டயப்பர் ராஷ் என்றால் என்ன?
டயப்பர் ராஷ், என்பது டயப்பர் தோலழர்ஜி எனவும் அழைக்கப்படுகிறது, இது குழந்தையின் அடிப்பகுதியின் தோலில் ஏற்படும் சிகப்பு இணைப்புகளாக இருக்கும் நிலை. டயப்பரின் பயன்பாடு, சுகாதார நடைமுறைகள், கழிப்பறை பயிற்சி, குழந்தை-வளர்ப்பு முறைகள் ஆகியவற்றில் இருக்கும் வேறுபாடுகளின் காரணமாக இந்த நிகழ்வின் அறிக்கை உலகளவில் வேறுபடுகின்றன. கைக்குழந்தைகளில், மதிப்பிடபட்ட பாதிப்பு 7லிருந்து -35% வரை ஆகும். குழந்தை பிறந்த ஒரு வரத்திலுருந்தே இந்த பாதிப்பு ஏற்படுகிறது, ஆனால் அதிகபட்ச நிகழ்வு 9லிருந்து -12 மாதங்களுக்கு இடையிலேயே உருவாகிறது.
அதன் முக்கிய அறிகுறிகள் என்ன?
முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு:
- தோல் சிகப்பு நிறமாக காணப்படலாம்; இது தொடைகள், பிட்டம் அல்லது பிறப்புறுப்புகளில் வலி உணர்வை வளர்ச்செய்யலாம்.
- குழந்தைகள் அழுகையோடு அசௌகரியத்தையும் உணர்கிறார்கள்; டயப்பர் பகுதியை கழுவும்போது அவர்கள் சிணுங்குகிறார்கள்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
டயப்பர் ராஷ் பெரும்பாலும் முறையான டயப்பர் மாற்றும் பழக்கம் இல்லாததினாலேயே ஏற்படுகின்றது அதாவது ஈரமான டயப்பர்களின் நீண்ட நேரப் பயன்பாடு அல்லது நீண்ட இடைவெளிக்கு பின் டயப்பர் மாற்றுவது ஆகியவற்றினாலேயே ஏற்படுகின்றது. இத்தகைய பழக்கங்கள் தோலின் உணர்வுதிறனுக்கான பிரச்சனைகளுக்கு வழிவகுக்குகிறது. பொதுவான ஏற்படும் காரணங்கள் பின்வருமாறு:
- நீண்ட நேரம் டயப்பரினால் சருமத்திற்கு ஏற்படும் தொடர்பு: இதனால் குழந்தைக்கு எரிச்சல் ஏற்படக்கூடும்.
- தொற்று: நீண்ட நேரம் டயப்பர் சிறுநீரகத்தில் ஊறும்போது, தோலின் பிஹெச்சில் மாற்றம் ஏற்படுகிறது; இவை பாக்டீரியாக்கள் மேலும் வளர சாதகமாகயிருகின்றன.
- ஒவ்வாமை: சில வகை டயப்பர் குழந்தைகளின் தோலில் உணர்திறனை உண்டாக்கலாம்.
இதை கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
சிவப்பு திட்டுக்கள் மற்றும் குழந்தையின் முழு நடவடிக்கையை கவனிப்பதன் மூலம் இதை கண்டறியலாம். இதற்கு எந்த விதமான குறிப்பிட்ட சோதனைகளும் தேவை இல்லை அதோடு ஒருவர் இதற்கான சிகிச்சையை வீட்டிலேயே மேற்கொள்ளலாம்.
சிகிச்சை முறைக்குள் உள்ளடங்கியவை:
- லேசான ஸ்டீராய்டல் கிரீமின் பயன்பாடு:
- ஆன்டி-ஃபங்கல் கிரீம்.
- மேற்பூச்சு ஆண்டிபையோட்டிக்ஸ்.
- சுய-பராமரிப்பு குறிப்புகள்:
- சுத்தபடுத்துதல், உலரவைத்தல், மற்றும் டயப்பர் பகுதிகளை சுத்தப்படுத்தும் போது மென்மையாக கையாளுதல்.
- துணி டயப்பர்களை ப்ளீச்சினை கொண்டு துவைத்தல் அல்லது துணிகளை 15 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்தல்.
- டயப்பரில் இருக்கும் சோப்பு நுரைகள் போகுமளவிற்கு நன்கு அலசியிருக்கிறதா என்று உறுதிக்கொள்தல்.
- டயப்பர் பகுதியில் காற்றோட்டத்தை அதிகரிக்க குழந்தைகளை சிறிது நேரத்திற்கு டயப்பர் இன்றி விடுதல்.
- தடித்திருக்கும் இடத்தின் மீது மென்மையான லோஷன் / கிரீம்களை பூசுதல்.
- சாலிசிலேட்டுகள், பென்சோயிக் அமிலங்கள், கற்பூரம், போரிக் அமிலம் மற்றும் பீனால் போன்றவைகளை கொண்ட பொருட்களை தவிர்க்கவும்.
- தினமும் சூடான தண்ணீர் மற்றும் வாசனை-இல்லாத சோப்பினால் உங்கள் குழந்தையை குளிப்பாட்டவும்.
டயப்பர் ராஷ் என்பது குணப்படுத்தக்கூடிய ஒரு நிலை இதற்கு சரியான பராமரிப்பின் மூலம் விரைவாக தீர்வுக் காணலாம். இருப்பினும், நல்ல சுகாதாரம் மற்றும் தூய்மையான பழக்கவழக்கங்களின் உதவியினால் சிக்கல்களை வருமுன் தவிர்ப்பது சாலச் சிறந்தது.