தசைநாண் தசைநார் அழுகல் என்றால் என்ன?
தசைநாண் தசைநார் அழுகல் (டி.எம்.டி) என்பது மரபுசார் தசைநார் கோளாறுகளைக் குறிக்கிறது, இது தசை பலவீனம் மற்றும் சீர்கேட்டை குறிக்கிறது. இது சுமார் 3,600 ஆண் குழந்தைகளில் ஒருவருக்கு காணப்படும் அரிய மரபணு கோளாறு ஆகும்.
அதன் முக்கிய அறிகுறிகள் என்ன?
டி.எம்.டி இன் அறிகுறிகள் 6 வயதிற்கு முன்பாக தோன்றும் ஆனால் சில நேரங்களில் அதற்கு முன்பாகவும் தோன்றக்கூடும். இதன் அறிகுறிகள் பின்வருமாறு:
- சோர்வு.
- குறைந்த அறிவுத்திறன்.
- கற்றல் குறைபாடுகள்.
- இயக்கும் திறனில் பிரச்சினைகள்.
- உடல் செயல்த்திறன் பிரச்சனைகள்.
- பலவீனமான சுவாச தசைகள் காரணமாக மூச்சுத்திணறல் பிரச்சனைகள்.
- தசை வலிகள்.
- சரியாக நடக்க இயலாமை.
- இதய நோய்கள் (வாழ்க்கையின் பிற்பகுதியில் தொடங்கும்).
- அடிக்கடி மயக்கம்.
- உட்கார்ந்து அல்லது படுத்திருக்கும் நிலையில் இருந்து எழுந்திருப்பதில் சிரமம்.
தசை பலவீனம் வயதாக ஆக மோசமாகிறது.
அதன் முக்கிய காரணங்கள் என்ன?
டி.எம்.டி ஒரு மரபணு கோளாறு ஆகும். இந்த டி.எம்.டி நோயின் முக்கிய காரணம் டிஸ்டிரோபினை (தசை புரதம்) குறிக்கும் மரபணுக்களின் குறைபாடு ஆகும். டிஸ்டிரோபின் இல்லாமல், உடலில் உள்ள தசைகள் ஒழுங்காக இயங்காது. தன்னிச்சையான மாற்றம் காரணமாக இந்த நிலைமை அறியப்படாத குடும்ப வரலாறு இல்லாத நபர்களில் இந்த டி.எம்.டி ஏற்படலாம்.
டி.எம்.டி. மரபுவழி அபாயம் ஆண்களில் அதிகமாகக் உள்ளது, அதே நேரத்தில் ஒரு பெண் குழந்தைக்கு இந்த நோய் பரவுவது அரிது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
டி.எம்.டி உடலில் தோன்றும் அறிகுறிகளை மதிப்பீடு செய்வதன் மூலம் கண்டறியப்படுகிறது.
நரம்பியல் சோதனைகளை பின்பற்றலாம். சரியான நோயறிதல் பரிசோதனைக்கு, தசை மற்றும் இதய செயல்பாடு பரிசோதனைகள் செய்யப்படலாம். சீரம் சி.பி.கே, மரபணு சோதனைகள் மற்றும் தசை உயிரணுக்கள் போன்றவை நோயினை உறுதிப்படுத்த செய்யப்படலாம்.
டி.எம்.டி என்பது இதுவரை எந்த சிகிச்சையும் இல்லாத ஒரு மரபணு கோளாறு ஆகும். பின்பற்றப்படும் சிகிச்சை முறை, அறிகுறிகளை கையாளவும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் உதவும்.
ஸ்ட்டீராய்டுகள் தசை நார் தேய்வின் வேகத்தை குறைக்க கொடுக்கப்படலாம். வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்க்கைமுறை மாற்றங்களை கடைபிடிப்பது முக்கியம். ஸ்டெராய்டுகள் எடை கூடுதல் போன்ற பக்க விளைவை ஏற்படுத்தும் என்பதால், ஒரு சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மற்றும் ஒரு ஆரோக்கியமான, சீரான உணவுமுறையை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.
பிசியோதெரபி தசை செயல்பாட்டை பராமரிக்க உதவும்.