சுருக்கம்
டெங்கு என்பது, கொசுக்களால் பரவுகிற ஒரு வகை வைரஸ் நோய் தொற்றாகும். இந்த நோயை ஏற்படுத்துகிற நான்கு விதமான வைரஸ்கள் இருக்கின்றன, மற்றும், இவற்றில் எ தன் மூலமாக வேண்டுமானாலும் டெங்கு ஏற்படக் கூடும். ஒருமுறை, ஏதேனும் ஒரு வகை டெங்கு வைரஸால், ஒரு நபர் நோய் தொற்றுக்கு உள்ளான பிறகு, மற்ற வகைகளுக்கு ஒரு குறுகிய-கால (கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள்), அல்லது பகுதி எதிர்ப்புடன், அந்தக் குறிப்பிட்ட வகைக்கு ஒரு வாழ்நாள் நோய் எதிர்ப்பு உருவாகிறது ஆனால், இறுதியாக, இந்த நான்கு வகைகளும் ஒரு நபரைப் பாதிக்கலாம். நோய் தொற்று பரவலின் பொழுது, டெங்கு வைரஸின் ஏதேனும் அல்லது நான்கு வகைகளும் சுழற்சியில் இருக்கக் கூடும்.
டெங்கு வைரஸ், பெண் ஏடிஸ் எஜிப்டி கொசு மூலம் ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்குப் பரப்பப்படுகிறது. இந்தக் கொசு, ஒரு நோய் தொற்றுள்ள நபரிடம் இருந்து, இரத்தத்தைக் குடிக்கும் பொழுது தனக்கு வைரஸைப் பெற்றுக் கொள்கிறது. டெங்குவின் அறிகுறிகளில், திடீரென்று அதிக-அளவு காய்ச்சல் தோன்றுவது, கடுமையான தலைவலி, வாந்தி, கண்களுக்குப் பின்புறம் வலி, மூட்டு வலி, அதீத களைப்பு, உடல் வலி, பசியின்மை மற்றும் உடல் அரிப்பு ஆகியவை அடங்கும். காய்ச்சல் மற்றும் மற்ற அறிகுறிகள் வழக்கமாக, ஒரு வார அளவிற்கு நீடிக்கும் பொழுது, அதனுடன் இணைந்த பலவீனம் மற்றும் பசியின்மை பல வாரங்களுக்கு நீடிக்கலாம்.
தற்சமயம் டெங்கு காய்ச்சலுக்கு, தனிப்பட்ட வைரஸ் எதிர்ப்பு சிகிச்சை இல்லை. காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகள், திரவ மாற்று மற்றும் படுக்கையில் ஓய்வு போன்ற உதவுகின்ற கவனிப்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன. சிக்கல்கள், சிகிச்சையளிக்காமல் விட்டால், டெங்கு அதிர்ச்சி நோயாக வளரக் கூடிய, இரத்தப்போக்கு டெங்கு காய்ச்சலை உள்ளடக்கியவையாகும்.