சைட்டோமெகல்லோவைரஸ் தொற்றுநோய் (சிஎம்வி) - Cytomegalovirus Infection (CMV) in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

November 30, 2018

July 31, 2020

சைட்டோமெகல்லோவைரஸ் தொற்றுநோய்
சைட்டோமெகல்லோவைரஸ் தொற்றுநோய்

சைட்டோமெகல்லோவைரஸ் தொற்றுநோய் (சிஎம்வி) என்றால் என்ன?

சைட்டோமெகல்லோவைரஸ் தொற்றுநோய் (சிஎம்வி) என்பது ஹெர்பெஸ் குழு வைரஸ்களை சார்ந்த ஒரு வைரசினால் ஏற்படும் தொற்றுநோய் ஆகும். இந்த வைரஸானது குளிர் புண்கள், தொற்று மோனோநுக்லியோசிஸ் மற்றும் சின்னம்மை/ அக்கி ஆகியவற்றை ஏற்படுத்தும் அதே வகை வைரஸ்களை சார்ந்தது. இந்திய மக்கள் தொகையில் சிஎம்வி ஆன்டிபாடிகளின் இருப்பு 80% முதல் 90% வரை உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இது பொதுவாக வளர்ந்த மற்றும் வளர்ந்துகொண்டிருக்கும் நாடு என இருவகை நாடுகளிலும் காணப்படுகிறது. இதை பின்வருமாறு பிரிக்கப்படலாம்:

  • ஈட்டிய சிஎம்வி நோய்த்தொற்று.
  • பிறவியிலிருந்தே இருக்கும் சிஎம்வி நோய்த்தொற்று.
  • பிந்தைய உள்விரவல் நோய்க்குறி (போஸ்ட்பெர்ஃபியூஸன் சின்ட்ரோம்)

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

பெரும்பாலான நோயாளிகளுக்கு எந்த அறிகுறிகளும் ஏற்படுவதில்லை. அப்படி அறிகுறிகள் ஏற்பட்டாலும், அவை அதன் வகை மற்றும் தீவிரத்தில் வேறுபட்டிருக்கின்றன. சில தீவிரமான சமயங்களில், குழந்தைகள் குறைவான பிறப்பு எடை, காய்ச்சல், மஞ்சள் காமாலைகளுடன் கூடிய ஹெபடைடிஸ் மற்றும் இரத்த சோகை வெளிப்பாடுகள் போன்ற குறைபாடுகளை கொண்டிருக்கலாம். கவனிக்கப்பட வேண்டிய பல்வேறு அறிகுறிகள் பின்வருமாறு:

  • குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய அறிகுறிகள்:
    • குறைப்பிரசவம்.
    • கண் மற்றும் தோல் மஞ்சள் நிறமாக
      மாறுதல்.
    • விரிவடைந்த கல்லீரல்.
    • ஊதா இணைப்புகள் அல்லது சொறி.
    • இயல்பற்ற சிறிய தலை.
    • மண்ணீரல் பெருக்கம்.
    • நிமோனியா (நுரையீரல் அழற்சி).
    • வலிப்பு.
  • எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்திருக்கும் போது:
    • கண்கள், நுரையீரல், கல்லீரல், உணவு குழாய், வயிறு, குடல் மற்றும் மூளை போன்ற அனைத்துப் பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
  • பெரியவர்களுக்கு எற்படும் அறிகுறிகள்:

இதன் முக்கிய காரணங்கள் என்ன?

மனித சைட்டோமெகல்லோவைரஸ்களே இதன் முக்கிய காரணிகள் ஆகும், இவை உமிழ்நீர் சுரப்பி வைரஸ்கள் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ்கள் ஒருமுறை உடலில் நுழைந்தால், பல வருடங்கள் உடலிலேயே செயலற்று தங்கும் மற்றும் அதனால் மீண்டும் உயிர்பெற்று செயல்படவும் முடியும். இந்த வைரஸ்கள் மிக எளிதில் தீவிரப் பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியது, குறிப்பாக நோயெதிர்ப்பு திறனற்ற நோயாளிகளை பாதிக்கக்கூடியது. ஆரம்பக்காலத்திலும் அதற்கு பிறகு தொடர்ந்து ஏற்படும் தொற்றுகளாலும் இந்த வைரஸ்கள் கருவுக்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது. முதன்மையாக கருவுக்கு பரிமாற்றமாகும் வைரஸ்களினால் ஏற்படும் நோய்த்தொற்று, மறுமுறை உயிர்பெறும் வைரஸ்களால் ஏற்படக்கூடிய தொற்றை விட மிகுந்த ஆபத்தை விளைவிக்கக்கூடியது. இந்த தொற்றின் தனிச்சிறப்பு என்பது வைரஸ்கள் அதன் சுழற்சிகேற்ப சிலகாலம் செயலற்று மீண்டும் உயிர்பெறுவதே ஆகும்.

உடலில் இருக்கும் திரவங்களில் இந்த வைரஸ் பரவுவதனால் ஏற்படும் தொற்றுகள் பின்வருமாறு:

  • உமிழ்நீர்.
  • சிறுநீர்.
  • இரத்தம்.
  • கண்ணீர்.
  • விந்து.
  • தாய்ப்பால்.

இதை கண்டறியும் முறைகள் மற்றும் சிகைச்சையளிக்கும் முறைகள் யாவை?

வழக்கமாக, முன்பு ஏற்பட்ட தொற்றின் தகவலை அறிந்துகொள்ளவோ அல்லது தொற்றின் காரணத்தை புரிந்துகொள்ளவோ நோயாளியின் மருத்துவ வரலாறு எடுக்கப்படுகிறது. அதற்காக மேற்கொள்ளப்படும் சோதனைகள் பின்வருமாறு:

  • இரத்த பரிசோதனை.
  • புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான உமிழ்நீர் அல்லது சிறுநீர் பரிசோதனை.

குறைந்த நோய்யெதிர்ப்பு சக்தி உடையவர்களுக்கு, ஹெச்.ஐ.வி தொற்றுக்கான சோதனை மேற்கொள்ளப்படலாம்.

பொதுவாக, தனிநபர்களுக்கு மருந்துகள் தேவைபடுவதில்லை. பெரும்பாலும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கே மருந்துகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. அறிகுறிகளைக் கையாள வைரல் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்படலாம். பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து வெளியேறும் திரவங்களினால் ஏற்படும் தொடர்பை தவிர்ப்பதால் தொற்றின் பரிமாற்றத்தினால் விளையும் ஆபத்தை தவிர்க்கலாம்.

தடுப்பு நடவடிக்கைகள்:

  • நல்ல தரம்வாய்ந்த ஹாண்ட் வாஷ் அல்லது சோப்பை உபயோகிக்க பழக்கப்படுத்துவதன் மூலம் கை சுகாதாரத்தை பராமரிக்கலாம்.
  • கண்ணீர் அல்லது உமிழ்நீர் போன்ற உடலில் சுரக்கும் திரவங்களின் தொடர்பை தவிர்க்க வேண்டும்.
  • உணவுப்பொருட்கள் மற்றும் பாத்திரங்களை பகிர்தல் அல்லது மற்றவர் பயன்படுத்திய அதே க்ளாசில் தண்ணீர் அருந்துதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
  • உடலில் உற்பத்தியாகும் கழிவுகள் மற்றும் அசுத்தமான பொருட்களை முறையாக அகற்றுவதில் உறுதிக் கொள்தல்.
  • குழந்தையின் பொம்மைகளை சுத்தமாக வைத்திருத்தல். குழந்தையின் உமிழ்நீர் அல்லது சிறுநீர் போன்றவைகளோடு தொடர்பு கொண்டிருக்கும் மேற்பரப்புகளை சுத்தபடுத்ததல்.
  • பாதுகாப்பான உடலுறவு பழக்கத்தை மேற்கொள்தல்.



மேற்கோள்கள்

  1. Mahadevan Kumar et al. Seroprevalence of cytomegalovirus infection in antenatal women in a Tertiary Care Center in Western India. Marine Medical Society of India; Year : 2017 Volume : 19 Issue : 1 Page : 51-54
  2. National institute of neurological disorders and stroke [internet]. US Department of Health and Human Services; Neurological Consequences of Cytomegalovirus Infection Information
  3. National Organization for Rare Disorders, Cytomegalovirus Infection. Danbury; [Internet]
  4. U.S. Department of Health & Human Services. About Cytomegalovirus (CMV). Centre for Disease Control and Prevention
  5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Cytomegalovirus Infections

சைட்டோமெகல்லோவைரஸ் தொற்றுநோய் (சிஎம்வி) க்கான மருந்துகள்

Medicines listed below are available for சைட்டோமெகல்லோவைரஸ் தொற்றுநோய் (சிஎம்வி). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.