரம்பித்து முழுமையாக காது கேளாமை வரை அறிகுறிகளை வெளிப்படுத்தும் ஒரு நோய் ஆகும். உங்களுடைய காது மூன்று பிரிவுகளாக இருக்கும் - வெளிப்பகுதி, நடுப்பகுதி மற்றும் உட்பகுதி, இந்த பகுதிகளின் முக்கிய செயல்பாடுகள், கேட்கும் திறன் மற்றும் உடலை சமநிலைப்படுத்துவது ஆகும். ஓடிடிஸ் (காதில் வீக்கம் ஏற்படுதல்), காதிரைச்சல் (காதில் ஏற்படும் ஒலி), மெழுகு போன்ற திரவம் சுரப்பது அல்லது காது அடைப்பு, மெனியர் நோய் (தலை சுற்றல் மற்றும் காதிரைச்சல்), ஓட்டோமைகாசிஸ் (காதில் பூஞ்சை தொற்று ஏற்படுதல்), பரோட்ராமா (காற்று அழுத்தத்தின் மாற்றம் காரணமாக காதில் ஏற்படும் காயம்), வெஸ்டிபுலார் நியூரிட்டிஸ் (வைரஸ் தொற்று காரணமாக வெஸ்டிபுலார் நரம்பில் ஏற்பட்ட வீக்கம்), பிரெஸ்பைகசீஸ் (வயதான காரணத்தால் காது கேட்காமல் இருப்பது) மற்றும் கொலஸ்டேடோமா (காதில் ஏற்படும் அசாதாரண வளர்ச்சி) ஆகியன காதில் ஏற்படும் பொதுவான சில நோய்கள் ஆகும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
காதில் எந்த பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பொறுத்து காதில் ஏற்படும் நோயின் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் மாறுபடும். கீழ்காணும் அறிகுறிகள் மிகவும் பொதுவானவை ஆகும்:
- சில சமயங்களில் தலையில் ஏற்படும் பாதிப்பால் காதில் வலி ஏற்படலாம்.
- சிவத்தல் மற்றும் வீக்கம்.
- காதிலிருந்து திரவம் வெளியேறுதல்.
- தலைசுற்றல் மற்றும் சமநிலை இழப்பு.
- காதில் இரைச்சல் அல்லது சலசலப்பான ஒலி கேட்பது.
- காது கேட்காமல் போவது.
- குமட்டல் மற்றும் வாந்தி.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
காதில் ஏற்படும் பல நோய்களுக்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
- பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று.
- காற்று அல்லது நீரினால் ஏற்படும் அழுத்தத்தில் ஏற்படும் திடீர் மாற்றம்.
- காதின் உள்ளே நடக்கும் கால்சியம் படிகங்களின் இயக்கம் காரணமாக சமநிலை இழப்பு ஏற்படும்.
- அதிக சத்தம், வயது காரணமாக செவிப்பறை பலவீனமாக இருப்பது மற்றும் புற்றுநோய் வளர்ச்சி ஆகியவை காரணமாக காது கேளாமை ஏற்படும்.
- சில மருந்துகளை உட்கொள்ளுவதும் காது இரைச்சலுக்கு காரணமாகின்றது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
காதில் ஏற்படும் பல நோய்களின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் மிகவும் பொதுவானவை மற்றும் உங்கள் நிலைமையை பற்றிய சரியான நிலைமையை அறிய உங்கள் காது, மூக்கு,தொண்டை நிபுணரை அணுகவேண்டும். கீழ்காணும் நோய் கண்டறியும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன:
- ஓட்டோஸ்கோப் மூலமாக காற்றை செலுத்தி காதில் செய்யும் பரிசோதனை.
- காதிலிருந்து வெளியேறும் திரவங்களை பரிசோதனை செய்வது.
- ஒலி பிரதிபலிப்பான் - ஒலி அதிர்வெண்களை உபயோகித்து நடுக்காதில் ஏற்பட்ட அழற்சியை கண்டுபிடித்தல்.
- டிம்பனோமேட்ரி - நடுக்காது மற்றும் செவிப்பறையின் நிலைமையை பல்வேறு காற்று அழுத்தத்தின் மூலம் மதிப்பிடுதல்.
- இசைக்கவை பரிசோதனை.
- ஆடியோமெட்ரிக் பரிசோதனை - காதின் கேட்கும் திறனை பரிசோதித்தல்.
- திசுப் பரிசோதனை.
காதில் ஏற்பட்ட நோயை ஒரு சரியான நேரத்தில் கண்டுபிடித்தால் உங்கள் காது, மூக்கு,தொண்டை நிபுணர் உங்களுக்கான சிகிச்சையை தொடங்குவார். சில வழக்குகளில் சாதாரண மருந்துகளில் தொடங்கி அறுவை சிகிச்சை வரை சிகிச்சைகள் இருக்கலாம். கீழ்காணுபவை பொதுவான சிகிச்சைகளாகும்:
- மெழுகை அகற்றுதல்:
காதில் ஏற்பட்ட அடைப்பை உறிஞ்சும் குழாயை வைத்து அகற்றுதல். - மருந்துகள்:
ஆண்டிபாக்ட்டீரியல் அல்லது ஆண்டிபயோடிக்ஸ் சொட்டுமருத்துகள் காதில் ஏற்பட்ட தொற்றுக்கு உபயோகப்படுத்தலாம். காதுவலிக்கு வலிநிவாரணிகளை பயன்படுத்தலாம். வாந்தி மற்றும் குமட்டலை கட்டுப்படுத்த வாந்தியடைகிகளை உபயோகிக்கலாம். - காது கேட்கும் கருவி:
காது கேளாமையை தவிர்க்க காது கேட்கும் கருவியை உபயோகப்படுத்தலாம். - அறுவை சிகிச்சை:
அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய்கட்டி வளர்வதை தடுக்கலாம். - வால் நரம்பு உட்பொருத்துதல்:
வால் நரம்பை உபயோகித்து கடுமையாக காது கேட்காமல் இருப்பதற்கு சிகிச்சையளிக்கலாம். - உடற்பயிற்சி:
தலைசுற்றலுக்கு சிகிச்சையளிக்க உடற்பயிற்சியை மாற்றி அமைக்கலாம். கோந்தை மெல்லுதல் அல்லது கொட்டாவி விடுதல் ஆகியன காது அடைதலுக்கு நிவாரணம் பெற எளிய நுட்பங்களாகும்.
குளித்த பின் அல்லது நீச்சலுக்கு பிறகு காதுகளை உலர வைத்தல் போன்ற சுலபமான முன்னெச்சரிக்கைகள் உங்கள் காதுகளில் வலி மற்றும் தொற்று ஏற்படாமல் தடுக்கும். அதிக சப்தங்கள் கேட்பதை குறைத்தும் பாதுகாப்பான பிளக்குகளை பயன்படுத்துவதும் காது கேளாமையிலிருந்து பாதுகாக்கும். அறிகுறிகளை தவிர்க்க வீட்டு மருத்துவம் எடுத்துக்கொள்வதைத் தவிர்த்து, மருத்துவரை அணுகுவது சிறந்தது.