சுருக்கம்
மனசொர்வு என்பது உலகெங்கும் உள்ள பொதுவான பிரச்சினைகளில் ஒன்று. பண்டைய காலங்களில், மனச்சோர்வு மெலன்கொலியா என்று அழைக்கப்பட்டது. மேலும் அது எல்லோருக்கும் தெரிந்த ஒரு மனநல பிரச்சினையாக இருக்கவில்லை. கடந்த சில தசாப்தங்களாக மனச்சோர்வு அதிகரித்துள்ளது. அதனால் நோயைப் பற்றிய விழிப்புணர்வு உண்டாயிற்று. சமீபத்திய ஆண்டுகளில், மன அழுத்ததினால் பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளும் பாதிக்கப்படுவதாக அறியப்படுகிறது. மனச்சோர்வு நிகழ்வுகள் அதிகரித்து வருவதால், ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு அதற்குரிய சிகிச்சைய அளிக்கப்பட வேண்டியது அவசியம்.
மருத்துவ சொற்களில் மனச்சோர்வு மனநிலை கோளாறு என விவரிக்கப்படுகிறது. மனசோர்வின் அறிகுறிகள்- எதிர்மறையான எண்ணங்கள், சமூகத்திலிருந்து ஒதிங்கிகொள்ளுதல் மற்றும் தொடர்ந்து சோகமாகவே இருப்பது ஆகியவை ஆகும். மனசொர்வின் பல்வேறு வகைகள் உள்ளன அவை - மனத் தளர்ச்சி (குழந்தை பிறப்புக்குப் பின்), டிஸ்த்திமியா (விடாத ஆனால் லேசான மனச்சோர்வு), பருவகால பாதிப்புக் குறைபாடு மற்றும் இருமுனை சீர்குலைவு. மருத்துவரீதியாக, மன அழுத்தம் நான்கு கட்டங்களாக உள்ளது. இந்த பிரச்சினை முன்னேற்றம் அடைகையில் ஒருவரின் திறம்பட செயல்பாட்டு திறனைக் பாதிக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், பல தலையீடு நுட்பங்கள் உதவம். ஒரு மனநல மருத்துவர் அல்லது உளவியலாளரிடம் இருந்து இதற்கான உதவியை நாடுவது மன அழுத்தத்தை சமாளிக்க ஒரு சிறந்த வழி ஆகும். பல தன்னியக்க உதவிக் குறிப்புகள் உள்ளன, அவை இந்த குறைபாட்டை சமாளிக்க உதவுகிறது. மனநல சிக்கல்கள் என்றாலே சமூகக் களங்கம் ஆகும் என்பதால், மன அழுத்தம் உள்ளவர்கள் சிக்கலை எதிர்கொள்ளுவதர்க்கும் உதவியை பெருவதர்க்கும் சிரமப்படலாம். மனச்சோர்வு விழிப்பு உணர்வு அதிகரிப்பதனால் மக்கள் அதை தனியாக எதிர்கொள்ள முயற்சிக்காமல், தயக்கம் இன்றி முன்வர வேண்டும்.