உலர் வாய் என்றால் என்ன?
உலர் வாய் அல்லது ஜீரோஸ்டோமியா எனப்படுவது வாயில் உமிழ்நீர் சுரப்பு குறைபாடாகும். இது ஒரு மிகப்பொதுவான அறிகுறியாக இருப்பதோடு பெரும்பாலும் பல்வேறு மருந்துகளை எடுத்துக்கொள்வதன் பக்க விளைவாக அறியப்படுகிறது.
நீங்கள் பதற்றமாகவோ அல்லது மனஅழுத்திலோ இருக்கும்போது வாய் உலர்வதை உணர முடியும். இது முதுமையுடனும் தொடர்புடையது. உலர் வாய் நோய் தீவிரமடையும்போது, பேசுவதிலும், மெல்லுவதிலும் விழுங்குவதிலும் சிரமங்களை ஏற்படக்கூடும். உலர் வாய், பற்சிதைவு மற்றும் வாய்ப்புண் போன்ற மற்ற தொற்றுக்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பின்வருபவை உலர் வாயின் அறிகுறிகள் ஆகும்:
- பேசுவதில்,மெல்லுவதில் மற்றும் விழுங்குவதில் சிரமங்கள்.
- அடிக்கடி தாகம் ஏற்படுவது.
- உதடுகளில் வெடிப்புகள்.
- சுவை உணரும் திறன் குறைவது.
- தொண்டைப்புண்.
- ஹாலிடோசிஸ் (சுவாசத்தில் துர்நாற்றம்).
- வாயின் ஓரங்கள் வறண்டு விடுவது.
- வாயில் அடிக்கடி புண்கள் ஏற்படுவது.
- செயற்கைப்பற்களை அணிவதில் சிரமங்கள்.
- பல்லீறுகளில் தொற்றுகள் அதிகரிப்பது.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
உலர் வாய் பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது:
- உடலில் திரவ பற்றாக்குறையினால் ஏற்படும் நீர்சத்து குறைபாடு அல்லது சிறுநீரக நோய்கள் மற்றும் நீரிழிவு போன்ற மருத்துவ காரணங்கள்.
- வாய் வழியாக மூச்சு விடுவதும் (இரவு நேரத்தில்) உலர் வாய் ஏற்படுவதற்கு ஒரு காரணமாகும். நேசல் பாலிப்ஸ் (மூக்கில் சதை வளர்ச்சி), பெரிதான டான்சில்கள் மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் நாசியழற்சி போன்ற உடல்நிலைகள் வாய் வழியாக மூச்சு விடுவதற்கு வழிவகுத்து, வறட்சிக்கு வித்திடுகிறது.
- நீரிழிவு நோய் உமிழ்நீர் சுரப்பது குறைய காரணமாகிறது.
- கதிரியக்க புற்றுநோய் சிகிச்சை.
- புகைபிடித்தல்.
- உலர் வாய் ஆட்டோ இம்யூன் நோயின் காரணமாகவும் ஏற்படக்கூடும் (சோகிரென்ஸ் நோய்க்குறி).
- போதைப்பொருள் எடுத்துக்கொள்வது
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
இது பின்வரும் முறைகளால் கண்டறியப்படுகிறது:
- சாயோமெட்ரி- உமிழ்நீரின் சுரப்பை அளவிடுவதற்கு பயன்படுத்துவது.
- சைலோகிராஃபி - உமிழ்நீர் குழாயில் கதிர்வீச்சு உட்புகாத சாயத்தை பயன்படுத்துவது.
- மற்ற சோதனைகள் - அல்ட்ராசவுண்ட், காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ), உமிழ்நீர் சுரப்பியை பரிசோதித்தல் மற்றும் பல.
உலர் வாயின் சிகிச்சைக்கென்று ஒரு நிலையான வழிகாட்டுதல் எதுவுமில்லை. எனினும் கீழ்காணும் வழிகளின் மூலம் நீங்கள் உங்கள் பாதிப்புகளை குறைக்க முயற்சிக்கலாம்:
- அதிகபட்ச நிவாரணத்திற்காக உமிழ்நீர் மாத்திரைகள் மற்றும் தெளிப்பிகள் (ஸ்பிரே) போன்றவை.
- சூயிங்கம் மற்றும் ஆர்கானிக் அமிலங்கள் போன்ற உமிழ்நீர் சுரப்பை தூண்டும் பொருட்களை பயன்படுத்துதல்.
- வாயின் வறட்சியை குறைப்பதற்காக அதிக அளவு திரவங்களை எடுத்துக்கொள்ளுதல்.
- முறையான மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல்.
ஒப்பீட்டு நோய்ஆய்வு:
- சோகிரென்ஸ் நோய்க்குறி என்பது உலர் வாய் மற்றும் உலர் கண்ணின் ஒரு நிலையாகும்.
- கதிரியக்க சிகிச்சையின் விளைவாகவும் உலர் வாய் ஏற்படலாம்.
- தூக்கமின்மை, மனஉளைச்சல் மற்றும் பதட்டம் போன்ற உளவியல் நிலைகளின் விளைவாகவும் நிலையற்ற உலர் வாய் ஏற்படக்கூடும்.
- ஹார்மோனல் குறைபாடுகள்.