டெர்மட்டிட்டிஸ் ஹெர்பெட்டிஃபார்மிஸ் என்றால் என்ன?
டெர்மட்டிட்டிஸ் ஹெர்பெட்டிஃபார்மிஸ் (டிஹெச்) என்பது கொப்புளங்களுடன் கூடிய தோலின் வெடிப்பு நிலை, இது பசையம் இருக்கும் உணவுப்பொருளை உட்கொள்வதன் காரணத்தினாலேயே ஏற்படுகின்றது. இந்நோய் டுஹெரிங்'ஸ் நோய் எனவும் அறியப்படுகின்றது மேலும் செலியாக் நோய் வெளிப்பாட்டிற்கும் இதுவே காராணியாக இருக்கிறது. இது ஒரு ஆட்டோ இம்யூன் நிலையாக இருப்பதோடு டிஹெச் சினைக் கொண்டிருக்கும் பெரும்பான்மையானவர்களுக்கு பசையம்-உணர்திறன் மருந்தாக்கியலையும் ஏற்படுத்துகின்றது. செலியாக் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் முன்கூட்டியே டிஹெச்சாலும் பாதிக்கப்படுவார்கள் என கருதப்படுகிறது. இந்நோய் பிற இடங்களை ஒப்பிடுகையில் இந்தியாவின் வட பகுதியில் மிகவும் பொதுவாக இருக்கின்றது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
இதன் அறிகுறிகள் பின்வருமாறு:
- அரிப்பினால் ஏற்பட்ட வீக்கம் அல்லது உடலில் இருபுறங்களிலும் கொப்புளங்கள் ஏற்படுதல்.
- கொத்து கொத்தாக ஏற்படும் சிறிய பருக்கள்.
- பல் எனாமலில் ஏற்படும் குறைபாடுகள்.
ஹெர்பெட்டிஃபார்மிஸ் (டிஹெச்) முக்கியமாக கீழ்காணும் மக்களிடத்திலேயே அதிக பாதிப்பை ஏற்படுத்தும்:
- காக்கேசிய மக்களில் 15 முதல் 40 வயதுவரை உள்ளவர்கள்.
- பெரும்பான்மையாக ஆண்களுக்கே பாதிப்பேற்படுத்துகிறது.
- 20 வயதிற்கும் கீழுள்ள பெண்களுக்கு பாதிப்பேற்படுத்துகிறது.
- மரபணுவினைக் கொண்டு இந்நோய் தாக்கம் ஏற்படுவதை முன்கூட்டியே கணிக்கப்பட்டவர்கள்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
டெர்மட்டிட்டிஸ் ஹெர்பெட்டிஃபார்மிஸின் (டிஹெச்) முக்கிய காரணம் தோல் திசுக்களில் படியும் இம்முனோகுளோபிமின் ஏ, இதுவே தோல் சிதைவின் உருவாக்கத்திற்கும் வழிவகுக்கிறது. டெர்மட்டிட்டிஸ் ஹெர்பெட்டிஃபார்மிஸ் (டிஹெச்) கொண்டிருப்பவர்கள் ஹைப்போதைராய்டியத்தையும் கொண்டிருக்கலாம். இதன் சிக்கல்கள் பின்வருமாறு:
- பல் சம்பத்தப்பட்ட பிரச்சனைகள்.
- இதயப் பிரச்சனைகள்.
- கருச்சிதைவு ஆகிக்கொண்டே இருப்பது.
- கொழுப்பு நிறைந்த கல்லீரலின் விளைவால் அசாதாரணமான கல்லீரல் செயல்பாடு.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
டிஹெச் முக்கியமாக கீழ்கண்டவாறு கண்டறியப்படுகிறது:
- தோல் திசுப் பரிசோதனை.
- ஊட்டச்சத்து குறைபாடு ஸ்கிரீனிங்.
- இரத்த பரிசோதனைகள்.
- சிறுகுடல் திசுப்பரிசோதனை.
டிஹெச் நோய்க்கு நோயாளியின் சகிப்புத்தன்மையின் அடிப்படையில் சல்ஃபோன் அல்லது சல்ஃபா மருந்துகளின் மூலம் சிகிச்சை செய்யப்படுகிறது.
சுய பாதுகாப்பு குறிப்புகள்:
- பசையம்-நிறைந்திருக்கும் உணவுகளை தவிர்த்தல்.
- நோயின் முன்னேற்றம் மற்றும் மருந்துகளின் வீரியத்தை அறிந்துகொள்ள உங்கள் மருத்துவரை பின்தொடர்ந்து சிகிச்சை பெறுதல்.
- பசையம்-அல்லாத உணவுகள் என்பதை உணவுப்பொருட்களின் மேலிருக்கும் லேபில்களை வாசித்து உறுதிசெய்துகொள்தல்.
- இறைச்சி, பால் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை போன்ற உணவுவகைகளை தினசரி உணவு பழக்கத்தில் சேர்த்துக்கொள்தல்.
- தானியங்கள், பருப்பு வகைகள், கொட்டைகள் விதைகள் மற்றும் கிழங்கு வகைகள் ஆகியவைகள் மற்ற பாதுகாப்பான மாற்று உணவுகள் ஆகும்.
டிஹெச் என்பது பசையத்தினால்-தூண்டப்படும் நிலை, பசையம் கொண்டிருக்கும் உணவுகளை தவிர்ப்பதனால் இந்நிலை தடுக்கவும் மற்றும் சிகிச்சையளிக்கவும் கூடியது. டிஹெச் என்பது முன்கணிக்கக்கூடிய நோய் என்பதால் பசையம்-அல்லாத உணவு பழக்கத்தை ஏற்றுக்கொண்ட பல மக்களினால் அவர்களது நிலை மேம்படுவதை காணமுடிகிறது. எனவே, டிஹெச்சினை கையாள சரியான வாழ்க்கைமுறை மாற்றங்களை தேர்வுசெய்தல் அவசியம்.