தோலழற்சி (டெர்மட்டிட்டிஸ்) என்றால் என்ன?
தோலழற்சி என்பது பல்வேறு காரணிகளின் குழுமத்தினால் உண்டாகும், தோல் வீக்கம் அல்லது கட்டி ஆகும். இது குழந்தைகளையே அதிகம் தாக்குகின்றது (உலகளவில் 15% -22% குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்). இருப்பினும், இந்திய குழந்தைகளிடம் இதன் பாதிப்பும் அதனால் ஏற்படும் விளைவுகளும் குறைவாகவே காணப்படுகிறது.
தோலழற்சியின் பொதுவான வகைகள்:
- அட்டோபிக் தோலழற்சி (மரபுவழித் தோல் அழற்சி).
- காண்டாக்ட் தோலழற்சி (அன்னியப் பொருள் தொடர்பு தோலழற்சி).
- ஸ்பாரோஹோயிக் டெர்மடிடிஸ் (ஊறல் தோலழற்சி ).
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இதன் பொதுவான அறிகுறிகள்:
இதன் பிரத்யேகமான அறிகுறிகள்:
- அட்டோபிக் தோலழற்சி: இது கைக்குழந்தைகள் உடலில் உள்ள
- முழங்கையின் உட்புறத்திலும், முட்டியின் பின்புறத்திலும் உள்ள தோல் மடிப்புகளில் காணப்படுகிறது.
- காண்டாக்ட் தோலழற்சி: தோலில் அழற்சி அல்லது எரிச்சல், தோலில் உள்ள அழற்சி வெடிப்புகளை போன்று காணப்படும், மேலும் அரிப்புடன் கூடிய கொட்டும் (உதாரணமாக; தேனீ கடி அல்லது கொட்டு போன்றது) உணர்வும் இருக்கும்.
- ஸ்பாரோஹோயிக் தோலழற்சி: சிவந்த தோலில் செதில்கள் மற்றும் பொடுகு போன்றவை தோன்றும். கைகுந்தைகளின் தலை உச்சியில் காணப்படும் இது, க்ரேடில் கேப் என்று அழைக்கப்படுகிறது.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
மரபுரீதியான காரணங்கள், ஒவ்வாமைகள், உடல்நிலை பாதிப்புகள் அல்லது தோலழற்சியை ஏற்படுத்தும் வெளிப்புற எரிச்சலூட்டிகள் ஆகியவை இதன் காரணங்களாகும்.
பல்வேறு வகையான தோலழற்சியும் அதன் காரணங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- அடோபிக் தோலழற்சியானது, மரபு காரணிகள், நோயெதிர்ப்பு மண்டல செயலிழப்பு, பாக்டீரியா நோய் தாக்குதல்கள் மற்றும் பல்வேறு வெளிப்புற காரணிகளால் ஏற்படுகின்றது.
- விஷ படர்க்கொடி, நிக்கல் என்னும் உலோகம் கலந்த அணிகலன்கள், துப்புரவு செய்ய பயன்படும் பொருட்கள், மணமிக்க வாசனை திரவியங்கள், அழகுசாதனப்பொருட்கள் மற்றும் பதம்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகியவையுடன் நேரடி தொடர்பு ஏற்படும்போது காண்டாக்ட் தோலழற்சி ஏற்படுகிறது.
- ஸ்பாரோஹோயிக் தோலழற்சியானது மனஅழுத்தம், குளிர்ந்த மற்றும் வறண்ட பருவநிலை, ஒருவரின் தோலில் இருக்கும் ஈஸ்ட் அளவு மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம்.ஆகியவற்றால் ஏற்படுகின்றது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
மருத்துவர் தாக்கங்களையும், அறிகுறிகளையும் பற்றி கேட்கலாம். ஒவ்வாமைப்பரிசோதனை (அல்ர்ஜிக் பேட்ச் டெஸ்ட்), ஒவ்வாமையை கண்டுபிடிக்க பயன்படும் முக்கிய பரிசோதனை முறையாகும். கீழ்கண்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்:
- தோல் ப்ரிக் பரிசோதனை அல்லது ரேடியோஅல்லர்கோஸார்பண்ட் (ராஸ்ட்) பரிசோதனைகள்.
- கல்ச்சர் பரிசோதனைக்காக தோல் பகுதியின் மாதிரி.
- தோல் திசுச்சோதனை.
அறிகுறிகளின் அழற்சி மற்றும் தீவிரத்தின் அளவைப்பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும்.
- மேற்பூச்சுக்கான ஸ்டீராய்டு கிரீம்கள் பரிந்துரைக்கப்படும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் கிரீம்களும் பரிந்துரைக்கப்படலாம்.
- ஒளி சிகிச்சை மற்றும் ஒளிக்கதிர் சிகிச்சை (போட்டோதெரபி) போன்றவை பரிந்துரைக்கப்படும்.
சுயபாதுகாப்பு ஆலோசனைகள்
- பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளையும் அரிப்பை முறிக்கும் மருந்துகளையும் கவனத்துடன் உட்கொள்ளவேண்டும்.
- குளிர்ந்த மற்றும் ஈரமான இறுக்கிகளை தோல் எரிச்சலை ஆற்றும்.
- மிதமான வெந்நீர் குளியல் தாக்கத்தை குறைக்கும்.
- அழற்சி அடைந்த தோலினை உராய்தலோ, சிராய்த்தலோ கூடாது.
தோலழற்சி என்பது மிகவும் அசௌகரியமான நிலை, ஏனென்றால் உங்கள் தோலானது, நிலையை மோசமாக்கும் பல பொருள்களுடன் தொடர்பு கொள்ளும். ஆரம்ப நிலையிலேயே சரியான பாதுகாப்பு மற்றும் சிகிச்சையை மேற்கொள்வது அதிக பலனை தரும்.