டிஸ்டோனியா என்றால் என்ன?
டிஸ்டோனியா என்பது பல்வேறு தசைநார் கோளாறுகளுக்கு கொடுக்கப்பட்ட ஒரு கூட்டுப் பெயராகும், இது அடிக்கடி ஏற்படும் தன்னிச்சையில்லாத தசைநார் கோளாறுகளுக்கும் மற்றும் அசாதாரண நிலைபாட்டுக்கும் வழிவகுக்கும். தசைநார் இயக்கங்கள் ஒற்றை தசை, தசைகளின் குழு அல்லது அனைத்து உடல் தசைகள் போன்றவைகளை உட்கொண்டது. இந்த இயக்கங்கள் மீண்டும் நிகழக்கூடியவை மேலும் இவை தசைப்பிடிப்புகளிலிருந்து நடுக்கங்கள் வரை வேறுபடுகிறது.
இதை சார்ந்த முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
தசைகளின் தேவைக்குமேற்பட்ட செயல்பாடே டிஸ்டோனியாவின் முக்கிய அறிகுறியாகும். இதற்கான அறிகுறிகள் உங்கள் உடலின் எந்த பகுதியிலும் மற்றும் எந்த வயதிலும் ஏற்படலாம். இந்த நோய் பொதுவாக நிலையானதாகவோ அல்லது மோசமானதாகவோ இருக்கக்கூடும், ஆனால் இது அரிதாக தலைகீழாக மாறக்கூடியது. டிஸ்டோனியாவுடன் தொடர்புடைய பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- தசைப்பிடடிப்புகள் மற்றும் கால் இழுத்துக்கொள்தல்.
- திடீரென கழுத்தில் ஏற்படும் நிலையான ரிதம் இல்லாத (ஜெர்கி) இயக்கங்கள்.
- அடிக்கடி ஒரு கண்ணையோ அல்லது இரு கண்களையோ சிமிட்டுதல் அல்லது கண்களை மூடும் போது ஏற்படும் தசைச்சுரிப்பு.
- தன்னிச்சையற்ற நிலையான ரிதம் இல்லாத கைகளின் (ஜெர்கி) இயக்கங்கள்.
- பேசும் போதும் மற்றும் மெல்லும் போதும் எதிர்கொள்ளும் சிரமம்.
இந்த அறிகுறிகளின் முக்கிய அம்சம், அவைகள் ஆரம்பக்கட்டத்தில் லேசானதாக இருக்கும், பிறகு மன அழுத்தம் அல்லது சோர்வினால் தூண்டப்படலாம், ஆனால் நோய் மோசமடையும் பட்சத்தில், இந்த அறிகுறிகள் அடிக்கடி ஏற்படுதலும் மற்றும் கவனிக்கக்கூடியதுமாக இருக்கலாம். இவை அசாதாரண நிலைப்பாட்டிற்கும் வழிவகுக்கலாம்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
டிஸ்டோனியாவின் மருத்துவ அறிகுறிகள் இது உருவதற்கான காரணத்தை அடையாளம் காண உதவுகின்றன, மற்றும் ஒருமுறை சரியான காரணம் அறியப்பட்டால், அந்த நிலைக்கான சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம். எனினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சரியான காரணம் புலப்படுவதில்லை. டிஸ்டோனியாவின் வளர்ச்சிக்கு பின்வரும் காரணிகள் பங்களிக்கலாம்:
- மரபணு காரணங்கள்: தவறான மரபணுக்களின் குழுவானது 1-2 சதவீத சந்தர்ப்பங்களில் டிஸ்டோனியாவை ஏற்படுத்தும்.
- பார்கின்சன்'ஸ் நோய், பெருமூளை வாதம் மற்றும் பல ஸ்களீரோசிஸ் ஆகிய நிலைகளும் காரணமாக இருக்கலாம்.
- ஆக்ஸிஜன் இழப்பினாலும் ஏற்படலாம்.
- கார்பன் மோனாக்சைடு நச்சும் ஒரு காரணி.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
டிஸ்டோனியா நோய் கண்டறிதலில் குடும்ப வரலாறு, நோயாளியின் வயது, பாதிக்கப்பட்ட உடலின் பகுதி மற்றும் டிஸ்டோனியா தனிமைப் படுத்தப்பட்டதா அல்லது வேறொரு இயக்க கோளாறுடன் சேர்ந்திருக்கின்றதா போன்றவைகளையும் கருத்தில்கொள்கிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதியில் உடலியல் பரிசோதனை செய்வதன் மூலம் டிஸ்டோனியா இருப்பதைக் கண்டறியலாம். இருப்பினும், நோய் கண்டறிதலை உறுதிப்படுத்தவும், இதே போன்ற அறிகுறிகளை கொண்ட மற்ற நோயினை கண்டறியவும் பின்வரும் சோதனைகள் தேவைப்படுகின்றன:
- எம்.ஆர்.ஐ.யின் மூலம் நியூரோஇமேஜிங் சோதனை மேற்கொள்தல்.
- மரபணு சோதனைகள்.
- நரம்பு கடத்தல் ஆய்வு மற்றும் உடலுணர்ச்சிசார்ந்த நரம்புகளை
- தூண்டக் கூடிய சாத்தியமான பரிசோதனை போன்ற நரம்பு உளவியல்சோதனைகள்.
- கண் பரிசோதனை.
- இரத்த பரிசோதனைகள்.
- திசுச் சோதனை.
டிஸ்டோனியா நோய் கண்டறிந்து உறுதிப்படுத்தப்பட்டவுடன், சிகிச்சையை தீர்மானிக்கலாம். டிஸ்டோனியாவின் சிகிச்சை முறைகள் உள்ளடங்கியவை:
- உடல் மற்றும் தொழில் முறை சிகிச்சை: நோயாளிகள் விருப்பப்பட்ட பயிற்சிகள் பயனுள்ளதாக இருக்கும்.
- வாய்வழி மருந்துகள்:
- ஆண்டிக்கோலினர்ஜிக்குகள்.
- தசை தளர்த்திகள்.
- டோபமினர்ஜிக்.
- GAB எர்கிஜிக் (காமா-அமினொபியூட்ரிக் அமில-எர்கிஜிக்).
- போடுலினம் நரம்பு நச்சு: போடுலினம் நச்சு ஊசிகளின் வீரியம் 3-4 மாதங்களுக்கு வரை நீடிக்கும், அதன் பிறகு நீங்கள் மருத்துவமனைக்கு சென்று அடுத்த ஷாட்டை எடுத்துக்கொள்ளலாம்.
- அறுவை சிகிச்சை குறுக்கீடு:
- நரம்பியல் மாற்றம்.
- பாதிக்கப்பட்ட உறுப்புகளை அகற்றுதலுக்கான அணுகுமுறைகள்.
- புற நரம்பு அறுவை சிகிச்சைகள்.
- கல்வி மற்றும் ஆலோசனை: மேலே உள்ள சிகிச்சைகளில் பல சிகைச்சைகள் முழுமையாக குணமளிப்பவையில்லை, எனவே இந்த நிலையை குறித்து அறிய கல்வி மற்றும் ஆலோசகர்களிடம் ஆலோசனை மேற்கொள்வது உதவியாக இருக்கும்.